பார்த்தன் - அருச்சுனன்
புள் - பறவை
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
செங்கயல் - கொழுத்த மீன்கள்
குருந்து - குருந்த மரம் ;
ஒசித்த – ஒடித்த
கொங்கு - வாசனை
அலர்ந்த - வளமான , மலர்ந்த
தடங்கடல் – பெரிய கடல்.
எந்தை – என்தந்தை
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
தெள்ளியார் - தெளிந்த அறிவுடையவர்
புராணம் - பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவன் பரம் பொருள்
பிரான் - தலைவன், கடவுள்; சிவன்; திருமால்
வெள்ளி - வான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம்.நம் பூமியில் தெரியக்கூடியது,
இரங்கு - தயை செய்; இரக்கம் கொள்; அழு; வருந்து பரிதவி;
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன் என்ற பொருளை தரும்.
நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
நின்மலம் _ மாசின்மை.
நின்மலன் _ கடவுள் :.
நின்மலன் _ கடவுள் :.
நேமியான் - சக்கரத்தை கையிலே கொண்டிருப்பவன்
வீழ - விழ
கன்றுதல் - முதிர்தல், அடிபடுதல், குறைதல், சினக் குறிப்புக் காண்பித்தல்,
கடிது - விரைவாக
ஆநிரை – பசுக்கூட்டம்
இடர் – துன்பம்
பார்த்தன் (அர்ச்சுனன்)
பயன்பாடு பாரதம், பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.
பரஞ்சுடர் - ஒப்பற்ற ஒளியுடைய முழு முதற்கடவுள்
ஆயர் - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
பாடி – ஊர்
குரவை = கைகோத்தாடுதல்
கோவலன் – இனங்காப்பார்
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
ஏத்து – போற்று
மேவி - பரவி - அல்லது கலந்து
தடம் – குளம், பாதை
தீர்த்தம் - புனித நீர்
அவுணர் – அசுரர்
மாணி - திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும்
இரந்து - கெஞ்சி; மன்றாடு.வண் கை - ஈகை, கொடை பொருள் உதவி
ஒண் - ஒண்ணு .பொருந்து
எண் - எண்ணம், எட்டு, எண்ணற்ற
திண் - திடமான
ஆலிலை - ஆலமரத்து இலை
மதி - நிலா
திறல் - வலிமை.
உரம் - மார்பு
உகிர் – நகம்
ஒள் ஒளி
எயிற்று - பல்,
அரி – சிம்மம்
ஆய - ஆகிய
பார் - நிலம், உலகம்
பிறப்பிலி - பிறப்பில்லாதவன்
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
வார் - ஊற்றுதல் நீண்ட
நீள் - நீளமான
விசும்பு - வானம்
சோர் - சோரென்னேவல் : சோர்வு : வஞ்சகம்
மாமுகில் - பெரிய மேகங்கள்
தோய் - படிதல், நனைதல்
சேர் - ஒன்றோடு ஒன்று இணையும் செயல்
பொழில் – மழைக்காடு, சோலை, மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்
எழில் - அழகான
வார் பொழில் – நீண்ட சோலை
தோய்தர - பொருந்த
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வம்பு - மணம்
மலி - மிகுந்த
மடம் - இளமையுமுடைய,
மங்கை – பெண்
கொம்பின்- பூங்கொம்பு
இதணம் – பரண்
புனம் – காடு , வயல்
கொழுநன் - கணவன்
அம்பரம் - வானம்
அனல் - தீ
கால் - காற்று
சலம் - நீர்
அமரர் - தேவர்
கோன் –, அரசன்
உய்ய – வாழ
நாறு - வாசம்
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
உறை = வசிக்கும் .
சங்கை - அச்சம், பயம்
தரித்து - அணிந்து
உரைக்க - சொல்லுதல் , கூற
வல்லமை - ஆற்றல், சக்தி, பெரும்வலிமை
தஞ்சம் - அடைக்கலம்
வங்கம் - மரக்கலம், மர கப்பல்
வையம் - உலகம்
செஞ்சொல் மாலை – இலக்கணசொல் , புகழ் மாலை
--------------------------------------------------------------------------------
திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் தூய தமிழின் விளக்கம்!
விரையார் - மணம் பொருந்திய
வேயேய் - மூங்கில் புதர்
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிரிந்த சோலை
நல்கி - விரும்பி
ஆள் - ஆட்சி செய்தல்
மடவார் - இளமையுடைய பெண்
நானாவித - நாலாவிதம், பல விதமான
மா – பெரிய, உயர்ந்த
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
ஆய் - அழகு, நுண்மை, சிறுமை, இடையர் குலம்
ஆட்கொண்டு - முழுமையாக எடுத்து கொண்டு
உரைக்க - சொல்லுதல் , கூற
இரந்து - கெஞ்சி; மன்றாடு
அறியேன் - அறியாது
அதிர்- ஒலி, நடுக்கம்
எய்த்து – இளைத்து
அறம் - தருமம், புண்ணியம்
தோய் - படிதல், நனைதல்
நெறியார் - நிலையினையுடையவர்
நிலம் - பூமியின் மேற்பரப்பு
அலந்த - வாடிய
அலம் - துன்பம்
துப்பு - நல்லன, உணவு
நின் - உன்
ஏத்து - போற்று, புகழ்ந்து
கிற்கின்றிலேன் - சக்தி ஒன்றும் இல்லை
செப்பு - செம்பு, தாமிரம்
ஆர் - பொருந்திய, ஒலி
திண் - திடமான
வரை - மலை
எரி - நெருப்பு
கால் - காற்று
மஞ்சு - மேகம்
ஆகாசம் - வானம், ஆகாயம்
புண் - காயம்
ஆக்கை - உடல்
எய்த்து - இளைத்து
விண் - வானம்
நீள் - நீளமான, உயர்ந்த
விரையார் - மணம் பொருந்திய
பாலகன் - கற்று குட்டி, சிறியவன், இளையவன், குழந்தை
கரி - யானை
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த சோலை
கனம் - பாரம், எடையின் அளவு, மரியாதைக்கு உரிய
நுன்னை - உன்னை
நோற்றது - தவம் செய்தது;
நோற்றேன் - தவம் செய்தேன்
இடர் - துயரம், துன்பம்,வறுமை
ஆற்று - மனசுமையை பிறரிடம் கூறி குறைத்து கொள்ளுதல்
ஆற்றார் - வலியரல்லாதவர், வறுமையுடையவர், பொறுக்க மாட்டாதவர்
ஆற்றேன் - கவலை, இழப்பு இவற்றை பொறுக்க முடியாதவன் (தாங்க முடியாதவன்)
கோல் - கொம்பு
உற்றனன் - அடைந்தான்
சோலை - குளிர்ந்த மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த இடம்
பற்றேல் - பிடித்தல், ஆதாரம், பிடிமானம்
மற்றேல் - மற்றபடி
அறியேன் - அறியாது
கல் தேன் - மலை தேன் என்றும் சொல்லலாம்
கமலச்சுனை - தாமரை குளம்
அற்றேன் - இல்லாதவன்
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
திண் - திடமான
பொழில் - சோலை, தோட்டம், மரங்களும் செடிகளும் உள்ள குளிர்ச்சியான இடம்
பரவி - சுற்றிலும், படர்தல், பரவுதல்
பண் - இசை, இசை பாட்டு
பயில்வார் - கற்பவர், படிப்பவர்
திருப்பதி கோவிந்தனுக்கு சமர்ப்பணம்!
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!
---------------------------------------------------------------------------------------------------------
ஆர் - பொருந்திய, ஒலி
திண் - திடமான
ஆகம் – உடல், மார்பு
சரம் - அம்பு ,ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக
செல உய்த்து - செல்லுமாறு அனுப்பி
மேய = பொருந்திய
இடர் - துன்பம், வருத்தம்
களை = நீக்கு
பதி - தலைவன், கணவன் அரசர்
மாள - இறக்க
புள் - பறவை, கருடன்
கொடி புள் - கருட கொடியை கொண்டவன்
திரித்தாய் - திருகாணி போல சுற்றி கொண்டே மேலே செல்வது
விலங்கல் - மலை
குடுமி - உச்சி
அலங்கல் - மாலை, பூமாலை
துளப - துளசி
நீரார் - நீர் பொருந்திய
ஏர் - அழகு
ஆலம் - ஆலமரம்
இளந்தளிர் - புதியதாக வளர்ந்திருக்கும் மென்மையான இளம் இலை
துயில் - உறங்குதல்
எந்தாய் - என் தந்தையே!
சீரார் - அழகு பொருந்திய
ஆரா அமுதே - திகட்டாத அமுதே , இனிப்பு, வீடுபேறு, நிவேதனம், அமிர்தம்
உறி - மேலிருந்து கயிற்றால் பானைகள் தொங்கும்படி இருப்பது உறி எனப்படும்
நறு - வாசனை
நெய் - உருக்கிய வெண்ணெய்
அமுது - அமுதம், சோறு, இனிப்பு, நிவேதனம், வீடுபேறு
குறள் - குள்ளன்
தோய் - படிதல், நனைதல்
சிகரம் - மலையின் உச்சி
அண்டா - தேவனே
ஆய் - அழகு
அரி – சிம்மம், பெருமாள்
பேணா - விரும்பாத போற்றாத
அவுணன் - அசுரன்
உடலம் - உடல்
சேண் - உயரம் உள்ள, ஆகாயம், தூரம்
ஆர் - பொருந்திய
கோண் - வளைந்து
நாகம் - நல்ல பாம்பு
அணை - படுக்கை, தூங்கும் இடம்
குறிக்கொள் - நினைத்து காத்தருள்
மன்னா - அரசனே
இன் - இனிய
அருள் - கருணை, இரக்கம்
மின் - மின்னல்
ஆனை - யானை
அப்பன் - அப்பா
மடம் - இளமையுமுடைய,
நோக்கி - ஒருவரை குறிக்கோளாக கொண்டு
திறத்து - தம் வலிமையினால்
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
விடை - ஆண் விலங்கு, எருது
செற்ற - அழித்த
அணி - உடுத்துவது
வரை - மலை
கோன் –, அரசன்
சேயன் - தொலைவில் உள்ளான்
அணியன் - அண்மையில் உள்ளான்
வாள் - ஒளி, கத்தி
தரளம் - முத்து
வேய் - மூங்கில்
விண்டு - நீங்கி
ஆயன் - இடையன் , ஆடு மாடு மேய்ப்பவன், கண்ணன்
மன்னி - நீக்கமற எங்கும் நிறைந்து
நந்தாத – கெடாத, அணையாத
சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி
வில்லார் - வில்லை உடையவர், வேடர்கள்
ஆர் – பொருந்திய
மலி = மிகுந்த
மல்லார் - வலிமை பொருந்திய
திரள் தோள் - திரண்ட தோள், பெருத்த தோள்
சிந்தை - மனதில், மன உணர்வு
உவந்து - விரும்பி
மாதவம் - உயர்ந்த or சிறந்த தவம் செய்தவர்கள்
உறை - தங்குதல், வாழ்தல்
கானவர் - வேடர்கள், முல்லை மருத, பாலை நிலா மக்கள்
இடு அகராதி
அகில் -,மலை வேம்பு, வேப்பமரத்தை போன்ற ஒரு மரம், நச்சு தன்மை வாய்ந்தது
கார் - கருமை, மேகம்
ஓங்கு - உயரமான, உயர்வான நிலை, ஒசத்தி
மேவி - பரவி - அல்லது கலந்து
மாண் - இறைவன்,. மாண்புமிகு, மேன்மை
குறள் - குள்ளம், வாமன பெருமாள்
அந்தணர் - அறிவு பண்பு முதலியவற்றில் சிறந்தவர் , மிகவும் நல்லவர், பிராமணர்
பூண்டாயே - ஏற்றாயே,மேற்கொண்டாயே
செம்-அழகிய
உறவு - பிறந்த குழந்தை மற்றும் திருமணத்தால் வரும் சொந்தங்கள்
சுற்றம் - சொந்தம்
உகந்து - விரும்பி
மண் - நிலம்
மிசை - மேல்
குறவர் மாதர் - ஊர் ஊராக சென்று வாழும் ஓர் இனத்தை சேர்ந்த பெண்கள்
குறிஞ்சி - மலையும் மலையை சார்ந்த இடமும்
மருள் - தெளிவில்லாமல் குழம்புதல், அச்சம்
அறவன் - பெரியவன்,இறைவன்,அறம் செய்வதை தொழிலாக உடையவர்
நாயகன் - தலைவன், கதாநாயகன், ஹீரோ
இண்டை - மாலை வகை, கொடி வகை
ஏத்து – போற்று, புகழ்ந்து
மீமிசை - மிக்கது, மேலிடத்தில்
அண்டம் - பிரபஞ்சம், பூமி, உலகம்
பாவியாது - தீமை எது
பண்டு - பழமை
தொண்டு - சேவகம்
விசும்பு - வானம்
எந்தை - என் தந்தை
கோவி - கோபியர், ஆயர்பாடி வசிக்கும் பெண்கள்
கொண்டல் - மேகம், மழை
உந்து - தள்ளு
உயர் – உயர்ந்த, மேலோங்கிய
ஆவி - உயிர், ஆன்மா
பொங்கு - நுரைத்து மேலோங்கிய
பிண்டி - அசோக மரம்
பள்ளி - படுத்தல், சமணர் படுக்கும் குகைகள்
உறை - வசிக்கும்
நோன்பு - உணவை குறைத்து கொண்டோ அல்லது எளிய உணவை சாப்பிட்டு இறைவனை நினைத்து செய்யும் விரதம்,
தானவர் - அசுரர்
அம்கண் - அழகான கண்
துவரி - காவி நிறம்
மட்டையர் - மொட்டை அடித்த புத்தர்கள்
சமண் - சமண மதம்
மண்டி - உணவுகளை மொத்த அளவில் விற்பனை செய்யும் இடம்
தமர் - சுற்றத்தார்
கணம் - மொத்தமாக வந்து சேரும்
கண் - பெருமை
ஆர் - வாய்ந்த, நிறைந்த, பொருந்திய
கவரி - மயிர்
மா - விலங்கு, மாடு, மான்
அமரர் - தேவர், மரணம் இல்லாதவர்
தருக்கு - கர்வம்
திரள் - உருண்டை ,கூட்டம், சதைபற்றுடன் குண்டாக காணப்படுதல்,
தண் - குளிர்ந்த
மிடற்றிடை - கழுத்து, தொண்டை வரை
நெருக்கு - அழுத்து
அலக்கண் - துன்பம்
மருள் - மயக்க உணர்வு , அச்சம், தெளிவில்லாமல் குழம்புவது
அருக்கன் - சூரியன்
சேயன் - தொலைவில் உள்ளான்
அணியன் - அண்மையில் உள்ளான்
வேய் - மூங்கில்
வெண் - வெண்மை, வெள்ளை நிறம்
சொரியும் – உதிரும்,விழுதல், பொழிதல், கொட்டுதல்
ஆயர் - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
உரைத்து - கூறுதல், தெரிவித்தல்
துணிந்து - , பயமில்லாமல், தைரியம்
எத்தி - போற்றி, புகழ்ந்து
காண்கிலார் - காண இயலார்
ஈசன் - சிவன் ,கடவுள், இறைவன், தலைவன்
கோன் - அரசன்
ஆடு - அங்குமிங்கும் அசைதல்
கூத்தன் - நடனம் செய்பவன்
மின் - மின்னல்
மா - பெரிய
முகில் - மேகம்
மேவு - பரவிய
தண் - குளிர்ந்த
அன்னம் - அன்ன பறவை
கன்னி - அழியாதது
மதில் - சுற்று சுவர்
கலியன் - போர்வீரன்
கலிகன்றி - திருமங்கை ஆழ்வார், கலியைக் கெட்டுவிடச் செய்பவன்
இன் - இனிய
மன்னு - சிறந்த
வல்லார் அகராதி
வான் - வானம்
மடவார் - இளமையுடைய பெண்
வேய் – மூங்கில்
தையலாள் - பெண்
தானவன் - அசுரன்
வாள் - ஒளி, கத்தி
பொய் இலாத - உண்மையான
முடிகள் - தலைகள்
வெம் - கொடிய
செஞ்சரம் எய்த - சிவந்த அம்பு விட்ட
எந்தை - என் தந்தை
தூது - செய்தி தெரிவிக்கும் பணி
மன் - சிறந்த
வாளி - அம்பு
வானரம் - குரங்கு, அனுமன், ஆஞ்சநேயர்
மொழிந்து - கூறியது
மாள - இறக்க
முனிந்து – சினந்து , வெறுத்து
பெருநிலத்தார் - அதிகமான நிலம் உடைய பணக்காரன், துரியோதனன்
இன்னார் - தன்னை யாரென்று அறிமுகபடுத்தி கொள்ளுதல்
பந்து அணைந்த - பந்தை தழுவிய (போல)
மெல் - மிருதுவான, மென்மையான, மெல்லிய
பாவை - பெண்
வெந்திறல் - கொடிய திறமை
ஏறு - ஆண் எருது
வேந்தன் - அரசன், மன்னன்
விரி புகழ் - பெரும் புகழ்
பண்டு - வெகு காலம் முன்பு, மிகவும் பழமை வாய்ந்த
ஆல் - ஆலமரம்
சால - மிகவும்,ரொம்ப
நாளும் - நாட்களாக
பள்ளி - படுத்து
எண்ணில் - எண்ணற்ற
ஆர் – பொருந்திய, ஒலி
நெய்தல் - நீரில் பூக்கும் வெள்ளை, நீல நிற லில்லி மலர்கள் உள்ள இடம் (ஆம்பல்)
தண் - குளிர்ந்த
கழனி - வயல் வெளி
ஏல - பொருந்த, இயல
நாறும் - நல்ல மணமிக்க
பைம் - பசுமை
புறவு - காடு, முல்லை நிலம், பயிர்கள் வளர்ந்த நிலம்,
சோத்தம் - வணக்கம்
மிண்டி - வலிமை
ஆத்தன் - விருப்பமானவன்
செங்கண் - சிவந்த கண்கள்
முக்கண் - சிவபெருமான்
நம்பி - இறைவன், நம்ப தகுந்தவர்
திங்கள் - நிலவு
அப்பு - நீர், அப்பா, அன்பாக கூறுவது
வான் - வானம்
எரி - நெருப்பு
கால் - காற்று
திசைமுகனார் - பிரம்மன், நான்கு முகங்களை கொண்டவர்
அப்பன் - தந்தை
சாமி - பொன் , சாமவேதம், இறைவன்
தொங்கல் - பூமாலை
நீள் - நீளமான
சூழ் - சுற்றி
கழல் - பாதம், திருவடி
சூட - அணிந்த
முனிவன் - இறைவன்
மூர்த்தி மூவர் - பிரம்மன், சிவன், திருமால்
அண்ணல் - வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர், தலைவன்
புண்ணியன் - நற்செயல்களை செய்பவன்
கோன் - அரசன்
தனியன் - தனி ஒருவன், ஒப்பில்லாதவன் தனக்கு இணையாக யாரும் இல்லாதவன்
சேயன் - அறிய முடியாதவன், முருகன்
பந்து - பூவை சுற்றி விட்டு இருப்பது, உருண்டை வடிவம்
பனிமலர் - குளிர்ந்த இடத்தில பூக்கும் மலர், தாமரை
அந்தரம் - நடுவெளி, ஆகாயம்
நாயகன் - தலைவன்
இண்டை - மாலை
ஏத்த - போற்ற
கலியன் - போர்வீரன்
சீர் - அழகு, நேர்த்தி,செய்யுளில் ஒரு வகை வரிசை
தண் - குளிர்ந்த
செய் - செய்த
அண்டம் - உலகம்
அன்றேல் - இல்லை என்றால் , வேண்டாம் என்றால்
அமரர் - வானோர் தேவர்
---------------------------------------------------------------------------------
கஞ்சன் - கம்சன்
பெரு - அதிக அளவில்
மல்லர் - வலிமை மிகுந்தவர்கள்
வேழம் - யானை
வீழ - விழ
செற்றவன் - அழித்தவன்
உறு - மிக்க
துயர் - துன்பம்
தேவை - அவசியம்
களை - நீக்குதல்
பற்றலர் - பகைவர்
வீய - இறக்க
கோல் - அம்பு, கொம்பு சாட்டை
சிற்றவை - சின்னம்மா, சித்தி
பணி - கட்டளை, அதிகாரம் (இவற்றுக்கு) கீழ்படிதல்
முடி - அரச பதவி ஏற்றிருப்பதை காண்பிக்கும் கிரீடம், முடி சூட்டிய மன்னன்
துரந்தான் - விட்டு விலகினான், ஏற்காமல் விட்டான்
வேதம் - அறிதல்
விழுமிய - சிறந்த, உயர்வான
கோது - குற்றம்
இன் - இனிமையான
கனி - பழம்
களிறு - யானை
குவலயம் - பூமி
தொழுகை - வழிபாடு, ஆராதனை
ஏத்தும் - போற்றும்
ஆதியை - முதன்மையானவன், பரம்பொருள் இறைவன்
அமுது - அமிர்தம்
ஆள் - ,ஆட்சி, அடிமை
அப்பன் - தந்தை, அப்பா, இறைவன்
ஒப்பவர் - தனக்கு இணையானவர்
மாதர் - பெண்
மாடம் - திண்ணை
மா – பெரிய
வஞ்சனை - சூழ்ச்சிகாரி
தாய் - அம்மா
பேய் - பூதனை என்னும் பேய்
உரு - உருவம்
நஞ்சு - விஷம்
அமர் - தடவிய, சேர்தல்
ஊடு - வழியாக, நடு
செக - ஒழிய
நாதன் - இறவன்
தானவர் - அரக்கர்
கூற்று - யமன்
விஞ்சு - மேலோங்கிய
சாரணர் - முனிவர்
வியந்து - அதிசயித்து, ஆச்சர்யபட்டு
துதி - வணக்கம், வழிபடுதல்
அஞ்சுவை - இனிய சுவை, அழகான சுவை
எழில் - அழகு
விழ - விழா
பழ நடை - பழைய நடைமுறைப்படி
மந்திர விதி - மந்திரங்கள் சொல்லி நியமனபடி
பூசனை - பூஜை
தளர்ந்து - துன்பப்பட்டு
ஆயர் - பசு மேய்ப்பவர், இடையர்
எந்தம்மோடு - நாங்களும்
இன ஆநிரை - கூட்டம் கூட்டமாக பசுக்களின் திரளும்
அந்தம் இல் - அளவில்லாத (மிக பெரிய)
வரையால் - கோவர்த்தன மலையால்
இன் துணை - இனிய துணை
பதுமத்து - பத்மம், தாமரை
அலர் - மலர்
நல் புவி - நல்ல பூமி , பூமாதேவி
பாவை - பெண்
வன் துணை - என்றுமே விட்டு நீங்காத துணை
வாய் உரை இயங்கும் - வாய் வார்த்தை சொல்ல சென்றவன்
எந்தை தந்தை - என் அப்பாவுக்கும் அப்பா (தாத்தா)
தம்மான் – தலைவன்
ஓதி - கல்வி கற்பவன்
ஒள்ளிய - ஒளியுடைய
போதம் - ஞானம், அறிவு
ஆங்கு - அந்த இடத்தில
இலன் - இல்லை
பொறுப்பு - கடமை
வெகுண்டு - சீறி கொண்டு கோபமாக
புடைப்ப - அடிக்க
பிறை - கூர்மையான வளைந்த
எயிற்று - பல்
பேழ் - பெரிய
தெள்ளிய - தெளிந்த, சுத்தமான, தூய்மையான
அமர் - இரு, உட்கார்
பொய்கை - நீர் நிலை, குளம்
கொய்வான் - பூவை பறிப்பான்
வேட்கை - விருப்பம், ஆசை
இழிந்த - தாழ்ந்த
கான் - காடு
வேழம் - யானை
கரா - முதலை
கதுவ - கவ்வ
புள் - கருட பறவை
ஆழி - சக்கரம்
மன்னு - சிறந்த
வாவி - நீர் நிலை, கிணறு
மதிள் - சுற்று சுவர்
தென்னன் - பாண்டிய மன்னன்
கன்னி - புதுமை
காமரு - அழகு பெற்ற
சீர் - செய்யுளில் ஒரு வகை
-------------------------------------------------------------
இரும்பொழில் = பெரிய சோலைகள் ;
மறையோர் = அந்தணர் ;
இயலும் = போன்ற ;
கவாடம் = கதவு
அரியன் - அருமையானவன், தலைவன்
மூண்டு - பற்றுதல்
அழல் - நெருப்பு
முனிந்து - சீறி
பொறை - பாரம்
அடல் - வெற்றி,வலிமை
அலம் - கலப்பை
சுரி - முறுக்கலான
புலம் - ஐம்புலன்
வடம்புனை - நகைகளை அணிந்த
பசுலோன் - சூரியன்
அமரில் - போரில்
அடு = நெருங்கு
மால் - பெரிய
ஆர - நிறைய , மிக
குவடு - மலை
வரம்பு - எல்லை, கரை
படை - போர் வீரர்கள்
கதிர் - ஒளி, சூரியன்
உருவ - முழுதும், நன்றாக
பாங்கு - பக்குவம்
மால் - மயங்கு
ஆராது - போதாது
அரையன் - அரசன்
புகர் - ஒளி
பாழ் - வீண்
பகராத - எடுத்து சொல்லாத
பீலி - மயில் தோகை
நிச்சம் - நிச்சயம், ஒவ்வொரு நாளும்
பிச்சம் - இறகு
நச்சி - பக்தி
பீலி - தோகை, மயில்
வம்மின் = வாருங்கள்;
ஏனம் = பன்றி,
விண்டு = மலர்ந்து,
விரை = மணம்
வினை - தீமை, முற்பிறவியில் செய்த செயல்
உய்வு - பிழைக்க
அறை - ஒலிக்கின்ற, மொய்க்கின்ற
நைந்து - வருந்தி , நொந்து, அழுகி போதல்
உழல் - அவதிபடுதல்
சோர = வழிய;
தறை = மண்;
நமர் = நம்மவர்
கடம் - யானை கூட்டம்
களி - மதம்
மேவி - பரவிய
களி - களித்த
இலங்கு - பிரகாசமான
கொடு - வளைந்த
ஆயது - ஆயிற்று
பவளம் - சிவப்பு கலருடைய விலை உயர்ந்த பொருள்
சீரான் - பெருமையானவன்
தீம் - இனிய, இனிப்பான
ஏற்றினை - வீரனை
புணர் - ஒன்றோடொன்று இணைந்த
இற - முறிந்து விழும்படி (இறக்கும் படி)
கார் - கரிய, அழகான
கடிந்த - அழித்த
பரி - குதிரை
கீண்ட - பிளந்த
அவத்தம் - அபத்தம் : பயனற்றது
பூண்டு - ஏற்று கொண்டு
கணம் - கூட்டம்
அத்தம் - கை
நித்திலம் - முத்து
தொத்தினை - கொத்தினை, குவியல்
ஏறு – சிங்கம்
வித்தகன் - மாயக்காரன்
மீ - மேலே, ஆகாயம், மேன்மை
தடம் - பாதை
விடம் – விஷம்
கடு நடை - வேகமான நடை
கடி – மணம்
நெறி – முறை
பிணை - பெண் மான், இணைப்பு, பிணைப்பு, ஆசை, பூமாலை
மருப்பு - யானை தந்தம், விலங்கின் கொம்பு
நோக்கின் – பார்வையின்
திரி சகடம் - உருளுகின்ற சக்கரம்
காய்ந்து - சீறி
அன்ன - போன்ற
மால் - பெரிய
பாறி பாறி. -. அடியோடு அழிந்து
தடங்கடல் – பெரிய கடல்
கிளர் - உணர்ச்சி பெருக்கோடு
பொறி - கருவி
மறி - மான்
படர் - ஓடுதல் செய்
எயிறு - யானை தந்தம்
ஏனம்=பன்றி;
மருப்பு=கொம்பு
பிறைக் கொழுந்து= பிறைச் சந்திரன்;
மதி=நிலவு/அறிவு;
அரா=அரவு ( பாம்பு)
இரு நிலம் – பெரும்பூமி
பூண் - நகை
ஊண் - உணவு
உள்ளு - நினைவில் கொள்
அரவிந்தம் - தாமரை
அடல் - வலிமை
வார் புனல் - ஒழுகும் நீர் , மிகுந்த நீர்
தாளாளர் - நிர்வகிப்பவர்
வழங்கைவாய் - வலது திருகையாலே
திடம் - உறுதி
அரிய - களைய
மருவு. -. பொருந்திய
கிழத்தி - தலைவி
முந்நீர் - கடல்
விண்டார் – பகைவர்
மெல் - மெல்லிய
மல் - வலிமை
அகலம் - மார்பு
அழல் - நெருப்பு
வெம்சமத்து - பயங்கரமான போரில்
மெல்லியலார்- மகளிர்
நச்சி – விரும்பி
விச்சை – கல்வி
புழை - துளை
நான்று - தொங்கி
ஒசிந்து - தளர்ந்து
மல்லை - வளம் , பெருமை
வன் - கொடிய
பகடு - எருது
கழு - அழகு
பிஞ்ஞகன் - சிவபிரான்
இடுகாடு - சுடுகாடு
இணங்கு - ஒத்து போதல்
மறுகு – வீதி
வடி – கூர்மை
திவளும். -. படிகின்ற
அரிவை - இருபது இருபத்தைந்து வயது பெண்
குவளை - கரு நீல நிற பூ
நயந்து – விரும்பி
திவள் அம் மாளிகை - ஒளி வீசுகின்ற
துளம் - மாதுளம்
முறுவல் - புன்னகை
குழல் - கூந்தல்
முந்நீர் - கடல்
போந்து - வருவது
பொரு கடல் - அலையால் கரையைத் தாக்குகின்ற கடல்
மாந்தளிர் - புதிததாக இருக்கும் மென்மையான இலை
இறை - சிறிதும்
ஏந்திழை - அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்
சாந்தம் - அமைதி, பொறுமை
பூண்-நகை
சாந்தம்=சந்தனம்
மாந்தளிர் -மாநிறம்.
சாபல்யம் – பிறவிப்பேறு
ஊழி - யுகம். நீண்ட காலம்
நாழிகை – 24 நிமிடம்
ஒண் - ஒளி
ஆழி - கடல்
துயில் - உறங்குதல்
ஒது - வாய் வார்த்தை கூறுதல்
கையறவு – வருத்தம், செயலற்ற நிலை,
கயல் - கெண்டை மீன்
பேதை - பெண் . உலக விஷயம் அறியாதவள்
பிள்ளைமை - அறியாமை
வள்ளி - கோடி
நுண் - மிக சிறிய
மருங்குல் - இடுப்பு
ஏதலர் - பகைவர்
நுடங்கு - வளைந்து
எயில் - கோட்டை சுவர், மதில்
வாள் - கொடிய
வன் - கொடிய
கனிந்து - பழுத்த, முழு வளர்ச்சியடைந்த
பிதற்று - உளறு
வெருவு – அச்சம்
முறுவல் - புன்னகை
காரிகை - அழகு
அவலம் - துன்பம் , பலவீனம்
கெழு - நிறம், பிரகாசமான, ஒத்த,கொண்ட என்றும் தேவைபட்டால்
ஆம்பல் - அல்லிமலர், மூங்கில், இசை குழல்
புலம் - பக்கம்
குலம் - ஒரு பகுதி
புலம் - வயல்
பொரு - பொருந்து
குலாம் - போல உள்ள, நிறம்
பயலை - பசலை, காதல் காம நோயால் ஏற்படும் உடல் நிற மாற்றம்
ஆதரம் - அன்பு, ஆசை, மதிப்பு
அணங்கு - தெய்வமகள், அச்சம், வருத்தி கொள்ளும் தெய்வம் போன்ற பெண், காதல் மயக்கமுற்ற பெண்
வனம் - அழகு
குறிப்பு – திருவுள்ளம்
மன்னு - சிறந்த
மானம் - வலிமை, மதிப்பு, பெருமை
பன்னினார் - சொன்னார், ஆராய்ந்தார்
பனுவல் - நூல்
ஒலி - பாடலை வெளியிடுதல்
இன் - இனிய
வினை - முற்பிறவியில் செய்த செயல், தீய, தீமை
அயன் - பிரம்மன்
மிசை - மேல்
முரி - வளைவு
முரி என்பதற்குச் சிதறிய என்றும், ஒளிவிடு மென்றும் உரைத்தலுமாம்.
திரை - அலை
அன, அன்ன - போன்ற, ஒப்பான
கேசரம் - அப்பிரகம் : சிங்கம் : பூங்கூந்தல்
ஆர்கொல் - தாங்கள் யாரோ (இதில் கொல் என்பது ஐய சொல்)
மலர்மிசை – தாமரை
வாளி - அம்பு
திண் - திடமான, உறுதியான, கனமான
சிலை - வில்
சங்கம் - சங்கு
உம்பர் - மோட்சம், தேவலோகம் அல்லது மேலுலகம்
ஆழி - சக்கரம்
கேடகம் - பாதுகாப்பு தட்டு வடிவ ஆயுதம்
ஒண் = ஒளி பொருந்திய
வெம்பு - கொதித்தெழு
அடல் - வலிமை
வேழம் - யானை
மருப்பு - கொம்பு
அம்புதம் - மேகம்
மஞ்சு - மேகம்
மணி - ஒளி வீசும் வைரம் போன்ற கல்
வெம் அகராதி
வெஞ்சுடர் - சூரியன், மிகுந்த வெப்பம்
சங்கு - வளையல்
நிறைவு - கற்பு, முழுமை, சிறப்பு தன்மை
கருங்கடல் - நீர்நிறைவாற் கரிய தோற்றத்தையுடைய கடல்
அங்ஙனம் - அவ்விதம், அப்படி
அவிழ் - மலர், உதிர்தல், திறக்க செய்
புனைந்த - அணிந்த
1 comment:
மிக்க நன்று.
Post a Comment