பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Saturday, January 21, 2012

ஒரு மகள் ஆயர் பெண் , ஒருத்தி ஆண்டாள் , இன்னொருவர் மகாலட்சுமி இவர்களோடு வருபவன் சித்திரகூடத்தில் உள்ளானே !


1176
கரு முகில் போல்வது ஓர் மேனி* கையன ஆழியும் சங்கும்* 
பெரு விறல் வானவர் சூழ* ஏழ் உலகும் தொழுது ஏத்த*
ஒரு மகள் ஆயர் மடந்தை* ஒருத்தி நிலமகள்* மற்றைத் 
திரு மகளோடு வருவான்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.9

விளக்கம்:-
கரிய மேகம் போன்ற நிறத்துடன் கையில் சங்கும் சக்கரமும் வைத்து கொண்டு இருப்பவனை, மிகுந்த வலிமையான வானவர்கள் சூழ ஏழு உலகமும் தொழுது வழிபடவும், நீளா தேவி, பூமா தேவி, மகாலட்சுமி இவர்களோடும் வருபவன் சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!

மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
கரு முகில் போல்வது ஓர் மேனி - கரிய மேகம் போல திருமேனியும் 
கையன ஆழியும் சங்கும் - கையில் சக்கரமும் சங்கும் 

பெரு விறல் வானவர் சூழ - மிகுந்த வலிமையான வானவர்கள் சூழ 
ஏழ் உலகும் தொழுது ஏத்த - ஏழு உலகமும் தொழுது வழிபடவும் 

ஒரு மகள் ஆயர் மடந்தை - ஒரு மகள் நீளா தேவி பெண்ணும் 

ஒருத்தி நிலமகள்  - ஒருத்தி பூமி தேவியும் 

மற்றைத் திரு மகளோடு வருவான் - மற்றொருவள் மகாலட்சுமியோடு கூட வருபவன் 

சித்திரகூடத்துள்ளானே – சித்திரகூடத்துள்ளானே

4 comments:

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
அற்புதமான படங்கள்.
மிக்க நன்றி.

அப்பாதுரை said...

யார் நீளாதேவி?

நாடி நாடி நரசிங்கா! said...

அப்பாதுரை ஐயா! வணக்கம்
இந்த எளியவன் இதை சொல்வதை விட நீளாதேவி யார் என்பதை பெரியவர்கள் ஆராய்ச்சியே செய்து உள்ளனர்


இங்கே கிளிக் செய்யுங்கள்

நாடி நாடி நரசிங்கா! said...

ரத்னவேல் ஐயா! வணக்கம்
தங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்
மிக்க நன்றி :)