பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Saturday, July 4, 2009

Tamil Meaning 2

பார்த்தன் - அருச்சுனன்
புள் - பறவை
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
செங்கயல் - கொழுத்த மீன்கள்
குருந்து - குருந்த மரம் ;
ஒசித்தஒடித்த
கொங்கு  - வாசனை
அலர்ந்த - வளமான , மலர்ந்த
தடங்கடல்பெரிய கடல்.
எந்தை என்தந்தை
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
தெள்ளியார் - தெளிந்த அறிவுடையவர் 
சுனை -  மலை ஊற்று, குளம்
புராணம் - பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவன் பரம் பொருள்
 பிரான் -  தலைவன், கடவுள்; சிவன்; திருமால்
வெள்ளி - வான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம்.நம் பூமியில் தெரியக்கூடியது,
Or ஒரு உலோக வகை. இதன் குறியீடு -(Ag)
இரங்கு - தயை செய்; இரக்கம் கொள்; அழு; வருந்து பரிதவி;
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன் என்ற பொருளை தரும்.
நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
நின்மலம் _ மாசின்மை.
நின்மலன் _ கடவுள் :.
நேமியான்  - சக்கரத்தை கையிலே கொண்டிருப்பவன்
வீழ - விழ
கன்றுதல் - முதிர்தல், அடிபடுதல், குறைதல், சினக் குறிப்புக் காண்பித்தல்,
கடிது  - விரைவாக
ஆநிரை பசுக்கூட்டம்
இடர் துன்பம்
பார்த்தன் (அர்ச்சுனன்)
பயன்பாடு பாரதம், பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.
பரஞ்சுடர் - ஒப்பற்ற ஒளியுடைய முழு முதற்கடவுள் 
ஆயர்  - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
பாடி ஊர்
குரவை = கைகோத்தாடுதல்
கோவலன்இனங்காப்பார்
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
ஏத்துபோற்று
மேவி - பரவி - அல்லது கலந்து
தடம்குளம், பாதை
தீர்த்தம் - புனித நீர்
அவுணர்அசுரர்
மாணி - திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும்
இரந்து கெஞ்சி; மன்றாடு.வண் கைஈகை, கொடை பொருள் உதவி
ஒண் - ஒண்ணு .பொருந்து
எண்  - எண்ணம், எட்டு, எண்ணற்ற
திண் - திடமான 
ஆலிலை - ஆலமரத்து இலை  
மதி - நிலா
திறல் - வலிமை.
உரம் - மார்பு
உகிர் நகம்
ஒள் ஒளி
எயிற்றுபல்,
அரிசிம்மம்
ஆய - ஆகிய
பார் - நிலம், உலகம்
பிறப்பிலி - பிறப்பில்லாதவன்  
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
வார் - ஊற்றுதல் நீண்ட
நீள் - நீளமான
விசும்பு - வானம்  
சோர் - சோரென்னேவல் : சோர்வு : வஞ்சகம்
மாமுகில் - பெரிய மேகங்கள்
தோய் - படிதல், நனைதல்
சேர் - ஒன்றோடு  ஒன்று  இணையும் செயல்
பொழில் மழைக்காடு, சோலை, மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்
எழில் - அழகான
வார் பொழில்நீண்ட சோலை
தோய்தர  - பொருந்த
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வம்பு - மணம்
அலர் - பூ, மலர்
மலிமிகுந்த
மடம் - இளமையுமுடைய,
மங்கை பெண்
கொம்பின்- பூங்கொம்பு
இதணம் பரண்
புனம்காடு , வயல்
கொழுநன் - கணவன்
அம்பரம் - வானம்
அனல் - தீ
கால் - காற்று
சலம் - நீர்
அமரர் - தேவர்
கோன் –, அரசன்
உய்ய வாழ
நாறு - வாசம்
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
உறை = வசிக்கும் .
சங்கை - அச்சம், பயம்
தரித்து - அணிந்து
உரைக்க  - சொல்லுதல் , கூற
வல்லமை - ஆற்றல், சக்தி, பெரும்வலிமை
தஞ்சம் - அடைக்கலம்
வங்கம் -  மரக்கலம், மர கப்பல்
வையம் - உலகம்
செஞ்சொல் மாலை இலக்கணசொல் , புகழ் மாலை

--------------------------------------------------------------------------------
திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் தூய தமிழின் விளக்கம்!
விரையார் - மணம் பொருந்திய
வேயேய் - மூங்கில் புதர்
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிரிந்த சோலை
நல்கி - விரும்பி
ஆள் - ஆட்சி செய்தல்
மடவார் - இளமையுடைய பெண்  
நானாவித - நாலாவிதம், பல விதமான
மா பெரிய, உயர்ந்த
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
ஆய் - அழகு, நுண்மை, சிறுமை, இடையர் குலம்
ஆட்கொண்டு - முழுமையாக எடுத்து கொண்டு
உரைக்க  - சொல்லுதல் , கூற
இரந்து கெஞ்சி; மன்றாடு
அறியேன் - அறியாது
அதிர்- ஒலி, நடுக்கம்
எய்த்து இளைத்து
அறம் - தருமம், புண்ணியம்
தோய் - படிதல், நனைதல்
நெறியார் - நிலையினையுடையவர்
நிலம் - பூமியின் மேற்பரப்பு
அலந்த - வாடிய
அலம் - துன்பம்
துப்பு - நல்லன, உணவு
நின் - உன்
ஏத்து - போற்று, புகழ்ந்து
கிற்கின்றிலேன் - சக்தி ஒன்றும் இல்லை
செப்பு - செம்பு, தாமிரம்
ஆர் - பொருந்திய, ஒலி 
திண் - திடமான 
வரை - மலை  
எரி - நெருப்பு
கால் - காற்று
மஞ்சு - மேகம் 
ஆகாசம் - வானம், ஆகாயம் 
புண் - காயம்
ஆக்கை - உடல்
எய்த்து - இளைத்து
விண் - வானம்
நீள் - நீளமான, உயர்ந்த
விரையார் - மணம் பொருந்திய
பாலகன் - கற்று குட்டி, சிறியவன், இளையவன், குழந்தை
கரி - யானை
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த சோலை
கனம் - பாரம், எடையின் அளவு, மரியாதைக்கு உரிய
 நுன்னை - உன்னை
நோற்றது - தவம் செய்தது
நோற்றேன் - தவம் செய்தேன்
இடர் - துயரம், துன்பம்,வறுமை  
ஆற்று - மனசுமையை பிறரிடம் கூறி குறைத்து கொள்ளுதல்
ஆற்றார் - வலியரல்லாதவர், வறுமையுடையவர், பொறுக்க மாட்டாதவர்
ஆற்றேன் - கவலை, இழப்பு இவற்றை பொறுக்க முடியாதவன் (தாங்க முடியாதவன்)
கோல் - கொம்பு
உற்றனன் -  அடைந்தான்
சோலை  - குளிர்ந்த மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த இடம்
பற்றேல் - பிடித்தல்ஆதாரம், பிடிமானம்  
மற்றேல் - மற்றபடி
அறியேன் - அறியாது
கல் தேன் - மலை தேன் என்றும் சொல்லலாம் 
கமலச்சுனை - தாமரை குளம்
அற்றேன் - இல்லாதவன்
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
திண் - திடமான 
பொழில் - சோலைதோட்டம், மரங்களும் செடிகளும் உள்ள குளிர்ச்சியான இடம்  
பரவி - சுற்றிலும், படர்தல், பரவுதல்
பண் - இசை, இசை பாட்டு
பயில்வார் - கற்பவர், படிப்பவர்

திருப்பதி கோவிந்தனுக்கு சமர்ப்பணம்!
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!  
---------------------------------------------------------------------------------------------------------
ஆர் - பொருந்திய, ஒலி 
திண் - திடமான 
ஆகம் உடல், மார்பு
சரம் - அம்பு ,ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக
செல உய்த்து - செல்லுமாறு அனுப்பி
மேய = பொருந்திய
இடர் - துன்பம், வருத்தம்
களை = நீக்கு
பதி - தலைவன், கணவன் அரசர்
மாள - இறக்க
புள் - பறவை, கருடன்
கொடி புள்  - கருட கொடியை கொண்டவன்
திரித்தாய் - திருகாணி  போல சுற்றி கொண்டே மேலே செல்வது  
 விலங்கல் - மலை
குடுமி - உச்சி
அலங்கல் - மாலை, பூமாலை
துளப - துளசி 
நீரார் - நீர் பொருந்திய
ஏர்   - அழகு
ஆலம் - ஆலமரம்
இளந்தளிர் - புதியதாக வளர்ந்திருக்கும் மென்மையான இளம் இலை
துயில் - உறங்குதல்
எந்தாய் - என் தந்தையே!
சீரார் - அழகு பொருந்திய
ஆரா அமுதே - திகட்டாத அமுதே , இனிப்பு, வீடுபேறு, நிவேதனம், அமிர்தம்
உறி - மேலிருந்து கயிற்றால் பானைகள்  தொங்கும்படி இருப்பது உறி எனப்படும்   
நறு - வாசனை
நெய் - உருக்கிய வெண்ணெய்
அமுது -  அமுதம், சோறு, இனிப்பு, நிவேதனம், வீடுபேறு
குறள் -  குள்ளன்
தோய் - படிதல், நனைதல்
சிகரம் - மலையின் உச்சி
அண்டா - தேவனே
ஆய் - அழகு
அரிசிம்மம், பெருமாள்
பேணா - விரும்பாத போற்றாத
அவுணன்  - அசுரன்
உடலம் - உடல்
சேண் - உயரம் உள்ள, ஆகாயம், தூரம்
ஆர் - பொருந்திய
கோண் - வளைந்து
நாகம் - நல்ல பாம்பு
அணை - படுக்கை, தூங்கும் இடம் 
குறிக்கொள் - நினைத்து  காத்தருள்
மன்னா - அரசனே
இன் - இனிய
அருள் - கருணை, இரக்கம்
மின் - மின்னல்
ஆனை - யானை
அப்பன் - அப்பா  
 மடம் - இளமையுமுடைய,
நோக்கி - ஒருவரை குறிக்கோளாக  கொண்டு
திறத்து - தம் வலிமையினால்
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
விடை - ஆண் விலங்கு, எருது
செற்ற - அழித்த
அணி - உடுத்துவது
வரை - மலை  
கோன் –, அரசன்
 சேயன் - தொலைவில் உள்ளான்
அணியன் - அண்மையில் உள்ளான்
வாள் - ஒளி, கத்தி
தரளம் - முத்து
வேய் - மூங்கில்
விண்டு - நீங்கி
ஆயன் - இடையன் , ஆடு மாடு மேய்ப்பவன், கண்ணன்
மன்னி - நீக்கமற எங்கும் நிறைந்து
நந்தாத கெடாத, அணையாத
சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி
வில்லார் - வில்லை உடையவர், வேடர்கள்
ஆர் பொருந்திய
 மலி = மிகுந்த
மல்லார் - வலிமை பொருந்திய
திரள் தோள் - திரண்ட தோள், பெருத்த தோள்

சிந்தை - மனதில், மன உணர்வு  
உவந்து - விரும்பி
மாதவம் - உயர்ந்த or சிறந்த தவம் செய்தவர்கள்  
உறை - தங்குதல், வாழ்தல்
கானவர் - வேடர்கள், முல்லை மருத, பாலை நிலா மக்கள்
இடு அகராதி
அகில் -,மலை வேம்பு, வேப்பமரத்தை  போன்ற ஒரு மரம், நச்சு தன்மை வாய்ந்தது
கார் - கருமை, மேகம்
ஓங்கு - உயரமான, உயர்வான நிலை, ஒசத்தி
மேவி - பரவி - அல்லது கலந்து
மாண் - இறைவன்,. மாண்புமிகு, மேன்மை
குறள் - குள்ளம், வாமன பெருமாள்
அந்தணர் - அறிவு பண்பு முதலியவற்றில் சிறந்தவர் , மிகவும் நல்லவர்,  பிராமணர்
பூண்டாயே - ஏற்றாயே,மேற்கொண்டாயே
செம்-அழகிய
உறவு - பிறந்த குழந்தை மற்றும் திருமணத்தால் வரும் சொந்தங்கள்
சுற்றம் - சொந்தம்
உகந்து - விரும்பி
மண் -   நிலம்
மிசை - மேல்
குறவர் மாதர் - ஊர் ஊராக சென்று வாழும் ஓர் இனத்தை சேர்ந்த பெண்கள்  
குறிஞ்சி - மலையும் மலையை சார்ந்த இடமும்
மருள் - தெளிவில்லாமல் குழம்புதல், அச்சம் 
அறவன் - பெரியவன்,இறைவன்,அறம் செய்வதை தொழிலாக உடையவர்
நாயகன் - தலைவன், கதாநாயகன், ஹீரோ
இண்டை - மாலை வகை, கொடி வகை
ஏத்து போற்று, புகழ்ந்து
மீமிசை - மிக்கது, மேலிடத்தில்
அண்டம் - பிரபஞ்சம், பூமி, உலகம்
 பாவியாது - தீமை எது
பண்டு - பழமை
தொண்டு - சேவகம்
விசும்பு - வானம்  
எந்தை - என்  தந்தை
கோவி - கோபியர்ஆயர்பாடி வசிக்கும் பெண்கள்   
கொண்டல் - மேகம், மழை
உந்து - தள்ளு
உயர் உயர்ந்த, மேலோங்கிய
ஆவி - உயிர், ஆன்மா
பொங்கு - நுரைத்து மேலோங்கிய
பிண்டி - அசோக மரம்
பள்ளி - படுத்தல், சமணர் படுக்கும் குகைகள்
உறை - வசிக்கும்
நோன்பு - உணவை குறைத்து கொண்டோ அல்லது எளிய உணவை சாப்பிட்டு  இறைவனை நினைத்து செய்யும் விரதம்,
தானவர் - அசுரர்
அம்கண் - அழகான கண்
துவரி - காவி நிறம்
மட்டையர்  -   மொட்டை அடித்த புத்தர்கள்  
சமண் - சமண மதம்
மண்டி - உணவுகளை மொத்த அளவில் விற்பனை செய்யும் இடம்
தமர் - சுற்றத்தார்
கணம் - மொத்தமாக வந்து சேரும்
கண் - பெருமை
ஆர் -  வாய்ந்த, நிறைந்த, பொருந்திய 
கவரி - மயிர்
மா - விலங்கு, மாடு, மான் 
அமரர் - தேவர், மரணம் இல்லாதவர் 
தருக்கு - கர்வம்
திரள் - உருண்டை ,கூட்டம், சதைபற்றுடன் குண்டாக காணப்படுதல்,
தண் - குளிர்ந்த  
மிடற்றிடை   - கழுத்து, தொண்டை வரை
நெருக்கு - அழுத்து
அலக்கண் - துன்பம்
மருள் - மயக்க உணர்வு , அச்சம், தெளிவில்லாமல் குழம்புவது  
அருக்கன் - சூரியன்
 சேயன் - தொலைவில் உள்ளான்
அணியன் - அண்மையில் உள்ளான்
வேய் - மூங்கில்
வெண் - வெண்மை, வெள்ளை நிறம்
சொரியும் – உதிரும்,விழுதல், பொழிதல், கொட்டுதல்
ஆயர்  - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
உரைத்து - கூறுதல்தெரிவித்தல் 
துணிந்து - , பயமில்லாமல், தைரியம்
எத்தி - போற்றி, புகழ்ந்து
காண்கிலார் - காண இயலார்
ஈசன் - சிவன்  ,கடவுள், இறைவன், தலைவன்
கோன் - அரசன்
ஆடு - அங்குமிங்கும் அசைதல்
கூத்தன் - நடனம் செய்பவன்
மின்  - மின்னல்
மா - பெரிய
முகில் - மேகம்
மேவு - பரவிய
தண் - குளிர்ந்த
அன்னம்  - அன்ன பறவை
கன்னி - அழியாதது  
மதில் - சுற்று சுவர்
கலியன் - போர்வீரன்
கலிகன்றி - திருமங்கை ஆழ்வார், கலியைக் கெட்டுவிடச் செய்பவன்
இன் - இனிய
மன்னு - சிறந்த
வல்லார் அகராதி
வான் - வானம்
மடவார் - இளமையுடைய பெண்  
வேய் மூங்கில்
தையலாள் - பெண்   
தானவன் - அசுரன்
வாள் - ஒளி, கத்தி
பொய் இலாத - உண்மையான
முடிகள் - தலைகள்
வெம் - கொடிய
செஞ்சரம் எய்த - சிவந்த  அம்பு விட்ட
எந்தை - என்  தந்தை
தூது - செய்தி தெரிவிக்கும் பணி
மன் - சிறந்த
வாளி - அம்பு
வானரம் - குரங்கு, அனுமன், ஆஞ்சநேயர்
மொழிந்து கூறியது
மாள - இறக்க
முனிந்து சினந்து , வெறுத்து
பெருநிலத்தார் - அதிகமான நிலம் உடைய   பணக்காரன், துரியோதனன்
இன்னார் - தன்னை யாரென்று அறிமுகபடுத்தி  கொள்ளுதல்
பந்து அணைந்த - பந்தை தழுவிய (போல)
மெல் - மிருதுவான, மென்மையான, மெல்லிய 
பாவை - பெண்
வெந்திறல் - கொடிய திறமை
ஏறு - ஆண் எருது
வேந்தன் - அரசன், மன்னன்
விரி புகழ் - பெரும் புகழ் 
பண்டு - வெகு காலம் முன்பு, மிகவும் பழமை வாய்ந்த
ஆல் - ஆலமரம்
சால - மிகவும்,ரொம்ப
நாளும் - நாட்களாக
பள்ளி - படுத்து
எண்ணில் - எண்ணற்ற
ஆர் பொருந்திய,  ஒலி
நெய்தல் -  நீரில் பூக்கும் வெள்ளை, நீல நிற லில்லி மலர்கள் உள்ள இடம்   (ஆம்பல்)
தண் - குளிர்ந்த
கழனி - வயல் வெளி
ஏல - பொருந்த, இயல
நாறும் - நல்ல மணமிக்க
பைம் - பசுமை
புறவு - காடு, முல்லை நிலம், பயிர்கள் வளர்ந்த நிலம்,
சோத்தம் - வணக்கம்  
மிண்டி - வலிமை
ஆத்தன் - விருப்பமானவன்
செங்கண் - சிவந்த கண்கள்
முக்கண்  - சிவபெருமான்
நம்பி - இறைவன், நம்ப தகுந்தவர்
திங்கள் - நிலவு
அப்பு - நீர், அப்பா, அன்பாக கூறுவது
வான் - வானம்
எரி - நெருப்பு
கால் - காற்று
திசைமுகனார் - பிரம்மன், நான்கு முகங்களை கொண்டவர்
அப்பன் - தந்தை
சாமி - பொன் , சாமவேதம், இறைவன்
தொங்கல் - பூமாலை
நீள் - நீளமான
சூழ் - சுற்றி
கழல் - பாதம், திருவடி
சூட - அணிந்த
முனிவன் - இறைவன்
மூர்த்தி மூவர் -  பிரம்மன், சிவன், திருமால்
அண்ணல் - வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர், தலைவன்  
புண்ணியன் - நற்செயல்களை செய்பவன்
கோன் - அரசன்
தனியன் - தனி ஒருவன், ஒப்பில்லாதவன் தனக்கு இணையாக யாரும் இல்லாதவன்
சேயன் - அறிய முடியாதவன்முருகன்  
பந்து - பூவை சுற்றி விட்டு இருப்பதுஉருண்டை வடிவம்  
பனிமலர் - குளிர்ந்த இடத்தில பூக்கும் மலர், தாமரை
அந்தரம் - நடுவெளி, ஆகாயம்
நாயகன் - தலைவன்
இண்டை - மாலை
ஏத்த - போற்ற
கலியன் - போர்வீரன்
சீர் - அழகு, நேர்த்தி,செய்யுளில் ஒரு வகை வரிசை
தண் - குளிர்ந்த
செய் - செய்த
அண்டம் - உலகம்
அன்றேல் - இல்லை என்றால்  , வேண்டாம் என்றால்  
அமரர் - வானோர் தேவர்
 ---------------------------------------------------------------------------------
கஞ்சன் - கம்சன்
பெரு - அதிக அளவில்
மல்லர் - வலிமை மிகுந்தவர்கள்
வேழம் - யானை
வீழ - விழ
செற்றவன் - அழித்தவன்
உறு - மிக்க
துயர் - துன்பம்
தேவை  - அவசியம்
களை - நீக்குதல்
பற்றலர் - பகைவர்
வீய - இறக்க
கோல் - அம்பு, கொம்பு சாட்டை
சிற்றவை - சின்னம்மா, சித்தி
பணி - கட்டளை, அதிகாரம் (இவற்றுக்கு) கீழ்படிதல்
முடி - அரச பதவி ஏற்றிருப்பதை காண்பிக்கும் கிரீடம், முடி சூட்டிய மன்னன்
துரந்தான் - விட்டு விலகினான், ஏற்காமல் விட்டான்
வேதம்  - அறிதல்
விழுமிய - சிறந்த, உயர்வான
கோது - குற்றம்
இன் - இனிமையான
கனி - பழம்
களிறு - யானை
குவலயம் - பூமி
தொழுகை - வழிபாடு, ஆராதனை
ஏத்தும் - போற்றும்
ஆதியை - முதன்மையானவன், பரம்பொருள் இறைவன்
அமுது - அமிர்தம்
ஆள் - ,ஆட்சி, அடிமை
அப்பன் - தந்தை, அப்பா, இறைவன்
ஒப்பவர் - தனக்கு இணையானவர்
மாதர் - பெண்
மாடம் - திண்ணை
மா பெரிய
வஞ்சனை - சூழ்ச்சிகாரி
தாய் - அம்மா
பேய் - பூதனை என்னும் பேய்
உரு - உருவம்
நஞ்சு - விஷம்
அமர் - தடவிய, சேர்தல்
ஊடு - வழியாக, நடு
செக - ஒழிய
நாதன் - இறவன்
தானவர் - அரக்கர்
கூற்று - யமன்
விஞ்சு - மேலோங்கிய
சாரணர் - முனிவர்
வியந்து - அதிசயித்து, ஆச்சர்யபட்டு  
துதி - வணக்கம், வழிபடுதல்
அஞ்சுவை - இனிய சுவை, அழகான சுவை  
எழில் - அழகு
விழ - விழா
பழ நடை - பழைய நடைமுறைப்படி  
மந்திர விதி - மந்திரங்கள் சொல்லி நியமனபடி
பூசனை - பூஜை
தளர்ந்து - துன்பப்பட்டு
ஆயர் - பசு மேய்ப்பவர், இடையர்
எந்தம்மோடு - நாங்களும்
இன ஆநிரை - கூட்டம் கூட்டமாக பசுக்களின் திரளும்
அந்தம் இல் - அளவில்லாத (மிக பெரிய)
வரையால் - கோவர்த்தன மலையால்
 இன் துணை - இனிய துணை
பதுமத்து - பத்மம், தாமரை
அலர் - மலர்
நல் புவி - நல்ல பூமி  , பூமாதேவி
பாவை - பெண்
வன் துணை - என்றுமே விட்டு நீங்காத துணை  
வாய் உரை இயங்கும் - வாய் வார்த்தை சொல்ல சென்றவன்
எந்தை தந்தை - என் அப்பாவுக்கும் அப்பா (தாத்தா)
தம்மான் தலைவன்
ஓதி  - கல்வி கற்பவன்
ஒள்ளிய - ஒளியுடைய
போதம் - ஞானம், அறிவு
ஆங்கு  - அந்த இடத்தில
இலன் - இல்லை
பொறுப்பு - கடமை
வெகுண்டு - சீறி கொண்டு கோபமாக
புடைப்ப  - அடிக்க
பிறை - கூர்மையான  வளைந்த
எயிற்று - பல்
பேழ் - பெரிய
தெள்ளிய - தெளிந்த, சுத்தமான, தூய்மையான
அமர் - இரு, உட்கார்
பொய்கை - நீர் நிலை, குளம்
கொய்வான் - பூவை பறிப்பான்
வேட்கை - விருப்பம், ஆசை
இழிந்த - தாழ்ந்த  
கான் - காடு  
வேழம் - யானை
கரா - முதலை
கதுவ - கவ்வ
புள் - கருட பறவை
ஆழி - சக்கரம்
மன்னு - சிறந்த
வாவி - நீர் நிலை, கிணறு
மதிள் - சுற்று சுவர்
தென்னன் - பாண்டிய மன்னன்
கன்னி - புதுமை
காமரு - அழகு பெற்ற
சீர் - செய்யுளில் ஒரு வகை
-------------------------------------------------------------

 இரும்பொழில் = பெரிய சோலைகள் ;
மறையோர் = அந்தணர் ;
இயலும் = போன்ற ;
கவாடம் = கதவு
அரியன் - அருமையானவன், தலைவன்
மூண்டு - பற்றுதல்
அழல் - நெருப்பு
முனிந்து - சீறி
பொறை - பாரம்
 அடல்  - வெற்றி,வலிமை
அலம் - கலப்பை
சுரி - முறுக்கலான
புலம் - ஐம்புலன்
வடம்புனை - நகைகளை அணிந்த
பசுலோன் - சூரியன்
அமரில் - போரில்
அடு = நெருங்கு
 மால் - பெரிய
ஆர - நிறைய , மிக  
குவடு - மலை
வரம்பு - எல்லை, கரை
படை - போர் வீரர்கள்
கதிர் - ஒளி, சூரியன்
உருவ - முழுதும், நன்றாக
பாங்கு - பக்குவம்
மால் - மயங்கு
ஆராது - போதாது
அரையன் - அரசன்
புகர் - ஒளி 
பாழ் - வீண்
பகராத -  எடுத்து சொல்லாத
பீலி - மயில் தோகை
நிச்சம் - நிச்சயம், ஒவ்வொரு நாளும்
பிச்சம் - இறகு
நச்சி - பக்தி
பீலி  - தோகை, மயில்
வம்மின் = வாருங்கள்;
ஏனம் = பன்றி,
விண்டு = மலர்ந்து,
விரை = மணம்
வினை - தீமை, முற்பிறவியில் செய்த செயல்
உய்வு - பிழைக்க
அறை - ஒலிக்கின்ற, மொய்க்கின்ற
நைந்து - வருந்தி , நொந்து, அழுகி போதல்
உழல் - அவதிபடுதல்
சோர = வழிய;
தறை = மண்;
நமர் = நம்மவர்
கடம் - யானை கூட்டம்
களி - மதம்
மேவி - பரவிய
களி - களித்த 
இலங்கு - பிரகாசமான
கொடு - வளைந்த
ஆயது - ஆயிற்று
பவளம் - சிவப்பு கலருடைய விலை உயர்ந்த பொருள்
சீரான் - பெருமையானவன்
தீம் - இனிய, இனிப்பான
ஏற்றினை - வீரனை
புணர் - ஒன்றோடொன்று இணைந்த
இற - முறிந்து விழும்படி (இறக்கும் படி)
கார் - கரிய, அழகான
கடிந்த - அழித்த
பரி - குதிரை
கீண்ட - பிளந்த
அவத்தம் - அபத்தம் : பயனற்றது
பூண்டு - ஏற்று கொண்டு
கணம் - கூட்டம்
அத்தம் - கை
நித்திலம் - முத்து
தொத்தினை - கொத்தினை, குவியல்
ஏறு சிங்கம்
வித்தகன் - மாயக்காரன்
மீ - மேலே, ஆகாயம், மேன்மை
தடம் - பாதை
விடம் விஷம்
கடு நடை  - வேகமான நடை
கடி மணம்
நெறி முறை
பிணை - பெண் மான், இணைப்பு, பிணைப்பு, ஆசை, பூமாலை
மருப்பு - யானை தந்தம், விலங்கின் கொம்பு
நோக்கின் பார்வையின்
திரி சகடம் - உருளுகின்ற சக்கரம்  
காய்ந்து - சீறி
அன்ன - போன்ற
மால் - பெரிய
பாறி பாறி. -. அடியோடு அழிந்து
தடங்கடல்பெரிய கடல்
கிளர் - உணர்ச்சி பெருக்கோடு
பொறி - கருவி
மறி - மான்
படர் - ஓடுதல் செய்
எயிறு - யானை தந்தம்
ஏனம்=பன்றி;
மருப்பு=கொம்பு
பிறைக் கொழுந்து= பிறைச் சந்திரன்;
மதி=நிலவு/அறிவு;
அரா=அரவு ( பாம்பு)
இரு நிலம்பெரும்பூமி
பூண் - நகை
ஊண் - உணவு
உள்ளு - நினைவில் கொள்
அரவிந்தம் - தாமரை
அடல்  - வலிமை
வார் புனல் - ஒழுகும் நீர் , மிகுந்த நீர்
தாளாளர் - நிர்வகிப்பவர்
வழங்கைவாய் - வலது திருகையாலே
திடம் - உறுதி
அரிய - களைய
மருவு. -. பொருந்திய
கிழத்தி - தலைவி
முந்நீர் - கடல்
விண்டார் பகைவர்
மெல் - மெல்லிய
மல் - வலிமை
அகலம் - மார்பு
அழல் - நெருப்பு
வெம்சமத்து - பயங்கரமான போரில்
மெல்லியலார்- மகளிர்
நச்சி விரும்பி
விச்சை கல்வி
புழை - துளை
நான்று - தொங்கி
ஒசிந்து - தளர்ந்து
மல்லை - வளம் , பெருமை
வன் - கொடிய
பகடு - எருது
கழு - அழகு
பிஞ்ஞகன் - சிவபிரான்
இடுகாடு - சுடுகாடு
இணங்கு - ஒத்து போதல்
மறுகு வீதி
வடி கூர்மை
திவளும். -. படிகின்ற
அரிவை - இருபது இருபத்தைந்து வயது பெண் 
குவளை - கரு நீல நிற பூ 
நயந்து – விரும்பி
திவள் அம் மாளிகை - ஒளி வீசுகின்ற 
துளம் - மாதுளம் 
முறுவல் - புன்னகை 
குழல் - கூந்தல் 
முந்நீர் - கடல் 
போந்து - வருவது
பொரு கடல் - அலையால் கரையைத் தாக்குகின்ற கடல்
மாந்தளிர் - புதிததாக இருக்கும் மென்மையான இலை
இறை - சிறிதும் 
ஏந்திழை - அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்
சாந்தம் - அமைதி, பொறுமை 
பூண்-நகை
சாந்தம்=சந்தனம்
மாந்தளிர் -மாநிறம்
சாபல்யம் – பிறவிப்பேறு
ஊழி - யுகம். நீண்ட காலம் 
நாழிகை – 24 நிமிடம் 
ஒண் - ஒளி
ஆழி - கடல் 
துயில் - உறங்குதல் 
ஒது - வாய் வார்த்தை கூறுதல் 
கையறவு  வருத்தம், செயலற்ற நிலை,
கயல் - கெண்டை மீன் 
பேதை - பெண் . உலக விஷயம் அறியாதவள் 
பிள்ளைமை - அறியாமை 
வள்ளி - கோடி 
நுண் - மிக சிறிய
மருங்குல் - இடுப்பு 
ஏதலர் - பகைவர் 
நுடங்கு - வளைந்து 
எயில் - கோட்டை சுவர், மதில் 
வாள் - கொடிய 
 வன் - கொடிய 
கனிந்து - பழுத்த, முழு வளர்ச்சியடைந்த 
பிதற்று - உளறு 
வெருவு அச்சம்
முறுவல் - புன்னகை 
காரிகை - அழகு 
அவலம் - துன்பம் , பலவீனம் 
கெழு  - நிறம், பிரகாசமான, ஒத்த,கொண்ட என்றும் தேவைபட்டால்   
ஆம்பல் - அல்லிமலர், மூங்கில், இசை குழல் 
புலம் - பக்கம் 
குலம் - ஒரு பகுதி 
புலம் - வயல்
பொரு  - பொருந்து
குலாம் - போல உள்ள, நிறம்  
பயலை - பசலை, காதல் காம நோயால் ஏற்படும் உடல் நிற மாற்றம்
ஆதரம் - அன்பு, ஆசை, மதிப்பு
அணங்கு - தெய்வமகள், அச்சம், வருத்தி கொள்ளும் தெய்வம் போன்ற பெண், காதல் மயக்கமுற்ற பெண் 
வனம் - அழகு 
குறிப்பு  திருவுள்ளம்
மன்னு - சிறந்த 
மானம் - வலிமை, மதிப்பு, பெருமை  
பன்னினார் - சொன்னார், ஆராய்ந்தார்
பனுவல் - நூல் 
ஒலி - பாடலை வெளியிடுதல் 
இன் - இனிய 
வினை - முற்பிறவியில் செய்த செயல், தீய, தீமை 
அயன் - பிரம்மன் 
மிசை - மேல் 
முரி - வளைவு 
முரி என்பதற்குச் சிதறிய என்றும், ஒளிவிடு மென்றும் உரைத்தலுமாம்.
திரை - அலை 
அன, அன்ன - போன்ற, ஒப்பான  
கேசரம் - அப்பிரகம் : சிங்கம் : பூங்கூந்தல்
ஆர்கொல் - தாங்கள் யாரோ (இதில் கொல் என்பது ஐய சொல்) 
மலர்மிசை – தாமரை
வாளி - அம்பு 
திண்  - திடமான, உறுதியான, கனமான 
சிலை - வில் 
சங்கம் - சங்கு 
உம்பர் - மோட்சம், தேவலோகம் அல்லது மேலுலகம் 
ஆழி - சக்கரம் 
கேடகம் - பாதுகாப்பு தட்டு வடிவ ஆயுதம் 
ஒண் = ஒளி பொருந்திய
வெம்பு - கொதித்தெழு
அடல் - வலிமை 
வேழம் - யானை 
மருப்பு - கொம்பு 
அம்புதம் - மேகம் 
மஞ்சு - மேகம் 
மணி - ஒளி வீசும் வைரம் போன்ற கல்
வெம் அகராதி 
வெஞ்சுடர் - சூரியன், மிகுந்த வெப்பம்
சங்கு - வளையல் 
நிறைவு - கற்பு, முழுமை, சிறப்பு தன்மை 
கருங்கடல் - நீர்நிறைவாற் கரிய தோற்றத்தையுடைய கடல்
அங்ஙனம் - அவ்விதம், அப்படி 
அவிழ் - மலர், உதிர்தல், திறக்க செய் 
புனைந்த - அணிந்த

No comments: