பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

வியாழன், 8 ஜூலை, 2010

தேனை ஆரா அமுதை அனுபவிக்க!

திருமங்கை ஆழ்வார்


ஆழ்வார்களின் பாசுர விளக்கங்கள் எளிமையாக இணையதளத்தில்
தெரிந்து கொள்ள இந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள்.
–
- மாதவி பந்தல் - http://madhavipanthal.blogspot.com/
- நான்காயிரம் அமுத திரட்டு - http://aazhvarmozhi.blogspot.com/
-

உதாரணத்திற்கு திருமங்கை ஆழ்வாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் பாடிய சில
பாசுரங்களையும் காணலாம்




திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது. நள வருஷத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் பிறந்ததாக குறிப்புகள் உள்ளன. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலன். இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். இவருடைய வீரத்துக்குப் பரிசாக சோழ மன்னன் இவரைத் திருமங்கை என்னும் குறுநிலத்திற்கு அரசனாக முடி சூட்டினார்.
திருமங்கை மன்னன் ஒருவிதமான 'ரிபெல்' (rebel) என்று சொல்லலாம். தமிழில் நல்ல ஈடுபாடு கொண்டிருந்தார். பெண்களிடமும் சற்று ஈடுபாடு அதிகம் உள்ளவராக இருந்தார்.


வாணிலா முறுவல், சிறுநுதல் பெருந்தோள் மாதரார்
வனமுறைப் பயனே பேணினேன்...
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்
என்று அழகான புன்னகை, சின்ன நெற்றி, பெரிய தோள்களைக் கொண்ட பெண்களைப் பேணியதற்கு நாணினேன் என்று ஒரு கன்ஃபெஷன் தொனியில் பல பாடல்கள் பாடியுள்ளார். இளம் வயதில் வாலிபமும் வீரமும் பொருந்திய இளைஞராகத் திகழ்ந்தவரின் வாழ்க்கையை ஒரு பெண் திசை திருப்பினாள். குளத்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தார். விசாரித்ததில் பெயர் குமுதவல்லி, திருவெள்ளக்குளத்தில் ஒரு வைணவ வைத்தியனின் வளர்ப்பு மகள் என்று தெரிந்தது. நீலன் இவளுடைய அழகால் கவரப்பட்டு வெள்ளக் குளத்திற்கு வந்து அவள் தந்தையிடம் ஆடை ஆபரணங்களைப் பரிசாக வைத்து இவளை எனக்குக் கட்டிக் கொடும் என்று கேட்டார்.

பெண்ணோ பிராமணப் பெண். இவர் கள்ளர் ஜாதி. இருந்தும் தந்தை, பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார். பெண்ணைக் கேட்டதில் நான் ஒரு வைணவனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று சொல்லிவிட்டாள். அவ்வளவுதானே நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று என்னை பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார். திரு வெள்ளக் குளத்துக்கு வந்து இப்போது நான் பரம வைணவனாகிவிட்டேன்; என்னை மணம் செய்வாய் என்று குமுதவல்லியிடம் கேட்க, அந்தப் பெண் இன்னொரு நிபந்தனை வைத்தாள். ஒரு வருஷம் தினம்தோறும் ஆயிரம் பேருக்கு சோறு போடச் சம்மதமா என்று கேட்டாள்.

பரகாலன் விரும்பினதை அடைந்தே தீர்பவர். பின்விளைவுகளை யோசியாமல் அதற்கும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடைபெற்றது. தினம் ஆயிரம் பேருக்கு சோறு போடும் செலவை சமாளிப்பது ஒரு குறுநில மன்னனுக்குக்கூட கஷ்டமாக இருந்தது. திருமங்கை மன்னன் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய திறையையும் செலவழித்து விட்டார். அரசன் கோபங் கொண்டு அவரைக் கைது செய்ய காவலர்களை அனுப்ப, திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு அவர்களை அடித்து விரட்டிவிட்டார். அரசனுக்கு மேலும் கோபம் மூண்டது. ஒரு சைன்யத்தையே அனுப்பி அவரைத் தோற்கடித்துச் சிறை வைத்தார். திரையைக் கொடுத்தால் சிறையில்லை என்றார். திருமங்கை மன்னன் மந்திரியை என்னுடன் காஞ்சிக்கு அனுப்புங்கள், காஞ்சியில் பொருள் கிடைக்கும் என்றார். அரசனும் தன் மந்திரியை உடன் அனுப்ப காஞ்சிபுரத்துக்கு வந்தார். வேகவதி நதிக்கரையில் அவருக்குப் புதையல் கிடைத்தது. அரசனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்துவிட்டு மிச்சமுள்ள தனத்தை அன்னதானத்துக்கு வைத்துக் கொண்டார். அரசர் இவருடைய நேர்மையை வியந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். திருமங்கை மன்னன் தன் ததியாராதனப் பணியைத் தொடர்ந்தார். மீண்டும் பணத்தட்டுப்பாடு. பரகாலன் ஒரு வினோதமான முடிவெடுத்தார். வழிப்பறி! செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்த அந்தக் காலத்து ராபின்ஹ§ட் அவர்... நான்கு தேர்ந்த கூட்டாளிகளை உடன் வைத்துக் கொண்டு வழிப்பறி செய்தார். அந்தப் பணத்தை வைத்து ஏழை வைணவர்களுக்கு சோறு போட்டார். இந்த விந்தையான பக்தனை திருமால் சந்திக்க விரும்பினார். புதுமணத் தம்பதிகள் போல வேடமிட்டுக் கொண்டு ஆடை ஆபரணங்கள் பளபளக்க திருவாலிக்கு அருகே திருமணங் கொல்லை என்னும் இடத்தில் அரசமரத்தினருகில் பதுங்கியிருந்த திருமங்கை மன்னன் முன் அவர்கள் நடந்து சென்றார்கள். இன்று நமக்கு பெரிய வேட்டை என்று அத்தம்பதியை சூழ்ந்து கொண்டு கழற்று எல்லா நகைகளையும் என்று கத்தியைக் காட்டி மிரட்டினார்.

பகவான் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தார். கால் விரலில் ஒரு ஆபரணத்தைக் கழற்ற முடியவில்லை. பரகாலன் இதையும் விடமாட்டேன் என்ற சொல்லி குனிந்து வாயால் கடித்து துண்டித்து எடுத்தார். 'சரியான கலியனப்பா நீ' என்று பகவான் அவனுக்கு கலியன் (பலமுடையவன்) என்று பெயரிட்டார். பகவானின் நகைகளை மூட்டை கட்டி வைக்க அதை எடுத்துச் செல்ல முயன்றபோது மூட்டை கனமாக இருந்தது. என்னதான் முயன்றாலும் தரையை விட்டு எடுக்க வரவில்லை.
ப
ரகாலன் 'யாரப்பா நீ மந்திரவாதியோ? என்ன மந்திரம் பண்ணி இதை இத்தனை கனமாக்கினாய், சொல்' என்று அதட்ட, நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொன்னார். ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது.

உடனே அவர் பாடிய பாசுரம்:

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களின் அடிநாதம் நாராயணன் என்னும் நாமத்தைக் கண்டு கொண்டது. தின வாழ்வில் செல்வங்களையும் சுகங்களையும் தேடி அலைந்து விட்டு உணர்வால் அந்தப் பெயரின் கடவுள் தன்மையை அறிந்துகொள்ளும் ஒரு கண்டுபிடிப்பு. வியப்பும், கடந்தகாலத் தப்புகளுக்கு வருந்துவதும் அவர் பாடல்களில் இருக்கும். அவர் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதும் தெரியும். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி என்ற பிரிவில் ஏறக்குறைய 1100 பாடல்கள் பாடியுள்ளார். இது போக திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை போன்றவைகளையும் இயற்றியுள்ளார். பின் சொன்னவை மூன்றும் பிரபந்தத்தின் இயற்பா என்னும் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட பாடல்களாயினும் யாப்பிலக்கணப்படி மூன்றையும் மூன்று பாடல்களாகக் கணக்கிடுவதுதான் சரி. இதனால் திவ்யப்பிரபந்தம் மொத்தம் நாலாயிரம் பாடல்களுக்குக் குறைவு. இருந்தாலும் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்று கூறுவதே வழக்கம். இதில் திருமங்கையாழ்வாரின் பங்கு கணிசமானது. எல்லா வகைப்பாடல்களையும் இயற்றியுள்ளார். எல்லா திவ்யதேசங்களையும் பாடியிருக்கிறார். வடநாட்டிலுள்ள திருவதரி (தேவப் பிரயாகை), திருப்பிருதி, நைமிசாரண்யம், பத்ரிகாசிரமம் இவைகளிலிருந்து துவங்கி தென்னாட்டுக் கோயில்கள் அத்தனையும் விட்டுவைக்காமல் ஊர் ஊராகச் சென்று பாடியிருக்கிறார். திருமங்கை மன்னனின் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே சில வைணவக் கோயில்களின் பழமை நமக்குத் தெரிகிறது. உதாரணம் திருவிடவெந்தை. சென்னைக்கு அருகே இருக்கும் அழகான கோயில். மகாபலிபுரம் போகும் வழியில் உள்ளது. அதைப் பாடியிருக்கிறார்


மானே கண்மடவார் மயக்கிற் பட்டு மானிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே

மான்கண் பெண்களின் மோகத்தில் நான்கு விதமான பாவங்களும் செய்தேன்.
திருமங்கையாழ்வாரின் பல பாடல்களில் இவ்வகையான பாவமன்னிப்புக் கோரும் repentant தொனியைப் பார்க்கலாம்.

வைணவக் கருத்துகளில் முக்கியமானது சரணாகதி தத்துவம். தான் செய்த தவறுகளை உணர்ந்து கடவுளிடம் சரணடைந்துவிட்டால் மன்னிப்பு கிடைக்கும் என்பதன் மறுபிரதியை மற்ற மதங்களிலும் காண்கிறோம்.

திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய்.

தந்தை தாய் மக்களே சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழியெனக் கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனான
மைந்தனர் வல்லவாழ் செல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

தந்தை, தாய், உறவினர் போன்றவரைச் சார்ந்து நிற்கும் வாழ்க்கையை நீ ஒரு பந்தமாகக் கருதினாயானால் முடிவும், முதலும்-முதலுக்கும் முதலுமான திருமாலை வல்லவாழ் கோயிலில் சென்று அடையும் வழியைப் பார் நெஞ்சே!

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும்போது உன்றன்
சரணமே சரணம் என்றிருந்தேன்.

மாமிசம் எலும்பு, உரோமம் இவைகளால் செய்யப்பட்டு ஒன்பது வாசல் வைத்த இந்தச் சரீரத்தை விட்டு உயிர் பிரியும்போது உன்னைச் சரணடைய வேண்டும் என்று இருக்கிறேன்

குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே.

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் அது
(sourch-www.desikan.com)

பெருமாள் திவ்யதேசங்கள் இணைக்கப்படவேண்டும்



திருப்பதி பெருமாள் கோவில் எந்த ஒரு குறைமின்றி சிறப்பாக செயல்படுகிறது.
அதே போல அனைத்து திவ்யதேச பெருமாள் கோவிலும் சிறப்பாக செயல்படுகிறதா என்றால்
கேள்வி குறி?

இதற்கு வழி அனைத்து திவ்யதேசங்களும் இணைக்க பட வேண்டும் . திருப்பதி கோவில் முதல் கொண்டு திவ்யதேச கோவில்களின் உண்டியல் பணம் அந்த கோவில் நிர்வாகமோ அரசோ ஏற்காமல் அவை திவ்ய தேசங்களின் பெருமாள் கோவில் பராமரிக்கவே பயன்படுத்த வேண்டும் .அதற்கென்று ஒரு திவ்யதேச குழு என்று ஆரம்பித்து அதில் மெய் அடியார்களை சேர்த்து அனைத்து திவ்யதேசமும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.

இதன் மூலம் மக்கள் செலுத்தும் பணம் பெருமாளுக்கே செலவிட படுகிறது . திவ்ய தேச பெருமாள் கோவில்களும் சிறப்பாக செயல்படும்.

வெள்ளி, 7 மே, 2010

திருமண வயது நெருங்கி விட்டதா!



திருமண வயது நெருங்கி விட்டதா!

ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்!

108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக திருமங்கை ஆழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம்!

சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருவிடந்தை ஸ்ரீ நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோவில். இது சுமார் 1200 ஆண்டுகள் பழமையானது. கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமங்கை யாழ்வார் திருவிடந்தைப் பெருமாளை போற்றிப் பாசுரங்கள் பாடி யுள்ளார். 108 திவ்ய தேசங்களில் 62-ஆவது திவ்ய தேசமாக இத்தலம் போற்றப்படுகிறது.

ஸ்ரீ நித்ய கல்யாண பெருமாள் ஸ்தல வரலாறு
சரஸ்வதி ஆற்றங்கரையில் உள்ள சம்பு என்று அழைக்கப்பட்ட தீவில் குனி என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருக்குப் பணிவிடை செய்வதற்காக கன்னிகை ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். ஒரு காலகட்டத்தில் அந்த முனிவர் வீடுபேறு அடையவே, அவரைப் போலவே வீடுபேறு அடைய அந்தக் கன்னிகை கடுந்தவம் செய்து வந்தாள். ஒரு நாள் அங்கு வந்த நாரத முனிவர் அவளிடம், "திருமணம் செய்து கொள்ளாமல் வீடுபேறு அடைய இயலாது' என்று கூறினார். எனவே பல முனிவர்களிடமும் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டினாள். எல்லாரும் மறுத்துவிட, காலவ முனிவர் அவள்மீது இரக்கம் கொண்டு அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தார்கள். முதலாவது பெண் குழந்தையின் பெயர் கோமளவல்லி. அவர்களைப் பெற்ற சிறிது காலத்தில் குழந்தைகளின் தாய் மறைந்து விட்டாள்.

360 பெண் குழந்தைகளை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார் காலவமுனிவர். காலம்தான் யாருக் காகவும் காத்திருப்பதில்லையே. பெண் குழந்தைகள் மளமளவென்று வளர்ந்து பருவமடைந்து, திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிகளானார் கள்.


இத்தனை பெண்களையும் எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று தவித்தார் காலவ முனிவர்.

சம்புத்தீவிற்கு வந்து மற்ற முனிவர்களிடம் அந்தப் பெண்களுக்கு எவ்வாறு திருமணம் செய்து வைப்பது என்று வருத்தத்துடன் ஆலோசனை கேட்டார். அவர்கள் திருவிடந்தை சென்று பெருமாளை வழிபடக் கூறினார்கள். காலவமுனிவரும் தன் பெண்களுடன் திருவிடந்தை வந்து பெருமாளை வேண்டினார். பெருமாளும் முனிவரின் வேண்டுகோளை ஏற்று, பிரம்மச் சாரியாக வந்து நாள்தோறும் முனிவருடைய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, 360-ஆம் நாள் தான் அதுவரை கல்யாணம் செய்து கொண்ட அனைத்துப் பெண்களையும் ஒருவராக்கி "அகிலவல்லி' என்னும் பெயரைச் சூட்டினார். தேவியைத் தனது இடப்பக்கத்தில் எழுந்தருள வைத்து சரம ஸ்லோகத்தை உலகத்தாருக்கு உபதேசித்து அருளினார்.

பெருமாள் தினமும் திருமணம் செய்து கொண்டதால் பெருமாள் நித்ய கல்யாணப் பெருமாள் என்றும்; இந்த தலம் "நித்ய கல்யாணபுரி' என்றும் அழைக்கப்படுகிறது.

தோரணவாயிலின் மேல்மண்டபத்தில்,ஸ்ரீஆதிவராக மூர்த்தி தேவியுடன் இருக்கும் சுதை யிலான சிற்பம் எழிலுற அமைக்கப்பட் டுள்ளது. அதை அடுத்துள்ள மண்டபத்தின் கல் தூண்களில் அழகிய புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. ஸ்ரீ மகாவிஷ்ணு, காளிங்க நர்த்தனர், நரசிம்மர் ஆகியவர்களின் சிற்பங்கள் மிக அற்புதமாக உள்ளன. அதைக் கடந்து சென்றால் இராஜகோபுரம், பலிபீடம், கொடிக் கம்பத்தைக் காணலாம்.

கருவறையில் மூலவரான ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் சுமார் ஆறரை அடி உயரமுள்ள கல் விக்ரகமாக- தேவியை மடியில் அமர்த்திக் கொண்டு அற்புதமாக வீற்றிருக்கிறார். பெருமாளின் திருவடியின்கீழ் தன் பத்தினியுடன் ஆதிசேடன் உள்ளார்.

உற்சவரான ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி ஆகியோர் பஞ்சலோக விக்ர கங்களாகக் காட்சி தருகின்றனர். ஸ்ரீ நித்ய கல்யாணப் பெருமாளின் திருமுகத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்று உள்ளது. இது இயற்கையிலேயே அமைந்ததாம். இந்த திருஷ்டிப் பொட்டையும் தனிச்சந்நிதி தாயாரான கோமள வல்லித் தாயாரின் திருமுகத்தில் இருக்கும் திருஷ்டிப் பொட்டை யும் தரிசிப்பவர்களுக்கு திருஷ்டி தோஷம் விலகும் என்கிறார்கள்.

ஆண்டாளும் எழிற்கோலத் தில் காட்சி தருகிறார். ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார் சந்நிதியும் சிறப்பாக அமைந்துள்ளது. இவர் களை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும் என்கிறார்கள்.

வைகானச ஆகம விதிகளின் படி தினமும் நான்கு கால பூஜைகள் நடத்தப் பெறுகின் றன. தல விருட்சமாக புன்னை மரமும்; தல புஷ்பமாக அரளிப் பூவின் வகையைச் சேர்ந்த கஸ்தூரியும் விளங்குகின்றன.


இங்கு சித்திரைப் பெருவிழா மிகவும் சிறப்பாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வைகாசி யில் வசந்த உற்சவமும், ஆனி மாதத்தில் கருட சேவையும், ஆடிப் பூரத்தில் சூடிக்கொடுத்த சுடர்க் கொடிக்கு திருக்கல்யாண உற்சவமும், புரட் டாசியில் நவராத்திரி உற்சவமும் விமரிசையாக நடத்தப்படுகின்றன. நவராத்திரியின் ஒன்பது நாட் களிலும் கோமளவல்லித் தாயாருக்கு வெவ்வேறு விதமாக அலங்காரங்கள் செய்யப் படுகின்றன.

பங்குனி மாத உத்திர நட்சத் திரத்தில் பெருமாளுக்கு திருக் கல்யாண உற்சவம் நடைபெறு கிறது.

உற்சவ காலங்களில் ஸ்ரீஆதி வராகர் தேவியுடன் கோவிலுக்கு வெளியே மின்விளக்கு அலங் காரத்தில் சேவை சாதிக்கிறார்.

தினசரி காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை யிலும்; மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

சென்னை அடையாரிலிருந்து எண். 588, தியாகராய நகரிலிருந்து எண். 599, ஜி19, பிராட்வே யிலிருந்து எண். பிபி19, கோயம் பேட்டிலிருந்து தடம் எண்கள். 118, 118சி, 188டி, 188கே உள்ளிட்ட பேருந்துகள் திருவிடந்தை செல்கின்றனர்.

 கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

சனி, 27 மார்ச், 2010

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் திருக்கோவில்

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் (அபிராமி) ஸ்ரீ கமலக்கண்ணியம்மன் கடைக்கண்களே!

கருவறை முன்பு ஸ்ரீ கமலக்கண்ணி அம்மனின் விஸ்வரூப தரிசனம்
(மேலும் திருக்கோவில் படங்கள் கடைசியில்)

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் திருக்கோவில்,
கலவை, ஆற்காடு மாவட்டம்,
வேலூர் - 632 506.

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் அருள் மகிமை

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் மூலவர் --நின்று கொண்டு
சாந்த சொரூபமாக காட்சி அளிக்கிறாங்க!
கருவறை முன்பு 8 திருகரங்களுடன் ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் மல்லாந்து படுத்து இருக்கும் காட்சி கண் கொள்ளா காட்சி.
ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் பெருமாளின் தங்கையாகவும்(நெய்வேத்தியமும் பெருமாளை போலவே சைவம்), சக்தியின் வடிவமாகவும், அளவற்ற சக்தியும் கருணையும் உடையவங்க! மனக்கவலை, குடும்ப கஷ்டங்கள்,உடல் நல குறைவு ,முதலான எந்த குறை என்றாலும் கோவிலில் சென்று கமலகன்னி அம்மனை தரிசித்தால் குறைகள் நீங்கும்,நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வர். & பல சிக்கல்கள்,குடும்பத்தில் குழப்பம்,பில்லி,சூனியம்,ஏவேல்,உடல் நல குறைவு முதலியவை இருப்பின் கோவிலில் சென்று கம்லக்கண்ணி அம்மனை வழிபட்டு அங்கிருக்கும் தவத்திரு சச்சிதானந்த சுவாமிகளை சந்தித்து குறைகளை வெள்ளை தாளில் எழதி தர ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் அருளால் சுவாமிகள் அக்குறைகள் நீங்கி நலம் பெரும் வழியை எழுதி கொடுப்பார். தேவைபட்டால் ஒரு சில நாட்கள் கோயிலில் தங்க சொல்வார். கோவிலில் தங்கிய ஒரு சில நாட்களில் அம்மன் அருள் நமக்கு வந்து கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்று அம்மன் குரல் கொடுக்க நம் குறைகள் அனைத்தும் நீங்கி விடும் . பிறகு எந்த நேரமும் அம்மன் நமக்கு துணை புரிந்து குறைகள் இல்லாமல் பார்த்து கொள்வார் . அங்கு சென்று அம்மன் அருள் பெற்ற பல்லாயிரகணக்கான மக்கள் வாழ்வில் குறைகள் இல்லாமல் வாழ்வில் மகிழ்ச்சியுடன் பல நன்மைகள் உண்டாவதை அறிவார்கள் .அனுபவபூர்வமான உண்மை !!! .வருடா வருடம்
ஆடி முதல் வெள்ளி கிழமை திருவிழா நடக்கும் . திருக்கோவில் புதுபிக்கும் பணி நிறைவு பெற்று 29 - 02- 2010 அன்று வெகு சிறப்பாக கும்பாபிஷேகம் நடை பெற்றது. Govinda! Govinda! Govinda!


--------------------------------------------------------------
Any body don’t know tamil please read it

Sri kamalakanniamman very powerfull amman
Any heath desease, or evil mind any problem in life, go to sri kamalakanniamman temple
Amman power will remove all problem . happy life starting )

Tavathiru Sachidaananda swamigal properly maintaining sri kamlakaniamman temple
If you have any doubt send comment . I tell you answer .

Om namo narayana
---------------------------------------------------------------------------------
திருக்கோவில் வரலாறு
அகில உலகங்களுக்கும் தாயாகி நின்று காத்து அருளுகின்ற பராசக்தியானவள் பல்வேறு திருநாமங்களோடு பல ஷேத்திரங்களில் அருள் பாலித்து வருகின்றாள். அவற்றுள் கலவை கமலக்கண்ணியம்மன் ஆலயத்துள் நின்று கமல - தாமரை)தாமரையை ஓட்ட தனது கடைக்கண் பார்வையினால் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் தருவதுடன் பக்தர்களின் குறைகளை தீர்த்தும், துஸ்த சக்திகளைப் போக்கி அருள்பவளாக விளங்குபவள், காமாட்சி பாங்கஜாட்சி மஹாகாளி என்று போற்றப்படும் ஸ்ரீ கமலக்கண்ணித் தாயாவாள். இந்த கம்லக்கண்ணி அம்மன் தேவிதான் செஞ்சிக் கோட்டையை ஆண்ட மன்னர் பரம்பரையின் குலதெய்வமாகவும் செஞ்சிக் கோட்டையைக் காத்து வருகின்ற காவல் தெய்வமாகவும் விளங்குபவள்.

பற்றற்ற யோகியாக துறவு வாழ்க்கையை மேற்கொண்டு இமயமலைச் சாரலிலும் வட இந்தியாவில் பல இடங்களிலும் பாத யாத்திரையாகச் சென்று பல தத்துவ ஞானிகளின் ஞான உபதேசங்களினால் தியானம், யோகம், இவற்றில் மேன்மையை அடைந்த சிறந்த தவயோகியாக விளங்குபவர்கள் தவத்திரு. சச்சிதானந்த சுவாமிகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். “சும்மாயிரு சொல்லற” என்ற அருணகிரியாரின் வாக்குக்கேற்ப மௌன விரதத்தை கடைபிடித்து வருகின்ற மகானாக விளங்குகின்ற சுவாமிகள் இன்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் துன்பங்களை தனது அருட்பார்வையினாலேயே போக்கி அருளும் சித்த புருஷராக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சுவாமிகள் ஏப்ரல் 6--ஆம் தேதி 1979-ஆம் ஆண்டு கலவை வந்தபோது சுவாமிகளை வரவேற்று ஆதரித்தவர்கள். முன்னாள் மணியம் R.D கிருஷ்ணஸ்வாமி முதலியார் அவர் துணைவியார் திருமதி. சரோஜாம்மாள் அம்மையார் . அப்போது அவர்கள் கலவையில் கட்டிக் கொண்டிருந்த அருள்மிகு கமலக்கண்ணி அம்மன் திருக்கோவில் திருப்பணி முடியம் தருவாயில் இருந்தது. இதன் பூர்வீக கோவில் செஞ்சி மலையில் உள்ள கோட்டையில் இருப்பதாக சொல்லி சுவாமிகளை அழைத்து போனார்கள். திருக்கோவில் ஸ்தாபகர் அமரர். R.D கிருஷ்ணஸ்வாமி முதலியார் அமரர். திருமதி .சரோஜாம்மாள் இருவரும் சுவாமிகளை தங்கள் இறுதிகாலம் வரை சுவாமிகளை கண்ணைப்போல் கவனித்து வந்தார்கள் .

செஞ்சி மலையில் கமலக்கண்ணி அம்மன் கோவில் மிகவும் சிறிய கோவில். அம்மன் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது . பூஜைகளும் , பராமரிப்பும் இல்லாமல் அம்மன் இருப்பதை அறிந்து சுவாமிகள் மனம் நெகிழ்ந்து போனார்கள். அம்மனை சுவாமிகள் தன் கரங்களால் அபிஷேகம் செய்து வழிபட்டபோது உன்னோடு வந்து விடுகிறேன் மகனே என்ற செஞ்சி கமலக்கண்ணித் தாயின் தெய்வீக அருள்வாக்கினால் ஈர்க்கபட்டு அவளது அருளானையின் வண்ணம் செஞ்சியில் இருக்கிற அம்மனைப் போலவே தான் வாழும் கலவையில்
கமலக்கண்ணியம்மனுக்கு ஆலயம் எழுப்பி உலகம் உய்ய வழிபாடு செய்து வந்தார்கள் .

கலவையில் கோவிலை சுவாமிகள் விரிவு செய்து கொண்டு போனபோதும் கோவில் அமைப்பு சுவாமிகளுக்கு மன நிறைவு தரவில்லை இரத்தினகிரி தவத்திரு . பாலமுகனடிமை சுவாமிகள் தனது 39 ஆண்டு மலைவாசத்தை முடித்து கலவைக்கு வருகை தந்த போது கோவிலை புதுபித்து கட்ட வேண்டும் என்ற தனது வேட்கையை தெரிவித்தார்கள் .

பழைய கோவிலை முழுவதும் அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய கோவிலை பொலிவுடன் நிர்மாணிக்க திருப்பணிகளை தவத்திரு. பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னின்று நடத்தினார்கள். இரத்தினகிரி சுவாமிகளின் வெகு முயற்சியாலும், சீரிய வழிக்காட்டியிலும் அடிக்கடி திருப்பணிகளை நேரில் பார்வையிட்டும் வழங்கிய ஆலோசனைகளாலும், இன்று கோவில் கம்பீரமும், கலையழகும் ததும்பி நிற்கிறது . திருப்பணிகளை பார்வையிடகலவைக்கும் , சிற்ப வேலைகளைப் பார்வையிட மகாபலிபுறத்திற்கும் சுவாமிகள் இருவரும் சலிக்காமல் பயணம் மேற்கொண்டார்கள். “இதற்கு எப்படி நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன்” என்று கலவை சுவாமிகள் அடிக்கடி நெகிழ்ந்து சொல்வார்கள் .

பழைய ஆலயத்தை புதுப்பித்து மண்டபம் பிரகாரம், கோபுரம் ,தூண்கள் இவைகளையெல்லாம் சிற்ப வேலைப்பாடுகள் மிளிர அழகுடன் அமைந்திருக்க வேண்டும் என்ற தன்னலமற்ற நோக்கத்தோடு ஆர்வத்தோடும் திருப்பணியைத் தொடங்கினார்கள் ஸ்ரீ கமலக்கண்ணிதாயின் திருவருள் துணையோடு பக்தர்களின் பாத காணிக்கைகளை கொண்டும் எண்ணியவண்ணம திருப்பணிகலை நிறைவேற்றி உள்ளார்கள்.
அழகும் பொலிவும் பெற்றுள்ள ஸ்ரீ கமலக்கன்னியாம்மன் திருகோவிலில் கருவறை வாசல் கதவு வெள்ளியிலும் முன் வாசல் கதவுகள் தஞ்சாவூர் பாணியிலும் வடிவமைக்க பட்டுள்ளது.

ஓம் நமோ நாராயணாய!

கோவிலின் முன் தோற்றம்


திருக்கோவில் வாசல்


திருக்கோவில் வாசல் கதவு


தவத்திரு சச்சிதானந்த ஸ்வாமிகள் & இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள்


மூலஸ்தானம் வெளியில் ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் தரிசனம்


பெருமாள் மகாலட்சுமி , சிவன் சக்தி , விநாயகர் , முருகர் , சரஸ்வதி , திருக்கோவில் சுவற்றில் வரிசையாக அழகாக தஞ்சாவூர் பாணியில் படங்கள்



மூலஸ்தானம்


ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் திருக்கோவில் பற்றிய உங்களது மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

குறிப்பு:

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவில் அருகிலேயே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருகோவிலும் உள்ளது.
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனும் ஸ்ரீ கமலக்கண்ணி அம்மனை போன்று மூலஸ்தானத்தில் நின்றும் , கருவறை முன்பு மல்லாந்து படுத்து கொண்டும் காட்சி தராங்க!
ஓம் நமோ நாராயணாய!

வியாழன், 4 மார்ச், 2010

Tirupathi


THIRUPATHI


உலகிலேயே ஏழுமலையான் சிலையில்தான் யோக போக முத்திரைகள் இருக்கின்றன. இவை அலர்மேல் மங்கையின் அம்சங்கள். அலர்மேல் மங்கையும், ஏழுமலையானும் சேர்ந்து ஒன்றாக திருவேங்கடமுடையான் சிலையில் இருக்கிறார்கள். ஏழுமலையான் தானே அவதரித்த தம்பிரான் - சுயம்பு. தானே விரும்பி, சில ஸாமுத்ரிகா லக்ஷணங்களோடு தோன்றியிருக்கிறார். அதே போல் இவருக்கு ஸ்தல புராணம் கிடையாது. இப்போது இருக்கிற ஸ்தல புராணங்களில் பழமையானது வேங்கடாஜல மஹாத்மியம் ஆகும். இது 1491 ஆம் ஆண்டு மஸிண்டி வேங்கடதுரைவார் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் வராக, பத்ம, கருட, ப்ரம்மாண்ட, மார்கண்டேய, பவிஷ்யோத்ர, ஸ்கந்த, ஆதித்ய, வாமன, ப்ரம்மம் ஆகிய பத்து புராணங்களிலிருந்து வேங்கடேஸர் பற்றிய செய்திகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் திருவேங்கடமுடையானைப் பற்றிய விவரங்கள் இல்லை. திருமலையில் உள்ள தீர்த்தங்கள் மற்றும் மலைகள் பற்றிய விவரம் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேங்கடமுடையான் எப்போது திருமலைக்கு வந்தார்? திருவேங்கடமுடையான் திருமலைக்கு வந்து 250 கோடி வருடங்கள் ஆகின்றன. இதன் ஆதாரம்., முதலில் அறிவியல் அடிப்படையில் ஆதாரத்தைப் பார்ப்போம். திருவேங்கடமுடையானின் கோவிலிலிருந்து, ஈஸான்ய திக்கில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சில பாறைகள் இருக்கின்றன. இந்த பாறைகளுக்கு சிலா தோரணம் என்று சொல்லுவர். உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் இருக்கின்றன. இந்த பாறைகளின் நடுவே இருக்கும் துவாரத்திலிருந்து திருவேங்கடமுடையான் வெளிப்பட்டார் என்பது ஐதீகம். இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். திருவேங்கடமுடையானின் திருமேனியும், இப்பாறைகளும் ஒரே விதமானவை. மண்ணியல் (ஜியாலஜிஸ்ட்) நிபுணர்கள் இப்பாறையை ஆய்வு செய்து, 250 கோடி ஆண்டுகள் வயது கொண்டவை என கணக்கிட்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, பச்சை கற்பூரம் திருமேனிக்கு சாற்றுகிறார்கள். காலம் காலமாக, ஹிந்து அரசர்கள் ஆண்ட காலங்களிலிருந்து இந்த பச்சை கற்பூரம் ஒரு தாவர பொருள். சுமத்ரா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது பச்சை கற்பூரன் ஒரு கெமிக்கல்; அரிப்பைக் கொடுக்கும் ஒரு அமிலம். இந்த பச்சை கற்பூர கெமிக்கலை சாதாரண பூமியிலுள்ள கருங்கல்லில் தடவினால், கல் வெடித்து விடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இந்த கெமிக்கலைத் தடவினால், அப்பாறைகள் வெடிப்பதில்லை. அதே போல் திருவேங்கடமுடையானுக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் சாற்றினாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. சிலா தோரண பாறைகளும், திருவேங்கடமுடையானின் பாறைகளும் ஒரே தன்மை கொண்டவை. மூன்றாவதாக, எந்த கருங்கல் சிலையானாலும் எங்கேயாவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும். எந்த உலோக சிலையானாலும், தங்கமாகட்டும், ஐம்பொன்னாகட்டும், உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். திருவேங்கடமுடையானின் சிலையில் எங்கும் உளி பட்ட அடையாளம் தெரியவில்லை. நான்காவதாக இவருடைய சிலை திருமேனி பளபளப்பாக இருக்கிறது. கருங்கல் சிலை மொரமொரப்பாக இருக்கும். கருங்கல்லுக்கு பாலிஷ் போடலாம். பாலிஷ் போட்டால் பள பளவென்று இருக்கும். ஆனால் அது மெஷின் பாலிஷ். மெஷின் பாலிஷ் வந்து சுமார் முப்பது வருடங்கள்தான் ஆகின்றன. தவிர மெஷின் பாலிஷ், தூண்கள், கம்பங்கள் போன்ற நேர்கோட்டுப் பொருட்களுக்குத்தான் போட முடியும்ல். நுணுக்கு வேலைப்பாடுகளுக்கு மெஷின் பாலிஷ் போட இயலாது. இவருடைய திருமேனி விக்ரஹத்தில் நெற்றிச்சுட்டி, காதணி, புருவங்கள் எல்லாம் பாலிஷ் போட்டவை போல் பள பளப்பாக இருக்கின்றன. ஐந்தாவதாக, இவருடைய திருமேனி எப்போதும் 110 பாரன் ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை மூவாயிரம் அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேஸம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அபிஷேகம் முடிந்தவுடன் அவருக்கு வியர்க்கிறது. வியாழக் கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகை மற்றும் தங்க கவசங்களை கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இந்த தகவல்களை சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பிருந்த பிரபல சான்றோர்கள், அர்ச்சகர்கள், வேங்கடபதி தீக்ஷிதர், மணப்பாக்கம் சுந்தர ஆச்சாரியர், முல்லன்றம் கனபாடிகள் போன்றோர் சொல்லியிருக்கின்றார்கள். இவர்கள் ஸ்வாமிக்கு பல வருஷங்கள் அபிஷேகம் செய்தவர்கள். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் சிவலிங்கத்திற்கு அருகில் மிகவும் குளிர்ச்சியான கற்கள் இருக்கின்றன. அவை சந்திரகாந்தக் கற்கள். அதேபோல உஷ்ணமாக திருவேங்கடமுடையான் திருமேனி இருக்கிறது. இந்த ஆதாரங்கள் எல்லாம் நேரடியாக பரிசோதித்துப் பார்க்கும்படி இருக்கின்றன. எந்த கோவிலிலும் இல்லாத சில சிறப்புகள் இந்த கோவிலில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மந்திர புஷ்பம். இதற்கு மூர்த்தி மந்திரம் என்று பெயர். விடியற்காலையில் கோவிலில் பிரதான அர்ச்சகர் இந்த மந்திரத்தை சொல்லுவார். இந்த மந்திரத்தை சொன்னால் வேங்கடமுடையான் பிரசன்னமாகி விட்டார், சபை கூடி விட்டது என்று பொருள். .............
SOURCE:-http://ramyaaraghavan.blogspot.com