1173
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்*
உய்யப் பரு வரை தாங்கி* ஆ நிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போலே*
தெய்வப் புள் ஏறி வருவான்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.6
விளக்கம்:-
ஸ்ரீ ராமராக பிறந்து கொடிய அரக்கன் இரணியனையும் அவன் ஊரான இலங்கையையும் அம்புகள் விடுத்து சிதைத்ததோடு மட்டுமல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணனாக பிறந்து கொடிய மழையிலிருந்து ஆயர்பாடியில் பசு கூட்டங்களையும் மக்களையும் காப்பதற்காக பெரிய மலையை தூக்கி
குடையாக பிடித்து காத்தவன் என்று போற்றி உலகத்தில் உள்ளோர் அனைவரும்
வணங்க தெய்வாம்சம் கொண்ட பெரிய மலை எழுந்து வருவது போல தெய்வமான
கருட பறவை மேலே ஏறி வருபவன் சிதம்பரம் எனப்படும்
தில்லை சித்திரகூடத்துள்ளானே!
மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
எய்யச் சிதைந்தது இலங்கை - (திரு ராமராக அவதரித்து சரமாரியாக அம்பை) செலுத்தியதால் சிதைந்தது இலங்கை (அதுமட்டுமின்றி)
மலங்க வரு மழை காப்பான் - (திரு கிருஷ்ணனாக அவதரித்து ஆயர்பாடியில் உள்ளவர்கள்) துன்பப்படும்படி வந்த மழையை தடுப்பதற்காக
உய்யப் பரு வரை தாங்கி - (பசுக்கூட்டங்கள்) பிழைக்கவும் பெரிய மலையை தாங்கி
ஆ நிரை காத்தான் என்று ஏத்தி - பசுக்கூட்டங்கள் (முதற்கொண்டு அனைவரையும்) காத்தான் என்று போற்றி
No comments:
Post a Comment