பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Friday, November 19, 2010

என்ன பாக்கியம் செய்தாய் என் நெஞ்சமே! திருப்பதி ஏழுமலையானுக்கு அடிமை ஆனாயே!




பெரிய திருமொழி

1048
வானவர் தங்கள் சிந்தை போல* என் நெஞ்சமே! இனிது உவந்து*
மாதவம் ஆனவர் தங்கள் சிந்தை* அமர்ந்து உறைகின்ற எந்தை*
கானவர் இடு கார் அகில் புகை* ஓங்கு வேங்கடம் மேவி*
மாண் குறள் ஆன அந்தணற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*.2.1.1


விளக்கம்:-

(எந்த நேரமும் பெருமாளே என்று ) பெரிய தவம் செய்தவரின் மனதில் (என்றும் நீங்காமல்) அமர்ந்து வசிக்கின்ற என்னுடைய தந்தை! (My sweety! வசிக்கும் இடம்) காட்டிலுள்ள வேடர்கள் மலை வேம்பு மரத்தை (எரித்து) இடும் புகை (எங்கும் பரவி இருக்கும்) உயர்ந்த (மலையான திருப்பதி திரு) வேங்கடம் வாழும் மேன்மையான வாமணன் ஆன அறிவு பண்பு இவற்றில் சிறந்த நல்லவர்க்கு (ஏய்! My dear) என் நெஞ்சமே!வானவர்கள் மனதை போல இனிமையாக விரும்பி இன்று (முதல்) (பெருமாள் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்)அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே(வாழ்த்துக்கள்!)

1049
உறவு சுற்றம் என்று ஒன்று இலா* ஒருவன் உகந்தவர் தம்மை*மண்மிசைப்
பிறவியே கெடுப்பான்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
குறவர் மாதர்களோடு* வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும்* வேங்கடத்து
அறவன் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே* 2.1.2


விளக்கம்:-
(தனக்கென்று) உறவு, சொந்தம் என்று ஒன்றும் இல்லாத ஒருவன் (நம் பெருமாள்) (தம்மை விரும்பியர் (யாராக இருந்தாலும் இந்த) பூமியின் மேல் (அவர்களுக்கு ஏற்படும்) பிறவி (என்னும் துன்பத்தை அடியோடு) நீக்குவான். அதனை கண்டு (ஏய்! My dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ!) குறத்தி பொண்ணுங்களோடு வண்டுகள் (சேர்ந்து கொண்டு அழகான) மயக்கும் குறிஞ்சி இசையை பாடும் (திருப்பதி திரு) வேங்கடத்து இறைவன் (நம்மோட) ஹீரோவுக்கு, இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1050
இண்டை ஆயின கொண்டு* தொண்டர்கள் ஏத்துவார் உறவோடும்* வானிடைக் கொண்டு போய் இடவும்*, அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
வண்டு வாழ் வட வேங்கட மலை* கோயில் கொண்டு அதனோடும்* மீமிசை
அண்டம் ஆண்டு இருப்பார்க்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.3

விளக்கம்:-

(பூ) மாலைகள் கட்டி ( கையில் ஏந்தி) கொண்டு போற்றும் தொண்டர்களோடு (சேர்த்து அவரது) உறவினர்களையும் வானத்தில் இருக்கும் (இன்ப வீட்டிற்கு) கொண்டு போய் விடும் (பெருமாளின் நல்ல) குணத்தை கண்டு (My dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ!) வண்டுகள் வாழ்கின்ற (திருப்பதி) வட வேங்கட மலை(யில்) கோயில் கொண்டு அதனோடு (சேர்ந்து) மேலுள்ள (வைகுண்டம் மற்றும்) பிரபஞ்சம் (முழுவதும்)ஆட்சி செய்து இருப்பார்க்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படிஅவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1051
பாவியாது செய்தாய்* என் நெஞ்சமே! பண்டு தொண்டு செய்தாரை* மண்மிசை
மேவி ஆட்கொண்டு போய்* விசும்பு ஏற வைக்கும் எந்தை*
கோவி நாயகன் கொண்டல் உந்து உயர்* வேங்கட மலை ஆண்டு வானவர்
ஆவியாய் இருப்பார்க்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.4


விளக்கம்:-

பாவம் எது செய்தாய் (எல்லாம் நன்மையே செஞ்சுட்ட போல இருக்கே! My dear) என் நெஞ்சமே! பூமியின் மேல் (எங்கும்) பரவி முன்பு (அன்போடு) தொண்டு செய்தவர்களை (எல்லாம் அலேக்கா) தூக்கி கொண்டு போய் வானத்தில் (இருக்கும் இன்ப வீடு) ஏற வைக்கும் என் தந்தை, ஆயர்பாடியில் உள்ள பொண்ணுங்களுக்கு ஹீரோ! (வானத்தில் உள்ள) மேகங்களை தள்ளும் (படி உள்ள) மேலோங்கிய (திருப்பதி திரு) வேங்கட மலையை ஆண்டு வானத்தில் (உள்ள தேவர்களுக்கும்) உயிராய் இருப்பார்க்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)


1052
பொங்கு போதியும் பிண்டியும் உடைப்* புத்தர் நோன்பியர் பள்ளியுள் உறை*
தங்கள் தேவரும் தாங்களுமே ஆக* என் நெஞ்சம் என்பாய்*
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும்* வேங்கடம் மேவி நின்று அருள்*
அங்கண் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.5


விளக்கம்:-

பொங்கி வருவது (போல நன்றாக செழித்து வளரும்) போதி மரமும், அசோக மரமும் உடைய புத்தர் (மேல் பக்தி கொண்டு விரதம் இருக்கும் பௌத்தரும் சமணரும் புத்த) கோவிலுக்கு உள்ளே வாழும் தங்கள் தேவரும் (புத்தரும்) அவர்களும் ஆக (மட்டுமே இருப்பார்கள் ஆனால் My Dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ! அங்கெல்லாம் செல்லாமல்) எங்கும் வானவர்களும் அசுரர்களும் நிறைந்து போற்றி புகழும் (திருப்பதி திரு) வேங்கடத்தில்
(எங்கும்) நிறைந்து நின்று அருள் (செய்யும்) அழகான கண்களையுடைய ஹீரோவிற்கு(நம்ம பெருமாளுக்கு )இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)





1053
துவரி ஆடையர் மட்டையர்* சமண் தொண்டர்கள் மண்டி உண்டு பின்னரும்*
தமரும் தாங்களுமே தடிக்க* என் நெஞ்சம் என்பாய்*
கவரி மாக் கணம் சேரும்* வேங்கடம் கோயில் கொண்ட கண் ஆர் விசும்புடை*
அமர நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.6


விளக்கம்:-

காவி ஆடை (அணிந்து கொண்டு மொட்டை அடித்து கொண்டிருக்கும்) புத்தர்களும், சமண தொண்டர்களும் ஒட்டுமொத்தமா கொட்டி இருக்கும் (உணவுகளை ஒருவரோடு ஒருவர்
விழுந்தடித்து கொண்டு வயிறு முட்ட) உண்டு பின்னர் உறவுகளும் தாங்களுமே
(என்று உடலை செமையா வளர்த்து) தடித்து (இருப்பர். ஆனால் My Dear) என் நெஞ்சம்
எனப்படும் (நீ! அங்கெல்லாம் செல்லாமல் உடலில் நிறைய) முடியுடைய விலங்குகள்
கூட்டமாக சேரும் (அழகான திருப்பதி திரு) வேங்கடத்தில் கோயில் கொண்ட (வரும் அதுமட்டுமில்லாமல்) பெருமை வாய்ந்த வானத்தில் (வசிக்கும்) தேவர்களுக்கு ஹீரோவான (நம்ம செல்லம் பெருமாளுக்கு) இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாய (வாழ்த்துக்கள்!)

1054
தருக்கினால் சமண் செய்து* சோறு தண் தயிரினால் திரளை* மிடற்றிடை
நெருக்குவார் அலக்கண்* அது கண்டு என் நெஞ்சம் என்பாய்*
மருள்கள் வண்டுகள் பாடும்* வேங்கடம் கோயில் கொண்டு அதனோடும்* வானிடை
அருக்கன் மேவி நிற்பார்க்கு* அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.7

விளக்கம்:-

(நாங்கதான் உயர்ந்தவர் என்று திமிருடன்) கர்வத்தினால் சமண (மதத்தை பரவ) செய்து, (வரும் சமணர்கள்) சோற்றில் குளிர்ந்த தயிரினால் உருண்டை (செய்து அப்பு அப்புன்னு சாப்பிட்டு) தொண்டை வரைக்கும் (உணவை நிறைய) உண்டு துன்புறுவர். அதை கண்டு என் நெஞ்சம் எனப்படும் (நீ என்ன நன்மை செய்தாயோ! அங்கெல்லாம் செல்லாமல்) மயக்கம் வைக்கும் இசையுடன் வண்டுகள் பாடும் (திருப்பதி திரு) வேங்கடம் கோயில் கொண்டு அதனோடு வானத்திலுள்ள சூரிய (ஒளியாகவும் எங்கும்) பரவி நிற்பார்க்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1055
சேயன், அணியன், சிறியன், பெரியன் என்பதும்* சிலர் பேசக்
கேட்டிருந்தே* என் நெஞ்சம் என்பாய்!* எனக்கு ஒன்றும் சொல்லாதே*
வேய்கள் நின்று வெண் முத்தமே சொரி* வேங்கடமலை கோயில்
மேவிய* ஆயர் நாயகற்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.8


விளக்கம்:-

(பரம்பொருளான இறைவனை சிலர்) தொலைவில் (உள்ளான்), அருகில் (உள்ளான் என்றும்) சின்னவன் (என்றும்) பெரியவன் (என்றும்) சிலர் பேச கேட்டிருந்தாய்! (அவர்களின் வீண் பேச்சை கேட்காமல் (My Dear)என் நெஞ்சம் எனப்படும் (நீ!) எனக்கு ஒன்றும் சொல்லாமலே (நன்கு வளர்ந்த) மூங்கில்கள் நின்று (கொண்டு) வெள்ளை நிற முத்துக்களை உதிர்க்கும் (அழகிய திருப்பதி திரு) வேங்கட மலை கோயில் (கொண்டு எங்கும்)நிறைந்துள்ள (என் செல்ல கண்ணனுக்கு) ஆயர்களின் ஹீரோக்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1056
கூடி கூடி உரைத்தே உரைத்தாய்* என் நெஞ்சம் என்பாய்! துணிந்து கேள்*
பாடி ஆடிப் பலரும் பணிந்து ஏத்தி* காண்கிலார்*
ஆடு தாமரையோனும் ஈசனும்* அமரர் கோனும் நின்று ஏத்தும்* வேங்கடத்து
ஆடு கூத்தனுக்கு* இன்று அடிமைத் தொழில் பூண்டாயே*2.1.9

விளக்கம்:-

(My Dear) என் நெஞ்சம் எனப்படும் (நீ! இந்த உலக மக்களோடு) கூடி கூடி அவர்கள் (டேய் மச்சான் அந்த பிகர பாருடா என்று கூறினால் நீயும் ஆமா மாமே அந்த பிகர் நல்லா இருக்குடா! என்று அவர்கள்) சொல்வதையே (தலையாட்டி நீயும்) சொன்னாய்.(!சிம்ரன், நயன்தாரா, மும்தாஜ், நமீதா கணக்கா இருப்பவங்களை பற்றி) பாடியும் ஆடியும் (அவர்களை நேரில் பார்த்தால்) பணிந்து போற்றி புகழ்பவர்கள் (பரம்பொருளான என் செல்லம் பெருமாளை) காண இயலாதவர்கள்.(ஆனால் என் நெஞ்சமே நீ அவர்களிடம் சேராமல் அழகாக) தாமரை மலரில் (அமர்ந்திருக்கும்) பிரம்மனும், ஈசனும், தேவர்களின் அரசனான (இந்திரனும்) நின்று போற்றி புகழும் (திருப்பதி திரு) வேங்கடத்து (கண்ணன் குடத்தை வைத்து கொண்டு முன்பு ஆயர்களோடு சேர்ந்து) ஆடும் கூத்தனுக்கு இன்று (முதல் அவர் சொல்வதை எல்லாம் செய்யும் படி அவருக்கு தொண்டு என்னும்) அடிமைத் தொழிலை செய்ய ஏற்று கொண்டாயே! (வாழ்த்துக்கள்!)

1057
மின்னு மா முகில் மேவு* தண் திரு வேங்கட மலை கோயில் மேவிய*
அன்னமாய் நிகழ்ந்த* அமரர் பெருமானை*
கன்னி மா மதில் மங்கையர் கலிகன்றி* இன் தமிழால் உரைத்த*
இம்மன்னு பாடல் வல்லார்க்கு* இடம் ஆகும் வான் உலகே*2.1.10

விளக்கம்:-

(முன்பு படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மருக்கு) அன்ன வடிவில் வந்து (உபதேசம் செய்தவரும்) தேவர்களுக்கும் (இறைவனான) பெருமாளை அழியாத பெரிய (கனமான) சுற்று சுவரை கொண்ட திருமங்கை (நாட்டு) போர்வீரன் (திருமங்கையன்) இனிமையான தமிழால் கூறிய இந்த சிறந்த பாடலை (என்னை போலவே பெருமாள் மீது ஆசை வைத்து அவருக்கே நான் அடிமை என்ற எண்ணத்தோடு சொல்ல) ஆற்றல் படைத்தவர்களுக்கு இடம் (பெருமாள் வசிக்கும் வைகுண்டமான) வான் உலகம்



திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் தூய தமிழின் சொற்பொருள்

சிந்தை - மனதில், மன உணர்வு
உவந்து - விரும்பி
மாதவம் - உயர்ந்த or சிறந்த தவம் செய்தவர்கள்
உறை - தங்குதல், வாழ்தல்
கானவர் - வேடர்கள், முல்லை மருத, பாலை நிலா மக்கள்
இடு அகராதி
அகில் -,மலை வேம்பு, வேப்பமரத்தை போன்ற ஒரு மரம், நச்சு தன்மை வாய்ந்தது
கார் - கருமை, மேகம்
ஓங்கு - உயரமான, உயர்வான நிலை, ஒசத்தி
மேவி - பரவி - அல்லது கலந்து
மாண் - இறைவன்,. மாண்புமிகு, மேன்மை
குறள் - குள்ளம், வாமன பெருமாள்
அந்தணர் - அறிவு பண்பு முதலியவற்றில் சிறந்தவர் , மிகவும் நல்லவர், பிராமணர்
பூண்டாயே - ஏற்றாயே,மேற்கொண்டாயே
உறவு - பிறந்த குழந்தை மற்றும் திருமணத்தால் வரும் சொந்தங்கள்
சுற்றம் - சொந்தம்
உகந்து - விரும்பி
மண் - நிலம்
மிசை - மேல்
குறவர் மாதர் - ஊர் ஊராக சென்று வாழும் ஓர் இனத்தை சேர்ந்த பெண்கள்
குறிஞ்சி - மலையும் மலையை சார்ந்த இடமும்
மருள் - தெளிவில்லாமல் குழம்புதல், அச்சம்
அறவன் - பெரியவன்,இறைவன்,அறம் செய்வதை தொழிலாக உடையவர்
நாயகன் - தலைவன், கதாநாயகன், ஹீரோ
இண்டை - மாலை வகை, கொடி வகை
ஏத்து – போற்று, புகழ்ந்து
மீமிசை - மிக்கது, மேலிடத்தில்
அண்டம் - பிரபஞ்சம், பூமி, உலகம்
பாவியாது - தீமை எது
பண்டு - பழமை
தொண்டு - சேவகம்
விசும்பு - வானம்
எந்தை - என் தந்தை
கோவி - கோபியர், ஆயர்பாடி வசிக்கும் பெண்கள்
கொண்டல் - மேகம், மழை
உந்து - தள்ளு
உயர் – உயர்ந்த, மேலோங்கிய
ஆவி - உயிர், ஆன்மா
பொங்கு - நுரைத்து மேலோங்கிய
பிண்டி - அசோக மரம்
பள்ளி - படுத்தல், சமணர் படுக்கும் குகைகள்
உறை - வசிக்கும்
நோன்பு - உணவை குறைத்து கொண்டோ அல்லது எளிய உணவை சாப்பிட்டு இறைவனை நினைத்து செய்யும் விரதம்,
தானவர் - அசுரர்
அம்கண் - அழகான கண்
துவரி - காவி நிறம்
மட்டையர் - மொட்டை அடித்த புத்தர்கள்
சமண் - சமண மதம்
மண்டி - உணவுகளை மொத்த அளவில் விற்பனை செய்யும் இடம்
தமர் - சுற்றத்தார்
கணம் - மொத்தமாக வந்து சேரும்
கண் - பெருமை
ஆர் - வாய்ந்த, நிறைந்த, பொருந்திய
கவரி - மயிர்
மா - விலங்கு, மாடு, மான்
அமரர் - தேவர், மரணம் இல்லாதவர்
தருக்கு - கர்வம்
திரள் - உருண்டை ,கூட்டம், சதைபற்றுடன் குண்டாக காணப்படுதல்,
தண் - குளிர்ந்த
மிடற்றிடை - கழுத்து, தொண்டை வரை
நெருக்கு - அழுத்து
அலக்கண் - துன்பம்
மருள் - மயக்க உணர்வு , அச்சம், தெளிவில்லாமல் குழம்புவது
அருக்கன் - சூரியன்
சேயன் - தொலைவில் உள்ளான்
அணியன் - அண்மையில் உள்ளான்
வேய் - மூங்கில்
வெண் - வெண்மை, வெள்ளை நிறம்
சொரியும் – உதிரும்,விழுதல், பொழிதல், கொட்டுதல்
ஆயர் - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
உரைத்து - கூறுதல், தெரிவித்தல்
துணிந்து - , பயமில்லாமல், தைரியம்
எத்தி - போற்றி, புகழ்ந்து
காண்கிலார் - காண இயலார்
ஈசன் - சிவன் ,கடவுள், இறைவன், தலைவன்
கோன் - அரசன்
ஆடு - அங்குமிங்கும் அசைதல்
கூத்தன் - நடனம் செய்பவன்
மின் - மின்னல்
மா - பெரிய
முகில் - மேகம்
மேவு - பரவிய
தண் - குளிர்ந்த
அன்னம் - அன்ன பறவை
கன்னி - அழியாதது
மதில் - சுற்று சுவர்
கலியன் - போர்வீரன்
கலிகன்றி - திருமங்கை ஆழ்வார், கலியைக் கெட்டுவிடச் செய்பவன்
இன் - இனிய
மன்னு - சிறந்த
வல்லார் அகராதி
வான் - வானம்

திருமங்கை ஆழ்வார் பாடிய திருவேங்கடம் - திருப்பதி என்று தற்போது அழைக்க படுகிறது.ஆந்திராவில் உள்ளது. திருப்பதி பெருமாளின் பெயர் ஸ்ரீ ஸ்ரீனிவாசன். நின்ற வண்ணம் அழகாக இருக்கிறார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதும் , அனைவரும் சேர்ந்து சொல்லுவோமா! கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா !




என் அன்பு ஏழுமலையானின் பொன் மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம்!