பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Saturday, July 17, 2010

நாராயணா வென்னும் நாமம்




ஓம் நமோ நாராயணாய!

திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களை பெரிய திருமொழி என்று அழைக்க படுகிறது,

பெரிய திருமொழி முதல் பத்து
948
வாடினேன்: வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன்: கூடியிளையவர்த் தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன்: ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம். (2) 1.1.1

விளக்கம்:-
வாடினேன் வாடி வாடி. ரொம்பவும் வருந்தினேன். அவ்ளோ மனசுல வருத்தம்.
இந்த உலகத்தில் பிறந்து அதில் ஊறினேன்.
கூடினேன் பொண்ணுங்க தரும் சுகத்தையே பெரிசா நினைத்து அதை தேடியே ஓடினேன்.
அப்புறம்தான் இந்த உலகத்தில் நன்மை தீமைகளை ஆராய தொடங்கினேன்.
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்


949
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.2

விளக்கம்:-
ஆவியே! அமுதே என்று பொண்ணுங்கள(பிகர்) நினைச்சு உருகி
அவர்களின் பெரிய முலையே துணையா எண்ணினேன்.
பாவி உணராததால் இத்தனை நாட்கள்
சுத்தமா ஒழிஞ்சி போச்சு.(வேஸ்டாபோச்சு)
அன்னபறவை தன் துணையோடு வாழும் ,
நிறைய நீர் வளம் உள்ள திரு குடந்தை (கும்பகோணம்)
சாரங்கபாணி ஆராவமுது பெருமாளை வழிப்பட்டு ,
வாய் திறந்து சொல்லும் படியாக நான் கண்டு கொண்டேன்.
நாராயணா என்னும் நாமம்.


950
சேமமேவேண்டித் தீவினைபெருக்கித்
தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்
ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள்
தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம் நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.3

விளக்கம்:-
நல்லா இருக்கணும்னு தீமைகளை நிறைய செய்து ,
பொண்ணுங்க உடல் அழகையே ரசித்து இருந்தேன்.
ஊமை கண்ட கனவு போல வீணாக ஒழிந்தது அந்த நாட்கள்.
காமனுக்கு அப்பா , நம்ம தலைவர் ,
தம்மிடம் சரணடைந்தவர்களின் மனசுல குடி இருப்பார் .
அப்பேற்பட்டவரின் நாமம் வாய் திறந்து சொல்லும் படியாக நான் கண்டுகொண்டேன்.
நாராயணா என்னும் நாமம்.


951
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.4

விளக்கம்:-
வெற்றி ஒன்றையே விரும்பி , அழியும் பொருள்களுக்காக ஆசைப்பட்டு இரங்கி,
அழகான கண்கள் உடைய பெண்கள் தரும் சுகத்தையே விரும்பி ,
மனசு ஒரே இடத்துல நிலையாக இல்லாத நெஞ்சை உடைவனப்பா நான்! இனி நான் என்ன செய்வது என்று தவித்து கொண்டிருக்கையில், வானம் அளவுக்கு உயர்ந்த திருமேனி உடையவன் , பன்றி (வராக) உருவம் எடுத்தவன் , சக்கரத்தை கையிலே கொண்டு இருப்பவனின் அருளால் , நல்லா வாய் திறந்து சொல்லும் படியாக நான் கண்டு கொண்டேன் .
நாராயணா என்னும் நாமம்.



952
கள்வனேனானேன் படிறுசெய்திருப்பேன்
கண்டவா திரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன் செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத் திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம் கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.5

விளக்கம்:-
ஐயோ! நான் திருடனாவே மாறி பல தப்புங்க செஞ்சிட்டேன்.
கண் போன போக்கிலே ஊற சுத்திக்குனு இருந்தேன். ஆனாலும் பாத்தீங்களா இன்று நான் தெளிவாகி விட்டேன் . நல்ல வழிகளில் செல்ல முடிவெடுத்த உடனே பெருமாளின் திருவருளும் பெற்றேன்.
உள்ளமெல்லாம் உருகி குரல் தழுதழுக்க , உடம்பெல்லாம் ஆனந்த கண்ணீரில் நனைய , நள்ளிருள் அளவும் , பகலும் நான் அழைப்பேன்
நாராயணா என்னும் நாமம்.


953
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்,
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்,
வம்புலாஞ்fசோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி,
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். (2) 1.1.6

விளக்கம்:-
எம்பிரான் என்னுடைய தந்தை , என்னுடைய சொந்தம் ,
எனக்கு ராசா , என்னுடைய வாழ்நாளே அவருதான் ,
அம்பை விட்டு அரக்கர் குலத்தையே வேரோடு அழித்த என் அண்ணல்!
அழகான சோலைகள் , பெரிய மதில்கள் உடைய
தஞ்சாவூர் மாமணி கோவிலையே வணங்கி ,
அடியோர்களே! நாவினால் சொல்ல நான் கண்டு கொண்டேன்.
நாராயணா என்னும் நாமம்.


954
இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்
இன்னதோர்த்தன்மையென்றுணரீர்,
கற்பகம்புலவர்களைகணென்றூலகில்
கண்டவாதொண்டரைப்பாடும்,
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்
சூழ்புனற்குடந்தையேதொழுமின்,
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்
நாராயணாவென்னும்நாமம். 1.1.7

விளக்கம்:-
இல்லற வாழ்க்கையின் குடி பிறப்பை அறியமாட்டீர்!
இவர் அவர் என்றும் எண்ணமாட்டீர்!
இந்த பொருளுக்கு இந்த தன்மை என்றும் உணரமாட்டீர்!
கற்பகமே! புலவர்களை காப்பவரே!
என்று சொல்லும் பொருளும் சேராதவாறு கண்ணில் பட்ட தொண்டரை பாடும் திறமையுடைய கவிகள் ஒன்று சொல்கிறேன்!இங்கே வாங்க!
நான் சொல்வதை கேட்பீங்களா! நிறைய நீர் வளம் உடைய திருகுடந்தை (கும்பகோணம்) சாரங்கபாணி ஆராவமுது பெருமாளை வழிபடுங்கள்!
அப்புறம் நடப்பதை பாருங்கள்! நீங்கள் நல்பொருள் பாப்பீங்க!
நீங்களும் நாவினால் பாடி பரவசபடுவீர்கள் !
நாராயணா என்னும் நாமம்


955
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.8

விளக்கம்:-
கலைகளை கற்றவன் இல்லை! ஐம்புலன்கள் தரும் ஆசையில் மனதை செலுத்தினேன்!
இப்படி அறிவுகெட்ட தனமா இருந்ததால ஒரு நன்மையையும் பெறவில்லை!
உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தீமைகளை செய்து பொழுது போக்கி ஊற சுத்திக்கினு இருந்தேன். இப்படியெல்லாம் நான் செய்வதை பிறகு நிறுத்தினேன்.
நல்ல வழிக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு
நல்ல துணையை பற்றி கொண்டேன் அடியேன்!
நாராயணா என்னும் நாமம்!


956
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். (2) 1.1.9

விளக்கம்:-
நல்ல சொந்தங்களை தரும் , நிறைய செல்வம் கொடுக்கும்.
நம்ம கஷ்டங்களை தரை மட்டமாக்கும் . பரமபதத்தை கொடுக்கும் (அதாம்பா மோட்சம் வைகுண்டம் சொல்றாங்களே பெருமாள் இருக்குமிடம் ) , நமக்கு நல்ல அருளோடு தொண்டு செய்யும் வாய்ப்பையும் கொடுக்கும் . சும்மா ஆஞ்சநேயர் போல வலிமையை கொடுக்கும் . நல்லது எல்லாமே கொடுக்கும் .அட நம்ம பெற்ற அம்மாவை விட அதிக பாசம் பரிவு இன்னும் நிறைய செய்யும் . (அட இதெல்லாம் யாருப்பா செய்யறது! வேற யாரு இதோ)
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.

957
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார்வாள்ff கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்fமாலை
இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.10

விளக்கம்:-
மேகங்கள் சுற்றி கொண்டிருக்கும் சோலைகள்,
வண்டுகள் சவுண்ட் விடும் நிறைய வளங்களையும் கொண்ட
திருமங்கை நாட்டு மன்னன் ஒளி வீசும் வாளை உடைய கலிகன்றி!
இனிய சொற்களால் தொடுத்த தெய்வ மாலையை,
தொண்டர்களே டக்குனு பிடிசிக்குங்க!
தூக்கத்திலே கூப்பிடுங்க! மனசுல கஷ்டம் இருந்தா நினையுங்கள்!
துயரம் இல்லீனா வாயை திறந்து சொல்லுவதும் மிக நன்று!
இதெல்லாம் விஷம்தான் தெரியுமா நம்மளோட வினைக்கு,
நாராயணா என்னும் நாமம்!

18 comments:

Unknown said...

ஓம் நமோ நாராயணாய!

sury siva said...

ஸ்ரீமன் நாராயணா பாடல் பெளளி ராகத்தில் அன்னமாச்சாரியா பாடியதை, ஆச்சரியப்படும் விதத்தில்
தமிழாக்கம் செய்திருக்கிறார் கண்ணபிரான். அதைப்பார்த்து பாடாமல் இருக்க முடியுமோ !
நாராயணா ! நாராயணா !
அதுதான் பாடிவிட்டேன்.
நீங்கள் என் வலைப்பதிவுக்கு வந்து பின்னூட்டம் போட இயலவில்லையே என வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள்.
உங்கள் பதிவுக்கு வந்து நீங்கள் போட்டிருக்கும் பெரிய திருமொழி பாடலையும்
பூபாள ராகத்தில் பாடி இருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில்
என் வலையில் பார்க்கலாம். கேட்கலாம்.
உங்கள் வலை பக்தி மார்க்கம் காட்டுகிறது.
அடிக்கடி வருவேன்.

சுப்பு தாத்தா.
http://menakasury.blogspot.com

தக்குடு said...

ஓம் நமோ நாராயணாய!


Regards,
Thakkudu

In Love With Krishna said...

Om Namo Narayana!

Nice post!

//காமனுக்கு அப்பா , நம்ம தலைவர் //

Indha line Krishnar Pradyumnan-in appa endru kurikudha,: appadi illai-nna andha line-la irukkira artham enna?

நாடி நாடி நரசிங்கா! said...

கருத்துக்கு மிக்க நன்றி விஜயா & தக்குடு பாண்டி

நாடி நாடி நரசிங்கா! said...

sury said...
பின்னூட்டம் போட இயலவில்லையே என வருத்தப்பட்டு எழுதியிருக்கிறீர்கள்:))

பரவாயில்லை தாத்தா வருத்தம் இல்லை!
------------------
பெரிய திருமொழி பாடலையும்
பூபாள ராகத்தில் பாடி இருக்கிறேன்::)))


திருமங்கை ஆழ்வார் இந்த பாசுரத்தை பாடலா பாடுறீங்களா! நன்னா இருக்குமே!
மிக்க நன்றி!

நாடி நாடி நரசிங்கா! said...

In Love With Krishna said...

//காமனுக்கு அப்பா , நம்ம தலைவர் //

Indha line Krishnar Pradyumnan-in appa endru kurikudha,: appadi illai-nna andha line-la irukkira artham enna?::))


காமனுக்கு தந்தை என்றவுடன் முதலில் யோசித்தேன். அதற்கு விடை உங்கள் மூலமாக பெற்றேன்.
பிரத்யும்னன் தந்தை கிருஷ்ணர் நீங்கள் கூறியது சரியாதான் இருக்கும் என்று நினைக்கிறேன்!
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி!

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing
om namo naaraayanaaya

நாடி நாடி நரசிங்கா! said...

ராம்ஜி_யாஹூ said...
thanks for sharing
om namo naaraayanaaya
:))))


thanks raamji

ஜோதிஜி said...

இது போன்ற பாடல்களை வலைதளத்தில யாராவது வைத்து இருப்பார்களா என்று யோசித்தது உண்டு. துளசிதளம் மூலம் உள்ளே வந்தேன். வாழ்க நீங்கள்.

நாடி நாடி நரசிங்கா! said...

ஜோதிஜி said...
இது போன்ற பாடல்களை வலைதளத்தில யாராவது வைத்து இருப்பார்களா என்று யோசித்தது உண்டு:)))

o!
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!

jagadeesh said...

கிருஷ்ணரின் மனைவிகள் பூமாதேவி, மகாலட்சுமி
எனக்கு குழப்பம் என்ன வென்றால் இதில் யார் ஆண்டாள், மகாலட்சுமி, பாமா, ருக்மணி. தெளிவு படுத்துங்கள்.

நாடி நாடி நரசிங்கா! said...

வணக்கம் jagadeesh

ஆண்டாள் பூமாதேவியின் அம்சம்

கிருஷ்ணனுக்கு பாமா, ருக்மணி மனைவியர்

பெருமாள் மனைவி மகாலட்சுமி . பெருமாள் அவதாரம் எடுக்கும் போதெல்லாம் தன் பங்குக்கு மகாலட்சுமியும் வருவாங்க!
ராம அவதாரத்தில் சீதையாக , கிருஷ்ணா அவதாரத்தில் பாமா ருக்மணி முதலானோர்,

Anonymous said...

click and read the link


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

...........

நாடி நாடி நரசிங்கா! said...

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.
...........:)))

வணக்கம்,

மதமா? அப்படின்னா!
மதம் மொழி இனம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் இறைவன் .
----
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே
நம்மாழ்வார்!

VENKAT said...

OM NAMO NARAYANA

நாடி நாடி நரசிங்கா! said...

மிக்க நன்றி Mr. வெங்கட்

Iniya said...

மிக்க நன்றி! பாடி மகிழ்ந்தேன்பரந்தாமனை எண்ணி இப்படி இருக்காதா என்று தேடினேன். கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியே வாழ்த்துக்கள்....!