1172
பருவக் கரு முகில் ஒத்து * முத்து உடை மா கடல் ஒத்து *
அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன் மலை ஒத்து *
உருவக் கருங்குழல் ஆய்ச்சி திறத்து* இன மால் விடை செற்று*
தெருவில் திளைத்து வருவான்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.5
விளக்கம்:-
மழைகாலத்தில் வரும் கரிய மேகம் போன்ற நிறமுடையவனும், முத்துகள் உடைய பெரிய கடலை போன்ற நீல நிறமுடையவனும், அருவிகள் கூட்டமாக திகழ்கின்ற ஆயிரம் பொன் மலையை போன்றவனும் ,அழகிய உருவத்துடன் கரிய கூந்தலையுடைய நப்பின்னையின் மேல் கொண்ட ஆசையால் ஏழு வலிமை வாய்ந்த பெரிய காளைகளை அடக்கி, தெருவில் ஆனந்தமாக வருபவன் சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே!
மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
அருவித் திரள் திகழ்கின்ற - அருவிகள் கூட்டமாக திகழ்கின்ற
ஆயிரம் பொன் மலை ஒத்து - ஆயிரம் பொன் மலையை போன்றவனும்
ஆயிரம் பொன் மலை ஒத்து - ஆயிரம் பொன் மலையை போன்றவனும்
உருவக் கருங்குழல் ஆய்ச்சி திறத்து - (அழகிய) உருவத்துடன் கரிய கூந்தல் (உடைய) நப்பின்னை மேல் ஆசை கொண்டு
தெருவில் திளைத்து வருவான் - தெருவில் ஆனந்தத்துடன் வருபவன்
சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
“ஏழு காளைகளை அடக்கிய எம்பெருமான்”
கண்ணன், யசோதையின் குழந்தையாக, ஆயர்பாடியில வளர்ந்துட்டு இருக்கும் போதே, அதாவது கண்ணன் சின்ன பாலகனா இருக்கும் போதே, யசோதையின் சகோதரனும், துவரைப்பதியின் மன்னனுமான கும்பன் என்பவரின் பொண்ணுதான் நப்பின்னை. கண்ணனின் வருங்கால மனைவின்னு சின்ன வயசுலேயே முடிவு செஞ்சுட்டாங்க.
நப்பின்னையும் கண்ணன் பால் காதல் கொள்கிறாள். ஆனா, நப்பின்னையோட அப்பா,ஒரு நிபந்தனை வைக்கிறார். தன்னிடம் உள்ள ஏழு அடங்காத முரட்டுக் காளைகளையார் அடக்குறாங்களோ! அவங்களுக்குத்தான் நப்பின்னையை மணம் முடித்துக் கொடுப்பேன்னு சொல்லிடறாரு.எத்தனையோ பேர் முயன்றும் முடியாமல் தோத்துப் போக, நம்ம மதுரைவீரன், மாயக்கண்ணன் வந்து ஏழு காளைகளையும் அடக்கி, தன் மாமாவின் மகளான நப்பின்னையைத் திருமணம் செய்து கொண்டார்.
3 comments:
உரையும் படங்களும் அழகாகக் கோர்த்த மாலை போலவே இருக்கிறது. ரசித்துப் படித்தேன். ஏழு காளை அடக்கும் படம் எங்கே பிடித்தீர்கள்? இப்பொழுது தான் முதல் முறை பார்க்கிறேன்.
Hi Wicket,
Thanks for your nice comments.
7 bulls picturs i found google serch only:)
hi, I noticed you had replied to a blogger query on the forum. I tried removing the followers widget & re installing it. And yet, my followers don't seem to get my updates. Can you please help me out?
Email me at chefkavi1990@gmail.com
Post a Comment