திருமண வயது நெருங்கி விட்டதா!
ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்!
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம்!
சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருவிடந்தை ஸ்ரீ நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோவில். இது சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை யாழ்வார் திருவிடந்தைப் பெருமாளை போற்றிப் பாசுரங்கள் பாடி யுள்ளார். 108 திவ்ய தேசங்களில் 62-ஆவது திவ்ய தேசமாக இத்தலம் போற்றப்படுகிறது.
ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் ஸ்தல வரலாறு
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் வீடுபேறு அடையவே, அவரைப் போலவே வீடுபேறு அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம், "திருமணம் செய்து கொள்ளாமல் வீடுபேறு அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். எல்லாரும் மறுத்துவிட, காலவ முனிவர் அவள்மீது இரக்கம் கொண்டு அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள்.
360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார் காலவமுனிவர். காலம்தான் யாருக் காகவும் காத்திருப்பதில்லையே. பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார் கள்.
இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர்.
சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். காலவமுனிவரும் தன் பெண்களுடன் திருவிடந்தை வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் முனிவரின் வேண்டுகோளை ஏற்று, பிரம்மச் சாரியாக வந்து நாள்தோறும் முனிவருடைய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, 360-ஆம் நாள் தான் அதுவரை கல்யாணம் செய்து கொண்ட அனைத்துப் பெண்களையும் ஒருவராக்கி "அகிலவல்லி' என்னும் பெயரைச் சூட்டினார். தேவியைத் தனது இடப்பக்கத்தில் எழுந்தருள வைத்து சரம ஸ்லோகத்தை உலகத்தாருக்கு உபதேசித்து அருளினார்.
பெருமாள் தினமும் திருமணம் செய்து கொண்டதால் பெருமாள் நித்ய கல்யாணப் பெருமாள் என்றும்; இந்த தலம் "நித்ய கல்யாணபுரி' என்றும் அழைக்கப்படுகிறது.
தோரணவாயிலின் மேல்மண்டபத்தில்,ஸ்ரீஆதிவராக மூர்த்தி தேவியுடன் இருக்கும் சுதை யிலான சிற்பம் எழிலுற அமைக்கப்பட் டுள்ளது. அதை அடுத்துள்ள மண்டபத்தின் கல் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஸ்ரீ மகாவிஷ்ணு, காளிங்க நர்த்தனர், நரசிம்மர் ஆகியவர்களின் சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளன. அதைக் கடந்து சென்றால் இராஜகோபுரம், பலிபீடம், கொடிக் கம்பத்தைக் காணலாம்.
கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார்.
உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ர கங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள்.
ஆண்டாளும் எழிற்கோலத் தில் காட்சி தருகிறார். ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார் சந்நிதியும் சிறப்பாக அமைந்துள்ளது. இவர் களை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும் என்கிறார்கள்.
வைகானச ஆகம விதிகளின் படி தினமும் நான்கு கால பூஜைகள் நடத்தப் பெறுகின் றன. தல விருட்சமாக புன்னை மரமும்; தல புஷ்பமாக அரளிப் பூவின் வகையைச் சேர்ந்த கஸ்தூரியும் விளங்குகின்றன.
இங்கு சித்திரைப் பெருவிழா மிகவும் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி யில் வசந்த உற்சவமும், ஆனி மாதத்தில் கருட சேவையும், ஆடிப் பூரத்தில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடிக்கு திருக்கல்யாண உற்சவமும், புரட் டாசியில் நவராத்திரி உற்சவமும் விமரிசையாக நடத்தப்படுகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாட் களிலும் கோமளவல்லித் தாயாருக்கு வெவ்வேறு விதமாக அலங்காரங்கள் செய்யப் படுகின்றன.
பங்குனி மாத உத்திர நட்சத் திரத்தில் பெருமாளுக்கு திருக் கல்யாண உற்சவம் நடைபெறு கிறது.
உற்சவ காலங்களில் ஸ்ரீஆதி வராகர் தேவியுடன் கோவிலுக்கு வெளியே மின்விளக்கு அலங் காரத்தில் சேவை சாதிக்கிறார்.
தினசரி காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை யிலும்; மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
சென்னை அடையாரிலிருந்து எண். 588, தியாகராய நகரிலிருந்து எண். 599, ஜி19, பிராட்வே யிலிருந்து எண். பிபி19, கோயம் பேட்டிலிருந்து தடம் எண்கள். 118, 118சி, 188டி, 188கே உள்ளிட்ட பேருந்துகள் திருவிடந்தை செல்கின்றனர்.
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!