Sunday, October 4, 2009

Tamil Meaning 3

பார்த்தன் - அருச்சுனன்
புள் - பறவை
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
செங்கயல் - கொழுத்த மீன்கள்
குருந்து - குருந்த மரம் ;
ஒசித்தஒடித்த
கொங்கு  - வாசனை
அலர்ந்த - வளமான , மலர்ந்த
தடங்கடல்பெரிய கடல்.
எந்தை என்தந்தை
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
தெள்ளியார் - தெளிந்த அறிவுடையவர் 
சுனை -  மலை ஊற்று, குளம்
புராணம் - பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவன் பரம் பொருள்
 பிரான் -  தலைவன், கடவுள்; சிவன்; திருமால்
வெள்ளி - வான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம்.நம் பூமியில் தெரியக்கூடியது,
Or ஒரு உலோக வகை. இதன் குறியீடு -(Ag)
இரங்கு - தயை செய்; இரக்கம் கொள்; அழு; வருந்து பரிதவி;
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன் என்ற பொருளை தரும்.
நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
நின்மலம் _ மாசின்மை.
நின்மலன் _ கடவுள் :.
நேமியான்  - சக்கரத்தை கையிலே கொண்டிருப்பவன்
வீழ - விழ
கன்றுதல் - முதிர்தல், அடிபடுதல், குறைதல், சினக் குறிப்புக் காண்பித்தல்,
கடிது  - விரைவாக
ஆநிரை பசுக்கூட்டம்
இடர் துன்பம்
பார்த்தன் (அர்ச்சுனன்)
பயன்பாடு பாரதம், பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.
பரஞ்சுடர் - ஒப்பற்ற ஒளியுடைய முழு முதற்கடவுள் 
ஆயர்  - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
பாடி ஊர்
குரவை = கைகோத்தாடுதல்
கோவலன்இனங்காப்பார்
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
ஏத்துபோற்று
மேவி - பரவி - அல்லது கலந்து
தடம்குளம், பாதை
தீர்த்தம் - புனித நீர்
அவுணர்அசுரர்
மாணி - திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும்
இரந்து கெஞ்சி; மன்றாடு.வண் கைஈகை, கொடை பொருள் உதவி
ஒண் - ஒண்ணு .பொருந்து
எண்  - எண்ணம், எட்டு, எண்ணற்ற
திண் - திடமான 
ஆலிலை - ஆலமரத்து இலை  
மதி - நிலா
திறல் - வலிமை.
உரம் - மார்பு
உகிர் நகம்
ஒள் ஒளி
எயிற்றுபல்,
அரிசிம்மம்
ஆய - ஆகிய
பார் - நிலம், உலகம்
பிறப்பிலி - பிறப்பில்லாதவன்  
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
வார் - ஊற்றுதல் நீண்ட
நீள் - நீளமான
விசும்பு - வானம்  
சோர் - சோரென்னேவல் : சோர்வு : வஞ்சகம்
மாமுகில் - பெரிய மேகங்கள்
தோய் - படிதல், நனைதல்
சேர் - ஒன்றோடு  ஒன்று  இணையும் செயல்
பொழில் மழைக்காடு, சோலை, மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்
எழில் - அழகான
வார் பொழில்நீண்ட சோலை
தோய்தர  - பொருந்த
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வம்பு - மணம்
அலர் - பூ, மலர்
மலிமிகுந்த
மடம் - இளமையுமுடைய,
மங்கை பெண்
கொம்பின்- பூங்கொம்பு
இதணம் பரண்
புனம்காடு , வயல்
கொழுநன் - கணவன்
அம்பரம் - வானம்
அனல் - தீ
கால் - காற்று
சலம் - நீர்
அமரர் - தேவர்
கோன் –, அரசன்
உய்ய வாழ
நாறு - வாசம்
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
உறை = வசிக்கும் .
சங்கை - அச்சம், பயம்
தரித்து - அணிந்து
உரைக்க  - சொல்லுதல் , கூற
வல்லமை - ஆற்றல், சக்தி, பெரும்வலிமை
தஞ்சம் - அடைக்கலம்
வங்கம் -  மரக்கலம், மர கப்பல்
வையம் - உலகம்
செஞ்சொல் மாலை இலக்கணசொல் , புகழ் மாலை

விரையார் - மணம் பொருந்திய
வேயேய் - மூங்கில் புதர்
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிரிந்த சோலை
நல்கி - விரும்பி
ஆள் - ஆட்சி செய்தல்
மடவார் - இளமையுடைய பெண்  
நானாவித - நாலாவிதம், பல விதமான
மா பெரிய, உயர்ந்த
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
ஆய் - அழகு, நுண்மை, சிறுமை, இடையர் குலம்
ஆட்கொண்டு - முழுமையாக எடுத்து கொண்டு
உரைக்க  - சொல்லுதல் , கூற
இரந்து கெஞ்சி; மன்றாடு
அறியேன் - அறியாது
அதிர்- ஒலி, நடுக்கம்
எய்த்து இளைத்து
அறம் - தருமம், புண்ணியம்
தோய் - படிதல், நனைதல்
நெறியார் - நிலையினையுடையவர்
நிலம் - பூமியின் மேற்பரப்பு
அலந்த - வாடிய
அலம் - துன்பம்
துப்பு - நல்லன, உணவு
நின் - உன்
ஏத்து - போற்று, புகழ்ந்து
கிற்கின்றிலேன் - சக்தி ஒன்றும் இல்லை
செப்பு - செம்பு, தாமிரம்
ஆர் - பொருந்திய, ஒலி 
திண் - திடமான 
வரை - மலை  
எரி - நெருப்பு
கால் - காற்று
மஞ்சு - மேகம் 
ஆகாசம் - வானம், ஆகாயம் 
புண் - காயம்
ஆக்கை - உடல்
எய்த்து - இளைத்து
விண் - வானம்
நீள் - நீளமான, உயர்ந்த
விரையார் - மணம் பொருந்திய
பாலகன் - கற்று குட்டி, சிறியவன், இளையவன், குழந்தை
கரி - யானை
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த சோலை
கனம் - பாரம், எடையின் அளவு, மரியாதைக்கு உரிய
 நுன்னை - உன்னை 

0 comments: