துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!
பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.
சனி, 30 ஜனவரி, 2016
சனி, 9 ஜனவரி, 2016
வெள்ளி, 8 ஜனவரி, 2016
திருப்பதி மலை மேல் இருப்பவனே!!!

திருப்பதி மலை மேல் இருப்பவனே
தீராத வினையெல்லாம் தீர்ப்பவனே
ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
உளமாம் கோவிலில் இருப்பவனே
உலகோரை வாழ்விக்க வந்தவனே
சங்கடம் தவிர்த்திடும் கோவிந்தா
வேங்கட ரமணா கோவிந்தா
ஏழு மலை மேல் இருப்பவனே
எல்லா வினைகளையும் தீர்ப்பவனே
ஏகாந்த வாசா கோவிந்தா
பக்தரின் நேசா கோவிந்தாவியாழன், 7 ஜனவரி, 2016
புதன், 6 ஜனவரி, 2016
செவ்வாய், 5 ஜனவரி, 2016
நரசிம்மா நரசிம்மா ஓங்கார நரசிம்மா!!
நரசிம்மா நரசிம்மா ஓங்கார நரசிம்மா
ஓங்கார நரசிம்மா ரீங்கார பரப்ரம்மா
பக்த ரட்சகா நரசிம்மா
பரப்ரம்ம ரூபா நரசிம்மா (நரசிம்மா)
பாதம் பணிகிறேன் நரசிம்மா இந்தப்
பாவி என்னை காப்பாய் நரசிம்மா
கதறி அழுகிறேன் நரசிம்மா
கவலைகள் தீர்த்திடுவாய் நரசிம்மா (நரசிம்மா)
என்னை ஆளும் கண்ணனே
நரசிம்மா
எந்நாளும் அருள்வாய் நரசிம்மா
அமிர்தவல்லி நாயகனே நரசிம்மா
அச்சமெல்லாம் தீர்த்திடுவாய் நரசிம்மா (நரசிம்மா)
கடிகை மலை மீதமர்ந்த
நரசிம்மா
கண் திறந்து பாராயோ நரசிம்மா
உன்னை விட்டால் கதியில்லை நரசிம்மா
உன் பாதம் சரணடைந்தேன் நரசிம்மா (நரசிம்மா)
திங்கள், 4 ஜனவரி, 2016
நரசிம்மா நரசிம்மா நரசிம்மா என்போம்!!
நரசிம்மா நரசிம்மா நரசிம்மா என்போம்
நன்மை தரும் நாமமதே நரசிம்மா என்போம்
வரம் அருளும் நலம் அருளும் வைஷ்ணவத்தின் நாமம்
வல்லமையும் செல்வாக்கும் வழங்குகின்ற நாமம் (நரசிம்மா)
இரவு பகல் உடனிருந்து உதவுகின்ற நாமம்
இதயத்திலே கோயில் கொண்டு எழுந்தருளும் நாமம் (நரசிம்மா)
பரந்தாமன் என்று உலகில் பரந்திருக்கும் நாமம்
பக்தரிடம் பரிவு கொண்ட பரம்பொருளின் நாமம் (நரசிம்மா)
நிரந்தரமாய் நெஞ்சினிலே நிலைத்து நிற்கும் நாமம்
நிம்மதியும் நிர்மலமும் வழங்குகின்ற நாமம் (நரசிம்மா)
கரம் குவித்து வணங்கிடுவோர் களிப்படையும் நாமம்
கடிகையிலே கோவில் கொண்ட கருணை மிக்க நாமம் (நரசிம்மா)
சரணமென்று தாள் பணிந்தால் மணமகிழும் நாமம்
சந்தோஷ வாழ்வு தரும் சக்ரதாரி நாமம் (நரசிம்மா)
நரசிம்மன் என்று உலகில் புகழ் படைத்த நாமம்
நம்பினோரை கைவிடாத நாராயணின் நாமம் (நரசிம்மா)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)