பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Monday, January 30, 2012

கோவிந்தராஜ பெருமாள் பாசுரங்களை பாடுபவர்களுக்கு தீய வினைகளே சேராது !


1177
தேன் அமர் பூம்பொழில் தில்லைச்* சித்திரகூடம்  அமர்ந்த*
வானவர் தங்கள் பிரானை* மங்கையர் கோன் மருவார் தம்* 
ஊன் அமர் வேல் கலிகன்றி* ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும்*
தான் இவை கற்று வல்லார் மேல்* சாரா தீவினை தானே* 3.3.10

விளக்கம்:-
தேன் நிறைந்திருக்கும் பூஞ்சோலைகள் சூழ்ந்த தில்லை எனப்படும் 
சிதம்பரம் சித்திரகூடத்தில் தரிசனம் தரும் வானவர்களுக்கும் இறைவனை, திருமங்கை மன்னனும்  எதிரிகள் உடலை தைக்கும் வேலையுடையவனுமான கலிகன்றி அழகிய தமிழில் பாடிய இப்பத்தையும் கற்று சொல்ல வல்லவர்கள் மேல் தீய வினைகள் சேரவே சேராது. 

மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
தேன் அமர் பூம்பொழில் தில்லைச் – தேன் நிறைந்த பூஞ்சோலைகள் (உடைய) தில்லைச் 

சித்திரகூடம்  அமர்ந்த - சித்திரகூடத்தில் தரிசனம் தருகின்ற 

வானவர் தங்கள் பிரானை - வானவர் தங்கள் இறைவனை 

மங்கையர் கோன் மருவார் தம் - திருமங்கை மன்னன் எதிரிகள் தம்
ஊன் அமர் வேல் கலிகன்றி - உடலில் தைக்கும் வேலையுடைய கலிகன்றி 

ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் - அழகிய தமிழ் ஒன்பதோடு ஒன்று
தான் இவை கற்று வல்லார் மேல் - தான் இவை கற்று வல்லவர்கள் மேல் 
சாரா தீவினை தானே - சேராது தீய வினைகள் தானே மூலவர் :- கோவிந்தராஜன் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்)
உற்சவர்:-  தேவாதி தேவன்         
அம்மன்/தாயார்:- புண்டரீக வல்லி தாயார் 
மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 32 பாசுரம்       
                                குலசேகர ஆழ்வார்:- 11 பாசுரம்       
              
புராண பெயர் :- தில்லைவனம், திருச்சித்திரகூடம் 
தற்போதைய பெயர்:-  சிதம்பரம் 

பெருமாளை தரிசிக்க போகும் வழி:- 
India – Tamilnadu -  சிதம்பரம் சென்று நடராஜர் கோவில் எங்கு இருக்கிறதுJ என்று கேட்டாலே சொல்லிவிடுவார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலேயே இக்கோயில் அமைந்திருக்கிறது. தரிசிக்க வேண்டிய அற்புதமான ஆலயம்..

கோவிந்தராஜ பெருமாள் திவ்ய திருவடிகளே சரணம்!
கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!

No comments: