பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Tuesday, September 14, 2010

நைமிசாரணியத்துள் எந்தாய்!- திருமங்கை ஆழ்வார் (998-1007)


Sri Hari - Naimi Saaranyam



பெரிய திருமொழி

998
வாணிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள் மாதரார் வனமுலைப் பயனே பேணினேன்*
அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயருப்பான்*
ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தை* நாணினேன்
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்!. 1.6.1

விளக்கம்:-
நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! ஒளியுடைய நிலா போல (சிநேகா மாதிரி)
மெலிசா சிரிப்பையும், (லைலா மாதிரி) சிறிய நெற்றியும், (குஷ்பூ மாதிரி) பெரிய
தோளையும் , பெண்களின் பெரிய செழிப்பான முலைகளை ( ஆன்னு பார்த்து ஜொள்ளு
விட்டு கொண்டு இவைகளே பேரின்பம் என்று இதுநாள்வரை)கருதினேன் . இதெல்லாம் தப்புன்னு கருதி உலக உண்மையை அறியாமல் பிறவி என்னும் நோயை அறுக்கும் உன் எண்ணமே இல்லாமல் இருந்தேன்.ஆனா இப்போ எண்ணினேன் முன்பு பெண்களின் உடலுறவில் (ஈடுபட்டதை) எண்ணிவெட்கி தலை குனிந்தேன். உடனே வந்து உன் திருவடியை அடைந்தேன்.நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே!

999
சிலம்படி உருவிற் கருநெடுங் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து*
புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா*
அலம்புரி தடக்கை ஆயனே! மாயா! வானவர்க்கரசனே!*
வானோர் நலம் புரிந்து இறைஞ்சும் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.2


விளக்கம்:-
நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! சிலம்புகளை காலில் போட்டுக்கிட்டு
(நமிதா கணக்கா டான்ஸ் ஆடும்) கறுத்த நீண்ட கண்களையுடைய பெண்களிடமே மனம்
செலுத்தியதால் ஒழுக்கத்தை மறந்தேன். புலன்களால் உண்டான இன்பங்களை பெருக்கி
வீணாக நாட்களை கழித்தேன். சஞ்சலம் உள்ளவர்களுக்கு மனம் நிறைந்து சந்தோசபடும்படி கொடுக்க கூடிய (கொடுத்து கொடுத்து சிவந்த) பெரிய கையப்பா நீ! (என் கண்ணனே!)
மாடுகளை மேய்ப்பவனே! மாயவனே! வானவர்களின் அரசனே! வானத்தில் இருப்பவர்களும் தங்கள் நலனை வேண்டி வணங்கும்உன் திருவடி அடைந்தேன். நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே

1000
சூதினைப் பெருக்கிக் களவினைத் துணிந்து சுரிகுழல் மடந்தையர் திறத்து*
காதலே மிகுத்துத் கண்டவா திரிந்த தொண்டனேன் நமன் தமர் செய்யும்*
வேதனைக் கொடுங்கி நடுங்கினேன் வேலை வெண்திரை அலமரக் கடைந்த *நாதனே
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.3

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! (உள்ளே வெளியே என்று மங்காத்தா
கணக்கா) சூதாட்டம் ஆடிகிட்டு இருந்தேன், கூடவே தைரியமா திருடவும் செய்தேன்.
(அதுமட்டுமா அழகா) சுருள் முடி உடைய டீன் ஏஜ் பொண்ணுங்களின்
தொடர்பினால் காதலே மிகுந்து, கண் போன போக்கிலே ஊரை சுத்திக்குனு இருந்தேன்.
தங்களின் தொண்டன் (அச்சோ! நான் செஞ்ச தப்புக்கெல்லாம்) யமனின் தூதர்கள் செய்யும் வேதனைகளை நினைத்து பார்த்து அடங்கி (திகு திகுன்னு பயத்துல) நடுங்கினேன். தேவர்களின் சஞ்சலம் தீர்ப்பதற்காக (நுரையுடன் பொங்கும் வெண்மை நிற) அலைகள்
பிச்சிக்கிட்டு அடிக்கும் கடலை கடைந்த நாதனே! வந்து உன் திருவடி அடைந்தேன். நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே!

1001
வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரமென்று இவற்றை*
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி ஏற்றி வைத்து*
எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ தழுவென மொழிவதற்கு அஞ்சி*
நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.4

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! வாசனையுள்ள அழகான கூந்தலை
உடைய பொண்டாட்டிய விட்டு மற்றவங்க பொருளையும் , இன்னொருத்தரோட
பொண்டாட்டிய (பார்த்து ஜொள்ளு விட்டு கொண்டு) இவற்றையெல்லாம் நம்பி (ஆசைபட்டு) இறந்தவர்களை , யம தூதர்கள் புடிச்சிக்கிட்டு போய் ஓரிடத்தில் வைத்து நல்லா
கொழுந்து விட்டு எரிகின்ற செம்பால் (Copper) செய்யப்பட்ட பெண்ணை (டேய் பாவீ)
இதை கட்டி தழுவி கொள்! என்று சொல்வதற்க்கு பயந்து , (நான் செய்த
குற்றகளை நீக்கி எம்மை பரிசுத்தமாக்குபவனே!) என்றுமே நம்ப தகுந்தவனே!
உன் திருவடி அடைந்தேன்.நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே!

1002
இடும்பையால் அடர்ப்புண்டு இடுமினோ துற்றேன்று இரந்தவர்க்கு இல்லையே என்று*
நெடுஞ்ச்சொலால் மறுத்த நீசனேன் அந்தோ! நினைக்கிலேன் வினைப்பயன் தன்னை*
கடுஞ்ச்சொலார் கடியார் காலனார் தமரால் படுவதோர் கொடுமிறைக்கு அஞ்சி*
நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்*. 1.6.5

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! துன்பத்தால் மிகவும் வருத்தம் கொண்டு
பசி என்று கேட்டு வந்தவர்க்கு (போ! போ! என்னிடம்) இல்லை என்று கடுமையான
சொல்லால் மறுத்த கீழ்த்தரமானவன் நான்! ஐயோ! இதனால் எனக்கு ஏற்படும் தீமையான
விளைவுகளை நினைக்க வில்லையே! கோபத்துடன் கடுமையான வார்த்தைகளை
பேசும் காவல் பொருந்திய எமனார் அனுப்பிய தூதர்களால் படும் கொடுமைக்கு
பயந்து நடுங்கி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்.
நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே

1003
கோடிய மனத்தால் சினத்தொழில் புரிந்து திரிந்து நாய் இனத்தொடும் திளைத்திட்டு*
ஓடியும் உழன்றும் உயிர்களே கொன்றேன் உணர்விலேன் அதனால்*
நமனார் பாடியைப் பெரிதும் பரிசழித்திட்டேன் பரமனே! பாற்கடல் கிடந்தாய்*
நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய் *. 1.6.6

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! ஒழுக்கமே இல்லாத மனச வச்சிக்கிட்டு
தவறான செயல்களை செய்து, ஊரை சுற்றிக்கொண்டு, (அச்சச்சோ யப்பப்பா)
நாயை போல (தெரு தெருவா சுற்றும் இனத்தவரோடு) சேர்ந்து இங்கேயும் அங்கேயும்
ஓடி அலைந்து திரிந்து சுய புத்தி இல்லாமல் உயிர்களை கொன்றேன்.அதனால் யமனின் (நரகமென்னும்) ஊரை (பரிசாக கிடைத்திருக்க வேண்டியது! மனம் திருந்தி உன்னிடம் சரண் அடைந்ததால் இப்போது அந்த நரகமென்னும் பரிசை) பெரிதும் அழித்துவிட்டேன். பரமனே!
பாற்கடலில் (ஹாயாக) படுத்து கொண்டிருப்பவனே! நாடி நான் வந்து உன் திருவடி அடைந்தேன்.


1004
நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதியல்லாதன செய்தும்*
துஞ்சினார் செல்லும் தொல்நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய்*
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில் பிரியா வானவா தானவர்க் கென்றும் நஞ்சனே*
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்* 1.6.7

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! தப்பு தப்பான காரியங்களை மனசுல
நினைத்தும்,வாயினால் சொல்லியும், நியாயம் இல்லாததை செய்தும், (இப்படியெல்லாம்
வீணான வாழ்க்கை வாழ்ந்து) இறந்தவர்கள் செல்லும் (நரகம் பற்றி) பெரியவர்கள்
சொல்ல கேட்டு (பயந்து போய்) நடுங்கினேன். விளா மரமாகி (நின்ற அசுரனை) அழித்தாய்!
(எம்கண்ணனே!) தீய எண்ணங்கள் உடைய அடியேனின் நெஞ்சினில்பிரியாமல் இருக்கும்
வானவனே!(தேவாதி தேவனே!) அசுரர்களுக்கு என்றும் விஷமானவனே!
வந்து உன் திருவடி அடைந்தேன்.


1005
ஏவினார் கலியார் நலிக வென்று என் மேல் எங்கனே வாழுமாறு?*
ஐவர் கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் குறுங்குடி நெடுங்கடல் வண்ணா!
பாவினார் இன்சொல் பன்மலர் கொண்டு உன் பாதமே பரவி நான் பணிந்து*
என் நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்*. 1.6.8


விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! தளர்ச்சியடைந்து (நொந்து போடா! என்று )
கலியனார் (என் மேல் ஐம்புலன்களால் ஆன ஆசையை) ஏவி விட்டார் . (நான் உன்னிடம் சரணடைந்து விட்டேன் ஹி ஹி) இனிமேல் அவர் எங்கே வாழ போகிறார்!
(கண், காது, மூக்கு, நாக்கு, தோல் முதலான) ஐம்புலன்களால் (ஆன ஆசை என்னை) அரசாண்டு செய்யும் கொடுமையை (அடியோடு) அழித்து விட்டேன். திருக்குறுங்குடியில்
(வசிக்கும்) நெடுங்கடல் (நிற) வண்ணா! என் வாயினால் இனிமையான சொல்லெடுத்து
பாடி, பல வித விதமான மலர்களை கொண்டு, உன் பாதத்தில் தூவி, நான் பணிந்து வந்து
உன் திருவடி அடைந்தேன்.

1006
ஊனிடைச் சுவர்வைத்து என்பு தூண் நாட்டி உரோமம் வேய்ந்த ஒன்பது வாசல்*
தானுடைக் குரம்பைப் பிரியும் போது உன் தன் சரணமே சரணம் என்றிருந்தேன்
தேனுடைக் கமலத் திருவினுக்கரசே! திரைகொள் மாநெடுங்கடல் கிடந்தாய்*
நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்*. 1.6.9

விளக்கம்:-

நைமிசாரணியத்துள் வசிக்கும் என் தந்தையே! தசைகளை சுவராக வைத்து, எலும்புல
தூணை நட்டு,(அடடே நீ பெரிய Architect போல) முடியினால் கூரை கட்டி, (இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள் + இரண்டு மூக்குத் துவாரங்கள் + வாய் + சிறுநீர்ப்பாதை + மலப்பாதை)
ஆக ஒன்பது வாசல் உடைய உடல் பிரியும்போதுஉன்னுடைய (திருவடி) சரணமே சரணம்
என்று இருந்தேன். தேன் உடைய தாமரையில் (அமர்ந்துள்ள) மகாலட்சுமியின் அரசே! அலைகள் உள்ள பெரிய நீளமான கடலில் (அழகாக பாம்பு படுக்கையில்) படுத்து கொண்டு இருப்பவனே! (உன் திருவடியை பாசத்துடன் உள்ளத்திலேயே வைத்து இருந்தேன்)
நான் வைத்திருந்த (அந்த) தவத்தால் உன் திருவடி அடைந்தேன்

1007
ஏதம் வந்து அணுகா வண்ணம் நாம் எண்ணி எழுமினோ தொழுதும் என்று *
இமையோர் நாதன் வந்து இறைஞ்சும் நைமிசாரணியத்து எந்தையை ச் சிந்தையுள் வைத்து*காதலே மிகுத்த கலியன் வாயொலி செய் மாலை தாம் கற்று வல்லார்கள்*
ஓத நீர் வையகம் ஆண்டு வெண்குடைக்கீழ் உம்பரும் ஆகுவர் தாமே. 1.6.10

விளக்கம்:-

துன்பம் வந்து சேராம இருக்கணும்னு நாம் எண்ணினால் எழுந்துருங்கள், வழிபடுவோம்
என்று தேவர்கள் தலைவன் இந்திரன் (தேவர்களுடன்)வந்து வழிபடும் நைமிசாரணியத்தில்
வசிக்கும் என் தந்தையை உள்ளத்தில் வைத்து அவர் மேல் காதல் அதிகமாகி களியனாகிய
நான் வாயால் பாடிய இந்த சொல் மாலையை (நீங்கள்) கற்று (என்னை போலவே பாசத்துடன்
பெருமாளை எண்ணி இந்த பாசுரங்களை கூறினால்) கடல் சூழ்ந்த உலகம் ஆண்டு
வெள்ளை நிற குடையின் கீழே தேவர்களும் நீங்க ஆவீர்கள்!

Naimi Saaranyam Temple


திருமங்கை ஆழ்வார் சொன்ன திருநைமிசாரண்யம்
உத்திராஞ்சல மாநிலத்தில் உள்ளது. கல்கத்தா-டோராடூன் ரயில் பாதைaயில் உள்ள பாலமாவ் என்னும் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சீதாப்பூர் செல்லும் புகைவண்டியில் ஏறி நைமி சாரண்யம் என்னும் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ரயிலடியிலிருந்து 3கி.மீ. தொலைவில் கோயில் உள்ளது. அயோத்தியிலிருந்து 3 மணி நேரம் பேருந்துப் பயணம் ஆகும்.

பெருமாள்:- தேவராஜன், or ஸ்ரீ ஹரி (நின்ற கோலம்)
தாயார்:- ஸ்ரீ ஹரி லட்சுமி, or ஸ்ரீ புண்டரீகவல்லி தாயார்

No comments: