பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Saturday, November 26, 2011

அழகாக ஆனந்தமாக ஆடி வரும் கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக தரிசனம் தருகிறானே!

1172
பருவக் கரு முகில் ஒத்து  * முத்து உடை மா கடல் ஒத்து *
அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன் மலை ஒத்து *
உருவக் கருங்குழல் ஆய்ச்சி திறத்து* இன மால் விடை செற்று*
தெருவில் திளைத்து வருவான்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.5

விளக்கம்:-
மழைகாலத்தில் வரும் கரிய மேகம் போன்ற நிறமுடையவனும், முத்துகள் உடைய பெரிய கடலை போன்ற நீல நிறமுடையவனும், அருவிகள் கூட்டமாக திகழ்கின்ற ஆயிரம் பொன் மலையை போன்றவனும் ,அழகிய உருவத்துடன் கரிய கூந்தலையுடைய நப்பின்னையின் மேல் கொண்ட ஆசையால் ஏழு வலிமை வாய்ந்த பெரிய காளைகளை அடக்கி, தெருவில் ஆனந்தமாக வருபவன் சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!



மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
பருவக் கரு முகில் ஒத்து  - மழை காலத்தில் (வரும்) கரிய மேகம் போன்றவனும் 
 


முத்து உடை மா கடல் ஒத்து - முத்துகள் உடைய பெரிய கடல் போன்றவனும் 

அருவித் திரள் திகழ்கின்ற - அருவிகள் கூட்டமாக திகழ்கின்ற 
ஆயிரம் பொன் மலை ஒத்து - ஆயிரம் பொன் மலையை போன்றவனும் 

உருவக் கருங்குழல் ஆய்ச்சி திறத்து - (அழகிய) உருவத்துடன் கரிய கூந்தல் (உடைய) நப்பின்னை மேல் ஆசை கொண்டு 
இன மால் விடை செற்று - (ஒரே) இனத்தை (சேர்ந்த) பெரிய காளைகளை அழித்து

தெருவில் திளைத்து வருவான் - தெருவில் ஆனந்தத்துடன் வருபவன் 
சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே 

அருமையான பாசுரத்தில்  வரும் கதை
ஏழு காளைகளை அடக்கிய எம்பெருமான்
கண்ணன்யசோதையின் குழந்தையாகஆயர்பாடியில வளர்ந்துட்டு இருக்கும் போதேஅதாவது கண்ணன் சின்ன பாலகனா இருக்கும் போதேயசோதையின் சகோதரனும்துவரைப்பதியின் மன்னனுமான கும்பன் என்பவரின் பொண்ணுதான் நப்பின்னை.  கண்ணனின் வருங்கால மனைவின்னு சின்ன வயசுலேயே முடிவு செஞ்சுட்டாங்க.

நப்பின்னையும் கண்ணன் பால் காதல் கொள்கிறாள். ஆனாநப்பின்னையோட அப்பா,ஒரு நிபந்தனை வைக்கிறார். தன்னிடம் உள்ள ஏழு அடங்காத முரட்டுக் காளைகளையார் அடக்குறாங்களோ! அவங்களுக்குத்தான் நப்பின்னையை மணம் முடித்துக் கொடுப்பேன்னு சொல்லிடறாரு.எத்தனையோ பேர் முயன்றும் முடியாமல் தோத்துப் போகநம்ம மதுரைவீரன்மாயக்கண்ணன் வந்து ஏழு காளைகளையும் அடக்கிதன் மாமாவின் மகளான  நப்பின்னையைத் திருமணம் செய்து கொண்டார்.