பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Friday, November 23, 2012

SRI NARASIMMA PHOTOS


Thanks to Murpriya.blogspot
Tuesday, June 19, 2012

பதிவுகளை தொடரும் அன்பு உள்ளங்களுக்குApril 25th  பெருமாளின் ஆசியுடன்  திருமணம் ஆகியிருப்பதால் கொஞ்சம் வேலையாக உள்ளேன். 

கூடிய விரைவில் பெருமாள் அருளால் பதிவுகள் வெளிவரும் 
ஸ்ரீ ராம ஜெயம் 

Monday, January 30, 2012

கோவிந்தராஜ பெருமாள் பாசுரங்களை பாடுபவர்களுக்கு தீய வினைகளே சேராது !


1177
தேன் அமர் பூம்பொழில் தில்லைச்* சித்திரகூடம்  அமர்ந்த*
வானவர் தங்கள் பிரானை* மங்கையர் கோன் மருவார் தம்* 
ஊன் அமர் வேல் கலிகன்றி* ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*
தான் இவை கற்று வல்லார் மேல்* சாரா தீவினை தானே* 3.3.10

விளக்கம்:-
தேன் நிறைந்திருக்கும் பூஞ்சோலைகள் சூழ்ந்த தில்லை எனப்படும் 
சிதம்பரம் சித்திரகூடத்தில் தரிசனம் தரும் வானவர்களுக்கும் இறைவனை, திருமங்கை மன்னனும்  எதிரிகள் உடலை தைக்கும் வேலையுடையவனுமான கலிகன்றி அழகிய தமிழில் பாடிய இப்பத்தையும் கற்று சொல்ல வல்லவர்கள் மேல் தீய வினைகள் சேரவே சேராது. 

மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
தேன் அமர் பூம்பொழில் தில்லைச் – தேன் நிறைந்த பூஞ்சோலைகள் (உடைய) தில்லைச் 

சித்திரகூடம்  அமர்ந்த - சித்திரகூடத்தில் தரிசனம் தருகின்ற 

வானவர் தங்கள் பிரானை - வானவர் தங்கள் இறைவனை 

மங்கையர் கோன் மருவார் தம் - திருமங்கை மன்னன் எதிரிகள் தம்
ஊன் அமர் வேல் கலிகன்றி - உடலில் தைக்கும் வேலையுடைய கலிகன்றி 

ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் - அழகிய தமிழ் ஒன்பதோடு ஒன்று
தான் இவை கற்று வல்லார் மேல் - தான் இவை கற்று வல்லவர்கள் மேல் 
சாரா தீவினை தானே - சேராது தீய வினைகள் தானே மூலவர் :- கோவிந்தராஜன் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்)
உற்சவர்:-  தேவாதி தேவன்         
அம்மன்/தாயார்:- புண்டரீக வல்லி தாயார் 
மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 32 பாசுரம்       
                                குலசேகர ஆழ்வார்:- 11 பாசுரம்       
              
புராண பெயர் :- தில்லைவனம், திருச்சித்திரகூடம் 
தற்போதைய பெயர்:-  சிதம்பரம் 

பெருமாளை தரிசிக்க போகும் வழி:- 
India – Tamilnadu -  சிதம்பரம் சென்று நடராஜர் கோவில் எங்கு இருக்கிறதுJ என்று கேட்டாலே சொல்லிவிடுவார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலேயே இக்கோயில் அமைந்திருக்கிறது. தரிசிக்க வேண்டிய அற்புதமான ஆலயம்..

கோவிந்தராஜ பெருமாள் திவ்ய திருவடிகளே சரணம்!
கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!

Saturday, January 21, 2012

ஒரு மகள் ஆயர் பெண் , ஒருத்தி ஆண்டாள் , இன்னொருவர் மகாலட்சுமி இவர்களோடு வருபவன் சித்திரகூடத்தில் உள்ளானே !


1176
கரு முகில் போல்வது ஓர் மேனி* கையன ஆழியும் சங்கும்* 
பெரு விறல் வானவர் சூழ* ஏழ் உலகும் தொழுது ஏத்த*
ஒரு மகள் ஆயர் மடந்தை* ஒருத்தி நிலமகள்* மற்றைத் 
திரு மகளோடு வருவான்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.9

விளக்கம்:-
கரிய மேகம் போன்ற நிறத்துடன் கையில் சங்கும் சக்கரமும் வைத்து கொண்டு இருப்பவனை, மிகுந்த வலிமையான வானவர்கள் சூழ ஏழு உலகமும் தொழுது வழிபடவும், நீளா தேவி, பூமா தேவி, மகாலட்சுமி இவர்களோடும் வருபவன் சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!

மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
கரு முகில் போல்வது ஓர் மேனி - கரிய மேகம் போல திருமேனியும் 
கையன ஆழியும் சங்கும் - கையில் சக்கரமும் சங்கும் 

பெரு விறல் வானவர் சூழ - மிகுந்த வலிமையான வானவர்கள் சூழ 
ஏழ் உலகும் தொழுது ஏத்த - ஏழு உலகமும் தொழுது வழிபடவும் 

ஒரு மகள் ஆயர் மடந்தை - ஒரு மகள் நீளா தேவி பெண்ணும் 

ஒருத்தி நிலமகள்  - ஒருத்தி பூமி தேவியும் 

மற்றைத் திரு மகளோடு வருவான் - மற்றொருவள் மகாலட்சுமியோடு கூட வருபவன் 

சித்திரகூடத்துள்ளானே – சித்திரகூடத்துள்ளானே

Wednesday, January 4, 2012

இரண்டு கண்களும், நீண்ட கூரான பற்களும், பெரிய வாயும் கொண்டு சிங்க உருவில் வருபவனான நம்பெருமான் சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே!

1175
பொங்கி அமரில் ஒரு கால்* பொன் பெயரோனை வெருவ*
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு* ஆயிரம் தோள் எழுந்து ஆட* 
பைங்கண் இரண்டு எரி கான்ற* நீண்ட எயிற்றோடு பேழ் வாய்ச்*
சிங்க உருவின் வருவான்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.8

விளக்கம்:-
முன்  ஒரு காலத்தில் தூணிலிருந்து வெளிவந்து இரணியனுடன் நடந்த போரில் கோபம் பொங்கி இரணியன் பயப்படும்படி அவன் மார்பில் கூரிய நகங்களாலே அழுத்தி அரக்கனை அழித்த அண்ணல், ஆயிரம் கைகளும் எழுந்து ஆட, நெருப்பு உமிழ்வது போன்று  பசுமையான இரண்டு கண்களும், நீண்ட கூரான பற்களும், பெரிய வாயும் கொண்டு சிங்க உருவில் வருபவனான நம்பெருமான் சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!


மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
பொங்கி அமரில் ஒரு கால் -  (கோபம்) பொங்கி போரில் ஒரு காலத்தில்
பொன் பெயரோனை வெருவ - இரணியன் பயப்படும்படி 
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு - அங்கு (தூணில் தோன்றி) அவன் மார்பை  (நகங்களாலே) அழுத்தி 

ஆயிரம் தோள் எழுந்து ஆட - ஆயிரம் கைகளும் எழுந்து ஆட 

பைங்கண் இரண்டு எரி கான்ற - பசுமையான கண்கள் இரண்டும் நெருப்பு உமிழ்வது (போன்றும்) 

நீண்ட எயிற்றோடு பேழ் வாய்ச் - நீண்ட கூரான பற்களும் பெரிய வாயும் (கொண்டு)

சிங்க உருவின் வருவான் - சிங்க உருவில் வருபவன் 

சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே 


அருமையான பாசுரத்தில் வரும் கதை 
"பிரகலாதனை காத்த பெருமாள்"
 இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தான். பிரகலாதன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான்.

இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி  தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். ஒரு சமயத்தில் பள்ளி பாடத்தை முடித்து வந்த மகன் ஸ்ரீ ஹரி நாமம் சொல்வதை பார்த்த பிரகலாதன் மிகுந்த கோபம் கொண்டு எங்கேடா இருக்கிறான் ஹரி என்று கேட்க, அவன் எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூறினான்.

உடனே  இரணியன் இந்த தூணில் இருப்பானா!!!!  என்று வெகுண்டெழுந்து  தூணை தட்ட, அங்கே அப்பொழுதே பரம்பொருளான ஸ்ரீமன் நாரயணன் சிம்ம முகமும் மானிட உருவமும் கலந்த நரசிம்ம உருவத்தில் தூணை பிளந்து வந்து இரணியனை அழித்தார். பிரகலாதனுக்கு நல் அருள் கொடுத்தார். பிரகலாதன் பக்தியை போன்றே நாமும் ஸ்ரீமன் நாராயணின் மேல் பக்தியோடு இருக்க ஸ்ரீமன் நாராயணனை வேண்டுவோம். அவர் நமக்கு நிச்சயம் நல் அருள் கொடுப்பார்.