1174
ஆவர் இவை செய்து அறிவார்* அஞ்சன மா மலை போலே*
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து* அழகாய
காவி மலர் நெடுங்கண்ணார்* கை தொழ வீதி வருவான்*
தேவர் வணங்கு தண் தில்லைத்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.7
விளக்கம்:-
கண்ணனை தவிர யார் இந்த செயல்களை செய்வார்கள்!!! கரிய பெரிய மலை
போல மிகுந்த கோபத்துடன் தன்னை கொல்ல வந்த வலிமையான யானை மடியும்படி
வெகுண்டெழுந்து போர் செய்து கொன்றவனே! என்று சொல்லி அழகான நீல மலரை
போன்ற நீண்ட கண்களையுடைய பெண்கள் கை கூப்பி தொழும்படி வீதியில் வருபவன்
வெகுண்டெழுந்து போர் செய்து கொன்றவனே! என்று சொல்லி அழகான நீல மலரை
போன்ற நீண்ட கண்களையுடைய பெண்கள் கை கூப்பி தொழும்படி வீதியில் வருபவன்
தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே!
மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
மேவு சினத்து அடல் வேழம் - மிகுந்த கோபமுடைய வலிமையான யானை
அருமையான பாசுரத்தில் வரும் முதல் கதை
"கொல்ல வந்த யானை மற்றும் மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்"
கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான்.
சாணூரன், சலன் முதலிய மல்லர்களை அழைத்து, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மகன்களான கண்ணன், பலராமன் இவர்களால்தான் எனக்கு மரணம் என்று விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நான் ஏற்பாடு
செய்துள்ள மல்யுத்தத்திற்கு அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.
ஆனால் அதற்க்கு முன்பே கண்ணனை கொல்ல மேலும் ஒரு வழியை ஏற்பாடு செய்தான்‘குவலயாபீடம்’ என்னும் போர் யானையின் பாகனை அழைத்து ‘மல்யுத்தம் காணவரும் கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால், மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்’ என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்