நாடி நாடி நரசிங்கா!
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால் எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!
பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.
Sunday, February 23, 2025
It's me
Sunday, June 30, 2024
திருமால் விண்ணப்பம்
திருமாலிடம் விண்ணப்பம்
1. பின்னோக்கி என்னை நோக்கி அருள் செய்வோயோ? கள்ள மாயனே
நான் எந்த அவதாரமும் இல்லை
சாதாரண மானிடன் உன் மேல் பரம பக்தி ,உன்னையே நினைக்கும் பாக்கியம் அருள் புரிய வேண்டுகிறேன் கள்ள மாதவா திருவள்ளூர் வைத்திய வீர் ராகவா ராகவா ராகவா
2. கோவிந்தா என்று சொன்னால் தூக்கம் வருது கள்ள மாயனே
நான் எந்த அவதாரமும் இல்லை
சாதாரண மானிடன் உன் மேல் எந்த உபாயமும் இல்லாமல் தூய அன்பு பாசம் நம்பிக்கை பரம பக்தி அருள்.புரிய வேண்டுகிறேன் கள்ள மாதவா திரு நின்றவூர் பக்தவத்சலா பக்தவத்சலா பக்தவத்சலா
3. சிறிய உடல் அவதி சிக்கினால் கூட சோம்பல் வருது கள்ள மாதவா
நான் எந்த அவதாரமும் இல்லை
சாதாரண மானிடன் உன் மேல் பக்த பிரகலாதனை போல தூய பக்தி அருள் புரிய வேண்டுகிறேன் கள்ள மாதவா சோளிங்கர்.நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
4. உன்னை நினைக்காத காலங்கள் நேரங்கள் வீணே கள்ளமாதவா
நான் எந்த அவதாரமும் இல்லை
சாதாரண மானிடன் உன் மேல் அனுமனை போல தூய பக்தி வேண்டுகிறேன் இது பேராசையோ? அருள் புரிய வேண்டுகிறேன் கள்ள மாதவா திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பார்த்தசாரதி பார்த்தசாரதி
5.