சத்ரவட நரசிம்மர்
பெரிய திருமொழி
1008
அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய்*
அவுணன் பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
பைங்கண் ஆனைக் கொம்பு கொண்டு பத்திமையால்* அடிக்கீழ்
செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே. 1.7.1
விளக்கம்:-
அப்பப்பா! அப்போது உலகமே அஞ்சும்படி (சும்மா அதிருதுல்ல!) அங்கு ஒரு தூணில் நரசிம்ம பெருமாள் (தோன்றியதும் அதை பார்த்த அசுரன்) இரணியன் கோபத்துடன் வெகுண்டெழ (டேய்1 டேய்! ஓவரா பொங்காதடா! என்று சொல்வது போல! அவன் அலறும்படி) அவன் மார்பை நல்லா கூரான நகங்களால் பொளந்த தூயவனான (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம்,குளிர்ச்சியான (cool eye) கண்களை உடைய யானையின் தந்தங்களை பிடுங்கி கொண்டு வந்து பக்தியால் சிவந்த கண்களுடைய சிங்கங்கள் (எங்கள் நரசிம்ம பெருமாளின் பாதத்தில் வைத்து) வழிபடும் சிங்கவேல்குன்றமே!.
1009
அலைத்த பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய்* அவுணன்
கொலைக் கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்*
மலைத்த செல் சாத்தெறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப*
சிலைக்கை வேடர் தெழிப்பெறாத சிங்கவேள்குன்றமே*1.7.2
விளக்கம்:-
(பயங்கரமான சத்ததுடன்)கர்ஜனையை வெளிபடுத்தும் பெரிய வாயையும், ஒளியுடைய கத்தி போல கூரான பற்களையும் கொண்டு நரசிம்மமாய் (தூணிலிருந்து) வெளிவந்து (அநியாயமாக) பலரை கொலை செய்யும்(வீணா போன அந்த) கை உடைய அசுரன் (இரணியன்) நெஞ்சை பொளந்த கூர்மையான நகங்களை உடைய (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், (வேடர்கள் தாக்கியதால்) வழியில் செல்பவர்களும் (வேடர்களும்)ஒருவரை ஒருவர் அடித்து சண்டை போட்டு கொண்டும், (வேடர்கள்) கடுமையாக தாள வாத்தியங்களை ஒலித்து கொண்டும், கையில் வில்லை வைத்து கொண்டிருக்கும் வேடர்களின் இரைச்சல் நீங்காத சிங்கவேல்குன்றமே!
1010
ஏய்ந்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய் அவுணன்
வாய்ந்த ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் அன்றியும் நின்றழலால்
தேய்ந்த வேயும் அல்லதில்லாச் சிங்கவேள் குன்றமே 1.7.3
விளக்கம்:-
உருவத்துக்கு பொருத்தமான பெரிய வாயையும், கத்தி போல (கூர்மையான) பற்களும் கொண்டு நரசிம்மமாய் (தூணிலிருந்து வெளிவந்து) அசுரன் (இரணியனின் பெரிசா வளர்ந்த) மார்பை பொளந்த அம்மான் (என் இறைவன்) (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், (அங்கேயும் இங்கேயும் உணவுக்காக அலைந்து) களைத்த விலங்குகளும், உடைந்த சிறிய மலைகளும், அதுமட்டும் இல்லாமல் எரிந்து நின்ற நெருப்பால் கருகி போன மூங்கில்களையும் தவிர வேறொன்றும் இல்லாத சிங்கவேல்குன்றமே!
1011
எவ்வம் வெவ்வேல் பொன் பெயரோன் ஏதலன் இன்னுயிரை
வவ்வி*ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மானதிடம்*
கவ்வும் நாயும் கழுகும் உச்சிப்போதொடு கால் சுழன்று*
தெய்வம் அல்லால் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே*. 1.7.4
விளக்கம்:-
(மற்றவர்களுக்கு) துன்பத்தையே (தரக்கூடிய) கூரான ஆயுதத்தை (வேலை) கையில் கொண்டுள்ள பொன் (என்னும் அர்த்தம் தரக்கூடிய) பெயருள்ளவவன் (ராஸ்கல் பேர்ல ஒன்னும் குறைச்சல் இல்ல! அதாங்க அந்த இரணியனான) எதிரியின் உயிரை வாங்கி, அவன் உடலை (தனது) கூரான நகங்களால் பொளந்த (என் இறைவன்) என் அம்மான் (என் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், (கண்ணில் பட்டவரை எல்லாம் பார்த்து லொள்! லொள்! என்று குலைத்து) கடிக்கும் நாய்களும், கழுகுகளும், (இருக்கு அதோடு )உச்சி (வெயில் வெப்பத்தோடு) சேர்ந்து (அடிக்கும்) சுழல் காற்றும் அப்பப்பா!) தெய்வ (துணை) இல்லாமால் செல்ல முடியாத சிங்கவேல்குன்றமே!
1012
மென்ற பேழ்வாய் வாள் எயிற்றோர் கோளரியாய்* அவுணன்
பொன்ற வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்*
நின்ற செந்தீ மொண்டு சூறை நீள் விசும்பூடிரிய*
சென்று காண்டர்க்கரிய கோயில் சிங்கவேள்குன்றமே. 1.7.5
விளக்கம்:-
ஆஹா! நல்ல கமுக்கமா அழகா பெரிய வாயையும், கத்தி போல கூரான பெரிய பற்களும் கொண்ட (பரம்பொருளாகிய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன்) நரசிம்மமாய் (தூணிலிருந்து வெளிவந்து) அசுரனாகிய (இரணியனின்) மார்பின் பகுதியை (தனது) கூரான நகங்களால் பொளந்த தூய்மையானவன் (எம் செல்லம் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், கொழுந்து விட்டு எரிகின்ற தீயானது , சூறாவளி காற்றால் முரண்டு தகதகன்னு வானத்தில் பறந்து சிதறி அடிக்குது! (அச்சோ இப்ப நான் என்ன பண்றது!
(என் நரசிம்மர் கிட்டக்க) சென்று பார்ப்பதற்கு அரிய கோவில் சிங்கவேல்குன்றமே!
I think Thirumangai aalwar seen this type of situvation Location in Ahobilam
1013
எரிந்த பைங்கண் இலங்கு பேழ்வாய் எயிற்றோடு இது எவ்வுருவென்று*
இரிந்து வானோர் கலங்கியோட இருந்த அம்மானதிடம்*
நெரிந்த வேயின் முழையுள் நின்று நீணெறிவாய் உழுவை*
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் சிங்கவேள்குன்றமே*. 1.7.6
விளக்கம்:-
(Any time நாராயணன் நாரயணன் நாராயணன் உன் நாராயணன் எங்கேடா இருக்கிறான் என்று இரணியன் கோபத்தில் கேட்க, தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்! என்னிலும் இருப்பான்! உன்னிலும் இருப்பான்! எங்கும் இருப்பான்! என்று பிரகலாதன் கூற எங்கே காமிடா பார்க்கலாம் என்று இரணியன் தூணை தட்ட அங்கே அப்பொழுதே தூணை பிளந்து கொண்டு தோன்றிய எம் நரசிம்ம பெருமாளின் கண்கள்) குளிர்ந்த கண்கள் (தெரியுமா! ஆனா அந்த ராஸ்கல் இரணியனால வந்த கோபத்துல) செவசெவன்னு நெருப்பு போல கண்களும், பிரகாசமான பெரிய வாயையும், (கூரான) பற்களையும் (பார்த்து) இது எந்த வடிவம் என்று வானத்தில்உள்ளவர்களும் நிலைகெட்டு (துண்ட காணோம் துணிய காணோம் என்பது போல அலறி அடிச்சிக்கிட்டு என்ன செய்வதன்றே தெரியாம) கலங்கி ஓடும்படி இருந்த என் இறைவன் (என் அம்மான்) என் செல்லம் நரசிம்ம பெருமாள் இருக்குமிடம் ஒன்றோடொன்று சேர்ந்து கிடந்த அடர்த்தியாக குகை போல இருக்கும் மூங்கில்களில் (மறைந்து) நின்று புலிகள் பெரிய வழி பாதையில் அலைந்து திரிந்த (யானைகள் இருக்கும் இடத்தை தெரிந்து கொள்ள யானைகள்)காலடி தடத்தை பார்க்கும் சிங்கவேல்குன்றமே!
1014
முனைத்த சீற்றம் விண்சுடப் போய் மூவுலகும் பிறவும்*
அனைத்தும் அஞ்ச ஆளரியாய் இருந்த அம்மானதிடம்*
கனைத்த தீயும் கல்லுமல்லா வில்லுடை வேடருமாய்*
தினைத்தனையும் செல்ல வொண்ணாச் சிங்கவேள்குன்றமே*. 1.7.7
விளக்கம்:-
(அந்த ராஸ்கல் இரணியன் பண்ண அக்கிரமத்தால் வந்த) உச்சகட்ட கோபத்தால் விண்ணுலகமே வெப்பமாகுது! மூன்று உலகங்களும் , மற்ற உலகங்களும், அனைத்தும் பயப்படும்படி மனிதனும் சிங்கமும் கலந்ததுபோல உருவம் எடுத்த (என் இறைவன் நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், தக தகன்னு (சத்தமிட்டு கொண்டே எரிகின்ற) தீயும், கற்களும், அதுமட்டுமில்லாம வில்லை உடைய வேடர்களும் (சுற்றி கொண்டிருப்பதால் இதற்க்கு மேல்) சிறிதளவும் செல்ல முடியாத சிங்கவேல்குன்றமே!

Ahobilam one of the narasimmar Temple
1015
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால்
ஏத்த*அங்கோர் ஆளரியாய் இருந்த அம்மானதிடம்*
காய்த்த வாகை நெற்று ஒலிப்பக் கல் அதர் வேய்ங்கழை போய்*
தேய்ந்த தீயால் விண்சிவக்கும் சிங்கவேள்குன்றமே. 1.7.8
விளக்கம்:-
நாக்கு தழு தழுக்க (உணர்ச்சி பெருக்கோட) நான்கு முகமுடைய பிரம்மனும், ஈசனும், (எங்க பெருமாளின் மீது அன்பு கொண்டு அவர் புகழ் பாடி) வழிபட, அங்கு (ஓர் தூணில்) மனிதனும் சிங்கமும் கலந்தார் போல உருவம் கொண்டு எழுந்தருளிய (எனது அருமை நண்பன் நரசிங்க பெருமாள்) இருக்குமிடம், வாகை மரத்தில் நன்கு முதிர்ந்து வளர்ந்த காய்கள் (சல சல என்று) சத்தமிட, (அடடே! அப்புறம்) கற்களின் (இடுக்குகளின்) வழியில் (ஓங்கி வளர்ந்த) மூங்கில் மரங்கள் (ஒன்றோடு ஒன்று) உரசியதால் (வந்த) தீயால் வானம் சிவந்து காணப்படும் சிங்கவேல்குன்றமே!
1016
நல்லை நெஞ்சே நாம் தொழுதும் நம்முடை நம்பெருமான்*
அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரம் தோளன் இடம்*
நெல்லி மல்கிக் கல் உடைப்பப் புல் இலை ஆர்த்து* அதர்வாய்ச்
சில்லு சில்லென்று ஒல்லறாத சிங்கவேள்குன்றமே 1.7.9
விளக்கம்:-
நல்ல நெஞ்சே! நாம் வழிபடும் நம்மை (சொத்தாக) உடைய நம் பெருமாள்,
(மாலையில் நீரில் பூக்கும்) அல்லி (மலரை போல அழகாக இருக்கும்)
மகாலட்சுமியை கட்டி பிடிச்சிக்கிட்டு நின்ற,ஆயிரம் தோள்கள் (போல வலிமை ) உடைய (எமது தாயும் தந்தையும் குருவும் தெய்வமும் ஆன நரசிம்ம பெருமாள்) இருக்குமிடம், நெல்லிக்காய் (மரங்கள்) நிறைய வளர்ந்து (மலை) கல்லை உடைக்க, (இந்த பக்கம் பார்த்தா!) பனை மற்றும் தென்னை ஓலைகள் (சல சலன்னு) சத்தம் போட, (இந்த அழகை பார்த்து கொண்டே போனால் வழியில்) சில் (வண்டுகளின்) சில்ல் என்ற சத்தம் நீங்காத சிங்கவேல்குன்றமே!
1017
செங்கண் ஆளி இட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றுடைய*
எங்கள் ஈசன் எம்பிரானை இருந்தமிழ் நூல் புலவன்*
மங்கையாளன் மன்னு தொல் சீர் வண்டறை தார் கலியன்*
செங்கையாளன் செஞ்சொல் மாலை வல்லவர் தீதிலரே. 1.7.10
விளக்கம்:-
சிவந்த கண்களுடைய சிங்கங்கள் (வேட்டையாடி கிடைக்கும் பொருள்களை எம் நரசிம்ம பெருமானின் பாதத்தில் வைத்து வழிபடும்) சிங்கவேல்குன்றில் வசிக்கும் எம் ஈசன் எம் தலைவருமான (எம் சிங்கக்குட்டி, சுஜ்ஜ்ஹு குட்டி என் செல்லம், என் குழந்தை, என் நண்பன், எமக்கு தாய், தந்தை, குரு , தெய்வம், பரம்பொருளுமான நரசிங்கபெருமாளை பற்றி ) பெருமைக்குரிய தமிழ் நூல் புலவனாகிய திருமங்கை மன்னன் என்றுமே நிலைத்து நிற்கும் சிறந்த பழமை வாய்ந்த அழகான செய்யுள் வரிகளை கொண்டு, வண்டுகள் சத்தமிடகூடிய (இடத்தில்) கழுத்தில் மாலை அணிந்துள்ள கலியன் (கொடுத்து கொடுத்து) சிவந்த கைகளுக்கு சொந்தகாரனுமாகிய (நான் பாடிய) இலக்கண சொல்மாலையை (என்னை போலவே பெருமாளை அன்போடு எண்ணி சொல்ல) வல்லவர் குற்றம் இல்லாதவர்!
I Love Narasimmar
திருமங்கை ஆழ்வார் சொன்ன சிங்கவேள்குன்றம்
அகோபிலம் என்று அழைக்கப்படுகிறது. இது சென்னை - மும்பை ரயில் பாதையில் கடப்பா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 32 கி.மீ. சென்றால் இத்தலத்ததை அடையலாம். இத்தலம் ஆந்திரமாநிலத்தில் உள்ளது. இதற்கு நவநரசிம்ம க்ஷேத்திரம் என்னும் பெயரும் உண்டு. இங்கு மலையடிவாரத்தில் ஒரு கோயிலும் மலையின் மேல் ஒரு கோயிலும் உண்டு. இது அகோபில மடத்தின் தலைமையிடமாகும்.
வராக நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவனா நரசிம்மர், கராஞ்ச நரசிம்மர்,சத்ரவட நரசிம்மர், பார்கவா நரசிம்மர், ஜ்வால நரசிம்மர், அஹோபில நரசிம்மர் என்று நவ நரசிம்மர்களை சேவிக்க மூன்று நாட்கள் தேவைப்படும்,
அனைவருக்கும் நரசிம்மரின் அருளும் ஆசிர்வாதமும் பெற்று நலமோடு
வாழ வாழ்த்துக்கள்!